திருமறை குரான்
58:1 லிகர்
29112024 வெள்ளி
---------"ஏக இறைவனாகிய
திருமறை குரானின் எந்தப் பகுதியில் வரும் வசனத்தின் பகுதி இது?
விடை
சூராஹ 58 முஜாதிலா -தர்க்கம் செய்யும் பெண்-வசனம் 1
(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்தித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன், (எல்லாவற்றையும்) பார்ப்பவன். (58:1)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்:
சகோ
ஷர்மதா முதல் சரியான விடை
சிராஜுதீன்
தல்லத்
ஷிரின் ஃபாருக்
பீர் ராஜா &
ஹசன் அலி
விளக்கம்
பல முறை இது பற்றி விளக்கமாக எழுதியிருக்கிறேன்
இப்போது ஓரளவு சுருக்கமாக:
Zihar லிகர் எனும் ஒரு மணமுறிவு முறை அந்தக்கால கட்டத்தில் மிக அதிகமாக பழக்கத்தில் அரபு நாட்டில் இருந்தது
ஓரு பெண்ணை கணவனுக்குப் பிடிக்காவிட்டால்
"நீ பின்பக்கம் பார்த்தால் என் அம்மா போல இருப்பதால் உன்னோடு வாழ முடியாது"
என்று சொல்லி விட்டால் மணமுறிவு ஆகி விடும்
இந்த முறையில் பாதிக்கப்பட்ட Khaulah bint-Thalabahகௌலாபின் தலபா என்ற பெண் நபி பெருமானிடம் தனக்கு ஏதாவது நல்ல தீர்வு வழங்க முறையிட
நபிஸல் இது நடைமுறையில் உள்ள பழக்கம்
நான் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்
அந்த நேரத்தில் இறைவன் குறுக்கிட்டு பேசுகிறான்
..பேசி தெளிவாக இந்த லிகர் முறை தவறு என்று சுட்டிக காட்டுகிறான் தொடர்ந்து வரும் வசனங்களில்
ஒரு நீண்ட கால மூடநம்பிக்கை, பழக்கம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது
இறைவனே குறுக்கிட்டு பேசியதால்
அந்தப் பெண்
சமுதாயம் போற்றிப் புகழும் பெண்ணாகி விட்டார்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
26 ரபியுல் அவ்வல்(5)1446
29112024 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment