Sunday, 15 September 2024

தமிழ் (மொழி) அறிவோம் இன எழுத்துக்கள் 15093024 ஞாயிறு



 தமிழ் (மொழி) அறிவோம் 

இன எழுத்துக்கள் 

15093024 ஞாயிறு 



மங்கை.  சங்கம் 


பஞ்சு   தஞ்சம் 


வண்டி    மண்டு 


பந்து     சொந்தம்....


 கம்பீரம்   நம்பு 


 நன்று   சென்றேன் 




 இந்த சொற்களில் வரும் எழுத்துகளில் 

இலக்கண வழியில்

ஒரு ஒற்றுமை இருக்கிறது 


அது என்ன?


விடை 

இன எழுத்துக்கள் 


சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர் 


சகோ 

ஹசன் அலி 

முதல் சரியான விடை 


கத்தீபு மாமூனா லெப்பை


முயற்சித்த சகோ


சிராஜுதீன்

குப்தா 

நூர்ஜஹான் 

ஷிரீன் பாருக் 

ரவிராஜ் 

செண்பகவல்லி அனந்த சுப்பிரமணியன்

அனைவருக்கும் நன்றி


விளக்கம் 


தமிழின் எழுத்து வைப்பு முறையே இயல்பானதும் இயற்கையானதும் ஆகும


கங சஞ டண தந பம றன---- இவை அனைத்தும் இன எழுத்துக்கள் ஆகும். 


.. ஒன்று வல்லினம்... ஒன்று மெல்லினம்.


ங வந்தால் அடுத்தது க தான் வரும். இவ்வாறே மற்ற எழுத்துக்களும் வரும்..


பங்கு மங்கை சங்கம் தங்கம்....


பஞ்சு தஞ்சம் தஞ்சை நஞ்சு ...


வண்டி மண்டு செண்டு நொண்டி வண்டு....


பந்து சந்து நந்து குந்து நந்தி கந்தகம் சொந்தம்....


கம்பம் கம்பீரம் நம்பு சொம்பு தம்பிரான்....


நன்றி நன்று சென்றேன் தின்றேன் .....


ய ர ல வ ழ ள என்னும் இடையின எழுத்துக்களுக்கு இன எழுத்து என்று ஒன்றும் இல்லை. இவை நோக்கம்போல் வருபவை..


(முகநூல் வ வடிவேலன்) 



இறைவன் நாடினால்  நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம் 


15092023 ஞாயிறு 

சர்புதீன் பீ



No comments:

Post a Comment