Sunday, 15 September 2024

திருமறை குர்ஆன் 11:43 13092024 வெள்ளி


 திருமறை குர்ஆன் 

11:43

13092024 வெள்ளி 



""___என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்;___"


திருமறையில் எந்த இடத்தில் வரும் எந்த வசனத்தின் பகுதி இது?


விடை

  சூரா 11 ஹுத்

வசனம் 43

அதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேர

லை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.(11:43)


சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் 


சகோ

ஷர்மதா 

முதல் சரியான விடை 


ஹசன் அலி


சிராஜுதீன்   நன்றி விளக்கமான விடைக்கு


தல்லத் 

ஷிரீன ஃபாருக்&

பீர் ராஜா




விளக்கம்:

நூஹ் நபியின் சமுதாயத்தினர் இறைவன் ஒருவனே என்ற இறை கட்டளையை மறுத்து அவரிடம் முரண்பட்டபோது அவர் வேதனையுடன் அல்லாஹ்விடம் முறையிட்டதன் பேரில் இறைவன் அவரிடம் ஒரு கப்பலை கட்டுமாறு கட்டளையிட்டான் இறைவனின் ஆணைப்படி கப்பலை கட்டி முடித்ததும் எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கு வெள்ளப் பிரளயத்தை ஏற்படுத்தினான். அப்பொழுது அல்லாஹ் நூஹு நபியிடம் 


"ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!'' என்று கூறினான் .அதன்படி நூஹ் .(11:40). "இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று (நூஹ்) கூறினார்.ஆனால் அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர் (11:41).

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி "அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏகஇறைவனை) மறுப்போருடன் ஆகிவிடாதே!'' என்று நூஹ் கூறினார். (11:42). அதற்கு அவ்ரது மகன் 

"ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்'' என்று கூறினான். "அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை'' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்

(11:43)




இறைவன் நாடினால்  நாளை தமிழில் சிந்திப்போம் 


09 ரபியுல் அவ்வல்(3) 1446

13092024 வெள்ளி 

சர்புதீன் பீ

No comments:

Post a Comment