பார்த்ததில் கேட்டதில் பிடித்தது
நயத்தகு நாகரிகம்
25092024 புதன்
உணவு விடுதியின் பெயர்ர்ப்பலகையில் ஒரு இனத்தைக்குறிப்பிட்டிருந்தது
இதை எதிர்த்து ஒரு போராட்டம்
போராட்டம் என்றால் அடிதடி கிடையாது கல்லெறிதல் உருட்டுகட்டையால் அடித்து நொறுக்குவது என்று எதுவும் கிடையாது
கட்சிதொண்டகள் பத்துப்பேர் வருவார்கள்
விடுதி நுழைவு வாயிலின் இருபறமும் ஐந்து ஐந்து பேர் நிற்பார்கள்
திருமண நிகழ்ச்சிக்கு வரவேற்பது போல் கைகூப்பி வணங்கி நிற்பார்கள்
‘இந்த ஓட்டலுக்குப் போகாதீர்கள் “ என்று வாயால் மட்டும் அமைதியாகச்
சொல்லுவார்கள்
இதனால் விற்பனை குறைய உரிமையாளார் காவல் துறையில் புகார் கொடுத்தார்
அவர்களும் வந்து கைது செய்தார்கள்
உடனே அடுத்த பத்துப்பேர் வந்து நிற்பார்கள்
இந்தப்போராடாம் நாள், வாரம் என்பதைத் தாண்டி மாதக்கணக்கில் நீடித்து
மறு ஆண்டு வரை சென்றது
ஒரு நாள் இரவு
உணவு விடுதி உரிமையாளர் பெரியாரைக்காண வருகிறார்
தன் பிழையை உணர்ந்து பெயர்ப்பலகையில் மாற்றம் செய்வதாகச் சொல்கிறார்
உடனே அருகில் உள்ளவர்கள்
படத்துடன் விடுதலை இதழில் செய்தி போடலாமா என்று கேட்கிறார்கள்
பெரியார் அவர்களைக் கடிந்து கொள்கிறார்
---யாருக்கும் தெரியக்கூடாது என்றுதானே இரவில் தனியாக வந்து வருத்தம் தெரிவிக்கிறார்
இதை செய்தியாக வெளியிடும் அளவுக்கு நாம் நாகரிகம் இல்லாதவர்களா ---
என்கிறார்
வலையொளிYou tube ஒன்றில் இது பற்றிப் பேசிய திரு சுப வீர பாண்டியன்
இன்னொரு நிகழ்வையும் நினைவு கூறுகிறார்
----- தொலைகாட்சி ஒன்றில் குறிப்பிட்ட கட்சி பற்றி தொடர்ந்து தவறான ,உண்மையற்ற தரம் தாழ்ந்த செய்திகள் வெளியாகின்றன
இதை அறிந்த கட்சித் தலைவர் கலைஞர் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன கட்சித் தோழர்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என தடை செய்கிறார்
உணவு விடுதி ஒரிமையாளர் போல இந்தத் தொலைக்காட்சி உரிமையாளார் ஒரு நாள் தனியாக வந்து கலைஞரை சந்தித்து வருத்தம் தெரிவிக்கிறார்
இதை அறிந்த கட்சித் தோழர் ஒருவர்
--இந்தச் செய்தியை படத்துடன் கட்டம் கட்டிப் போடலாமா
என்று கேட்க
அன்று பெரியார் சொன்ன அதையேதான் கலைஞரும் சொல்கிறார்
அவர் வந்தது வருத்தம் தெரிவித்தது பற்றி எந்த செய்தியும் வெளியிட வேண்டாம்
யாருக்கும் சொல்லவும் வேண்டாம்
காரணம் எதுவும் குறிப்பிடாமல்
நம் தோழர்கள் அந்தத் தொலைகாட்சி நிகழ்சிகளில் பங்கு கொள்ளலாம்
என்று மட்டும் அறிவித்து விடுங்கள்
என்றாராம்
என்றுமே கற்றுக் கொடுக்கும் இனம்தான் தமிழினம்
(படம் திரு இறையன்பு இ ஆ ப ஒய்வு அவர்கள் எழுதிய நூலின் அட்டைப்படம்)
இறைவன் நாடினால் நாளை திருமறையில் சிந்திப்போம்
25092024 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment