Thursday, 19 September 2024

திருமறை குரான் 25 :25 20092024 வெள்ளி

 




திருமறை குரான்

25 :25
20092024 வெள்ளி
வானம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் வானவர்கள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள்.
திருமறையின் எந்தப்பகுதியில் வரும் வசனம் இது ?
விடை
சுராஹ் 25 அல்fபுர்கான் ( அளவு கோல்பிரித்தறிவித்தல்) வசனம் 25
வசனம் மேகங்களால் பிளக்கப்பட்டு அந்நாளில் வானவர்கள் கூட்டம் கூட்டமாக இறங்குவார்கள்(25 :25)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் :
சகோ
ஷிரீன் fபாரூக் –முதல் சரியான விடை
சிராஜுதீன்
ஹசன் அலி
கத்தீபு மாமூனா லெப்பை
ஷர்மதா
அல்-ஃபுர்கான் அல்லது "அளவுகோல்" என்ற பெயர், நன்மைக்கும் தீமைக்கும் இடையே தீர்க்கமான அளவு கோலாக குர்ஆனையே குறிக்கிறது.
வசனம் 25-31-சரியான பாதையில் செல்ல மறுக்கும் நம்பிக்கை அற்றோர் எப்படி தீர்ப்பு நாளில் மனம் வருந்துவார்கள் என்பது பற்றிச் சொல்கிறது
அந்நாளில் உண்மையான ஆட்சி இறைவன் ரஹ்மான் ஒருவனுக்கே இருக்கும். நிராகரிப்பவர்களுக்கு அது மிக்க கடினமான நாளாகவும் இருக்கும்.25:26
அந்த நாளில் இறைவன் வானங்களை ஒரு கையிலும் ,பூமியை மறு கையிலும் பிடித்துக்கொண்டு
“நானே அரசு நானே ஆட்சி அதிகாரம் “ என்று இறைவன் அறிவிப்பான் என்பது நபி மொழி
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
16ரபியுல் அவ்வல(3) 1446
20092024வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment