தமிழ் (மொழி) அறிவோம்
இல்லை என்றால் என்ன வேறுபாடு?
எனக்கு தெளிவாகத் தெரியவில்லை
தெரிந்தவர்கள் விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
விடை
என் விடை ஏதும் இல்லை
விடை அனுப்பியஅறிஞர்களின் கருத்து கீழே
அறம்:
தமிழில் உள்ள ஒரு கலைச்சொல். சம்ஸ்கிருதத்தில் தர்மம், பிராகிருதத்திலும் பாலியிலும் தம்மம் ஆகிய சொற்களுக்கு ஏறத்தாழ இணையானது என்றாலும் தமிழுக்கே உரிய மேலதிக பொருள் கொண்டது. வெவ்வேறு காலகட்டங்களில் பொருளேற்றம் கொண்டு மாறிவந்தது.
அறம் என்ற சொல்லுக்கு பொதுவாக வாழ்க்கை நெறி, தர்மம், ஒழுக்கம், கடமை, தியானம், புண்ணியம், ஞானம், நல்வினை, தர்ம தேவதை, அறக்கடவுள், அறச்சாலை, நோன்பு, என்றும் சொல்லலாம். அறம், பொருள், இன்பம், வீடு, என்றும் சொல்லலாம்.
திருக்குறள் அறம் என்பதை:-
‘ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்’.-
என்ற குறளின் மூலம்
எல்லாவிதமான செயல்களையும் அற வழியில் செய்வதே நல்லது என்று கூறுகிறது.
இன்னொரு குறலில்..
‘அழுக்காரு அவாவெகுளி இன்னா சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்- என்கிறது. அதாவது..
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில்_ கடும் சொற்கள், பொறாமை, தீய குணங்கள், போன்றவற்றை முழுமையாக நீக்கி விட்டு வாழ்வதே அறம் என்று சொல்கிறது!
மேலும்..
* அன்பாய் இருப்பது அறம்.
* இனிமையாய் பேசுவது அறம்.
* கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது அறம்.
* நல்லதையே நாடுவது அறம்.
* தூய துறவியரைப் பேணுவது அறம்.
* மானத்துடன் வாழ்வது அறம்.
* உயிருக்கு ஊக்கம் தருவது அறம்.
* அருள் வழியில் ஆண்டவனை உணர்த்துவது அறம்.
* மனதில் குற்றம் அற்று இருப்பது அறம்.
* பொய்யை தவிர்ப்பது அற
* சினத்தை தவிர்ப்பது அறம்.
* பொறாமை உணர்ச்சியை தவிர்ப்பது அறம்.
* பிறருக்கு கெடுதல் செய்யாமை அறம்.
* பிற உயிர்களைக் கொல்லாமை அறம்.
* தீமை இல்லாத வழியில் பொருள் ஈட்டுவது அறம்.
* இல்லற வாழ்வில் ஈடுபடுவது அறம்.
* அற நூல்களை கற்று அடக்கமுடன் இருப்பது அறம், என்றும் அறத்திற்கான விளக்கத்தை திருக்குறள் விரிவாக தருகிறது
அறம் பற்றி சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அறம் பேண வேண்டிய நிலைகளையும் விரிவாக சங்க இலக்கியங்கள் தருகின்றன, அவற்றில் சில பின் வருமாறு:
1. தருமம். (பிங்கல நிகண்டு)
2. புண்ணியம் : அறம்பாவ மென்னு மருங்கயிற் றாற் கட்டி (திருவாசம் 1, 52)
3. தகுதியானது. (இறையனாரகப் பொருள் 29,)
4. சமயம். (சீவக சிந்தாமணி 544.)
5. ஞானம்:. அறத்தின் விருப்புச் சிறப்பொடு நுந்த (ஞானா. பாயி. 5)
6. நோன்பு. (சீவக. 386.)
7. தருமதேவதை. (குறள், 77.)
8. யமன். அறத்தின் மைந்தனுக்கு (பாரத. வாரணா. 112)
9. இதம் : அறத்துறை மாக்க டிறத்திற் சாற்றி (சிலப். 14, 28).
அறன்
1. அறக்கடவுள், யமன் ; தருமதேவதை
2. நற்குணம்
3. ஒழுக்கம்
அறம், அறன் இவை இரண்டும் ஒரே பொருளுடைய சொற்களாகும்.
* இதில் அறன் என்ற சொல் இலக்கண ரீதியாக பழங்காப்பிய மற்றும் இலக்கண பாடல்களில் அறம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* அறம் என்பதற்கான ஒரு பொருளான ஒழுக்கத்தை சிறப்பாக சொல்லும் வார்த்தையாகவும் அறன் என்ற சொல் பயன்பாட்டில் இருப்பதையும் கணிக்க முடிகிறது,
* மேலும் அறன் என்றவார்த்தை தருமசீலர் என்று கடவுளை குறிக்கும் பெயர்ச்சொல்லாக உரைக்கபட்டுள்ளது.
* அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (திருக்குறள்)
* இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்.. (தொல்காப்பியம் களவியல்)
* "ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்�யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்"(ஆசாரக்கோவையின் பெருமை)
######
சகோ செங்கை A சண்முகம்
அறம்...அறன்..
இரண்டும்..
ஒரு பொருளைத்
தான் குறிக்கின்றன..!
அறன் வலியுறுத்தல்
எனும் அதிகாரத்தில்
திருவள்ளுவர்
வலியுறுத்திச்
சொல்வது...
அறமே..!
அறம்..தர்மம்,
நீதி வழி செல்வது
மனத்தினிலே
குற்றம்..அல்லது
மாசில்லாதிருத்
தல்..
பொறாமை..பேராசை...கடுங்கோபம்,
வன்சொல்..இந்
நான்கையும்..
விட்டொழித்தது..
அறம்..அதையே
அறன்..என்றும்
கூடக் கூறலாம்.!
திறம்..திறன்..
வரம்..வரன்..
இப்படிச் சொல்ல
லாம்..!!
இது...என்னுடைய
புரிதல்..!sengai a dhanmugam
இரண்டு சொற்களும்
அறு என்னும் வினைச்சொல்லிருந்து உருவானவை.
அறு,அற்றம்--- திட்டவட்டம், வரையறுத்தல், இறுதிப்படுத்தல்..பொருளாகும்.
*அறன்*
நற்குணம், தெய்வம் என்று பொருள் படும்.
*அறம்*
ஒழுக்கநெறி, நன்னடத்தை, morality,virtue.என பல பொருள் படும்.
அறம் வாழ்வியல் மற்றும் சமுதாய நடைமுறை சம்மந்தப் பட்டது.
நெறிமுறைகள் சமுதாயத்திற்கு, சமுதாயற்கு மாறுபாடு உண்டு.ஆனால் அது நேர்வழி,உண்மை இவற்றை வலியுற்த்துகிறது.
It is unwritten..வழிவழியாய் சொல்லும் நேர்மை,வாழ்வியியல் நடைமுறைகளின் தொகுப்பு.
#####№№##
சகோ ஜோதி லியாக்கத்
[21/12, 08:45] Jothy Liakath: அறம்..தருமம்.
அறம் செய்ய விரும்பு.
அறன்... வாழ்வியல் முறை.
அறன் எனப்பட்டதே
வாழ்க்கை.
[21/12, 08:46] Jothy Liakath: அதுவும் பிறன் பழக்காதிருப்பின் நன்று.jot
######££
சகோ ஷிரின் ஃபாருக்
[21/12, 10:08] Farook Nellai Shireen: இரண்டுக்கும் ஒரே பொருள்
[21/12, 10:29] SHERFUDDIN P: நன்றி
பொருள் என்ன?
[21/12, 11:30] Farook Nellai Shireen: அதாவது அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய நான்கையும் அறுப்பதே அறம் எனப்படும் என்கின்றார் வள்ளுவர்
###₹₹#
சகோகத்தீபு மாமூனா லெப்பை
"அறன்" என்பது "அறம்" என்ற அதே பொருளுடைய சொல்லின் இலக்கணப் போலியாக இருக்குமோ?
In short அறன் என்பது அறம் எனும் பொருளுள்ள அனைததையும் கொண்டதோடல்லாமல் கடவுள் என்ற பொருளையும் தன்னகத்தே கொண்டது
அனைவருக்கும் நன்றி
வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
உருகஉஉ0உச
22122024; ஞாயிறு
சர்புதீன் பீ