முதல் எழுத்து உகரம் (குறில்)
இரண்டும் ஐந்தும் ஒற்று
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல பொருள்கள்
அவற்றில் சில :
தலை
வாழை
பரவலாகப் பயன்பாட்டில் இல்லை
பள்ளிப் பாட செய்யுளில் சிலர் படித்திருக்கலாம் ஆ(பூ)னை பற்றிய பாடல்
என்ன அந்தச் சொல்?
விடை
முண்டகம்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர் :
சகோ
ஹசன் அலி. முதல் சரியான விடை
தல்லத்
சிராஜுதீன்
விளக்கம்
முண்டகம்
முள் +அகம். 1.
முண்டக விறும்பி னுற்று(அரிச். பு. வேட்டஞ். 36).
;
முண்டகக் கண்ணாபோற்றி (குற்றா. தல. திருமால். 141).
2. ;தலை. (அருநி.) 3. 108;நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 4. வாழை. (மலை.)
5 கடல்.(அக. நி.)
பாடல்
பூனைக்கி யாறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால்
ஆனைக்குக் கால்பதி னேழானதே –மானேகேள்
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண் .(73 )
முண்டகம் என்றால் தாமரை என்றும் பொருள்.
காளமேகப் புலவர்.
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
0அகஉ உ0உச
08122024 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment