Saturday, 28 September 2024

தமிழ் (மொழி ) அறிவோம் மீனங்காடி 29092024ஞாயிறு

 



தமிழ் (மொழி ) அறிவோம்

மீனங்காடி
29092024ஞாயிறு
கடலூர் முதுநகர் மீன் சந்தையில்
மீனவர் அங்காடி
என்று பெயர்ப்பலகையில் இருக்கிறது
(பெயர்ப்பலகை ---தவறாக இருந்தது sorry
சுட்டிக்காட்டிய சகோ நஸ் ரீனுக்கு நன்றி
திருத்தி விட்டேன்)
இது சரியா ?
மீனங்காடி
என்று இருக்க வேண்டும் என்பது என் கருத்து
உங்கள் விடைகள் இதோ :
சகோ
செண்பகவல்லி அனந்த சுப்ரானியன்
மீன் அங்காடி என்பதே சரி
சிராஜுதீன்
மீனங்காடி என்பது சரியானது, மீன்கள் விற்கும் கடை என பொருள்படும், மீனவர் அங்காடி என்பதை தவறு. இது மீனவர் (தொழில் பெயர்) என்பவருக்கு சொந்தமான ஒரு அங்காடி என்று பொருள் படும்
அங்காடி என்பது முன்னொரு காலத்தில் தமிழ் நாடெங்கும் வழங்கிய சொல். (தஞ்சை மாவட்டத்தில் அங்காடிக்காரி என்ற சொல் வழக்கில் உள்ளது. தெருவிலே கூவி விற்றுச் செல்வோரை அது குறிக்கிறது) இக்காலத்தில் "பசார்" என்று சொல்லப்படும் இடமே முற்காலத்தில் அங்காடி எனப்பட்டது. பெரிய நகரங்களில் அந்தியும் பகலும் அங்காடி நடைபெற்றது. அந்தியில் நடைபெற்ற அங்காடியை "அல்லங்காடி" என்றும், பகலில் நடைபெற்ற அங்காடியை "நாளங்காடி" என்றும் அழைத்தனர்
பட்டினத்தடிகள், அங்காடி என்ற சொல்லை எடுத்தாள்கின்றார். "அங்காடி நாய் போல் அலைந்து திரிந்தேனே" என்பது அவர் பாட்டு. கன்னடத்திலும் தெலுங்கிலும் இன்றும் "அங்கடி" என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்திலும் அங்காடி உண்டு. தமிழ் மொழியில் அங்காடியை மீண்டும் ஆட்சியில் (மொழியில்) அழைத்தால் எத்துணை அழகாக இருக்கும்? செந்தமிழில் ஆர்வமுடைய செட்டியார் ஒருவர் தமது காசுக்கடைக்கு "அணிகல அங்காடி" என்று பெயரிட்டுள்ளார்.
கணேச சுப்பிரமணியம் : அரசு ஆணையில் மீனங்காடி மற்றும் மீனவர் அங்காடி என இரண்டையும் பயன் படித்துகிறார்கள். நவீன பதப்படுத்தும் முறை ,இதர வசதி கள் கொண்டு மீனவர்களுக்கு மட்டுமே பிரத்யோகமாக ஒதுக்கீடு செய்த வளாகங்கள் மீனவர் அங்காடி என் பெயர் தாங்கி உள்ளது..சென்னை பட்டினபாக்கத்தில் மீனங்காடி (விற்பனை ம்ட்டும்)--மீனவர் அங்காடி(storage and exclusively allotted to fishermen with modern amenities) என இரண்டு பெயரிலும் நடைபெற்று வருகிறது.. அரசு அறிக்கையில் பெயர் காரணம் சொல்லவில்லை.. இது யூகம் மட்டுமே..
[08:51, 28/09/2024] SHERFUDDIN P: உங்கள் கருத்து??
[09:24, 28/09/2024] CB retd Ganesa subramaniam: மீன் மார்க்கெட்- மீன் அங்காடி என்பதே சரி
சோமசேகர்
தமிழ்நாடு அரசு மீனவர்களின் மேம்பாட்டுக்காக மீனவர்களுக்கு வீடு, மீனவர்களுக்கு அங்காடி மீன் வள ஆராய்ச்சி அரங்கம் என இன்னும் பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
அதில் மீனவர் அங்காடி என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது
அரசின் மீனவர் அங்காடியின் நோக்கம் கடல்சார் உணவு வகைகளான மீன், நண்டு, இறால், நத்தை போன்றவற்றை விற்பது மட்டுமல்ல. அவற்றை மதிப்பு கூட்டி (value addition) செய்து உதாரணமாக கருவாடு, மீன் ஊறுகாய் இறால் ஊறுகாய் போன்ற பல மதிப்பு கூட்டுதலையும் மேற்கொண்டு அவற்றையும் மீனவர்கள் சந்தைப்படுத்தும் இடமாக அங்காடி அமைத்து தரவேண்டும் என்று கொள்கை வகுத்து செயல்படுத்தி வருகிறது தாங்கள் குறிப்பிட்டுள்ள கடலூர் முதுநகர் மீன் சந்தை அந்த திட்டத்தின் கீழ் அரசால் கட்டித் தரப்பட்ட அங்காடியாக இருக்கலாம்.
மொழியிலக்கணப்படி மீனங்காடி என்பது சரியே. ஆனாலும் அது மீன்விற்க மட்டுமல்ல.
மீனவர்கள் தங்களின் மதிப்பு கூட்டப்பட்ட மற்ற கடல்சார் பொருட்களையும் விற்கவேண்டும் என்பதால் அது மீனவர்களுக்கான அங்காடி என்ற நோக்கத்தில் "மீனவர் அங்காடி " என்று பெயர்ப்பலகை வைத்திருப்பதும் சரியே
அதிகமாக குழப்புகிறேனா
குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க
தல்லத்
மீனங்காடியில் மீன் மட்டும் விற்கப்படும்
மீனவர் அங்காடியில் மீன் மற்றும் மீனவர் சம்பந்தப்பட்ட ஏனய பொருட்களும் விற்கப்படலாம்
ஷிரீன் fபாருக்
மீன்அங்காடிஎன்பதேசரி
ஷர்மதா
அங்காடி என்பது பல பொருட்கள் ஒருஇடத்தில் விற்கப்படும் இடம் என்பதால்,மீன் மட்டும்விற்கக்கூடிய இடமாக
மீனவர்களுக்கான அங்காடி மீனவர் அங்காடி ,அல்லது
மீன்சந்தை என்றிருக்கலாம்.
பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
இதிலிருந்து நான் அறிந்தது
மீன் நண்டு எறால் கருவாடு போன்ற கடல் உணவுகள் விற்கும் கடைகள் உள்ள சந்தை
மீனங்காடி
கூடுதலாக மிஞ்சிய மீன்களை உலர்த்தவும் பாதுகாப்பாக வைக்கவும் மதிப்புக்க்கூட்டவும் drying tard, cold storage போன்ற வசதிகள் இருந்தால்
மீனவரங்காடி
நான் அறிந்த வரை முதுநகர் சந்தையில் இது போன்ற வசதிகள் இல்லை எனவே
மீனங்காடி என்பதே பொருத்தமாக இருக்கும்
மீண்டும் நன்றி அனைவருக்கும்
இறைவன் நாடினால் நாளை ஆந்கிலத்தில் சிந்திப்போம்
௨௯௦௯௨௦௨௪
29092024ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment