திருமறை குர்ஆன்
4:28
06092024 வெள்ளி
++
-------மனிதன் வலிமை குன்றியவனாகவே படைக்கப் பட்டிருக்கிறான்
++
இறைவன் வசனத்தின் இந்தப் பகுதி குர்ஆனில் எந்தப் பகுதியில் வருகிறது?
விடை
சூரா 4. அந்நிஸா (பெண்கள்):28
அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில்
மனிதன் வலிமை குன்றியவனாகவே படைக்கப் பட்டிருக்கிறான்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
ஷிரின பாருக்
முதல் சரியான விடை
கத்தீபு மாமூனா லெப்பை
ஹசன் அலி
ஷர்மதா &
பீர் ராஜா
விளக்கம்
சூரா 4 அந்நிஸா
திருமணம் மணமுறிவு
சொத்துப்பிரிவினை
ஒழுக்கம்
ஒழுக்க கேட்டுக்கு தண்டனை
என பலவற்றைப் பற்றிய சட்டங்களை விரிவாகச்
சொல்கிறது
மனிதன் வலிமை குன்றியவனாகவே படைக்கப் பட்டிருக்கிறான்
என்ற வரி குரான் சட்டங்கள் பற்றி ஒரு மிகப் பெரிய செய்தியை தெளிவாக்குகிறது
இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் மனிதம் சார்ந்தவை என்பதுதான் அது
உடல் உள்ளம் அறிவு என அனைத்து மனித இயல்புகளையும் உள்ளடக்கி இருப்பதால்தான் இந்தச் சட்டங்கள் எக்காலத்துக்கும்
பொருத்தமாக இருக்கின்றன என்பது குரான் ஆய்வாளர்கள் கருத்து
இறைவன் நாடினால்
நாளை தமிழில் சிந்திப்போம்
06092024 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment