Monday, 16 December 2024

சிறையான அறை ! 27112024 புதன்

 


சிறையான அறை !

27112024 புதன்
இது அரசியல் பதிவோ
சட்டம் பற்றிய பதிவோ இல்லை
எண்ணங்களின் வெளிப்பாடு மட்டுமே
தவறு செய்யும் குழந்தைகளை குளியல் அறையில் அடைத்து வைக்கும் வழக்கம் சில குடும்பங்களில் இருப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன்
இது எந்த அளவுக்கு அவர்கள் மன நிலையில் தாக்கத்தை உண்டாக்கும் என்று தெரியவில்லை
ஆனால் முதல் முறை அடைக்கும் போது குழந்தைகள் மனதில் மிக அச்சத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டாக்கும்
திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்--- பணத்துக்காக கடத்திக் கொண்டு வரும் குழந்தைகளை ஒரு அரை இருட்டு அறையில் அடைத்து வைப்பார்கள்
பயன்படாத பொருட்கள் பலவும் அங்கே இருக்கும்
---குறிப்பாக பழைய சக்கரம் தகர உருளை போன்றவை
இன்னும் எலி. கரப்பான் ஏதாவது குழந்தையை அலற வைக்கும்
பள்ளிப் பருவத்தில் என் தம்பியும் நானும் ஒளிந்து விளையாடும் போது தம்பி ஒரு பெரிய மரப் பெட்டிக்குள் ஒளிந்து கதவை மூடிக் கொண்டார்
அதைக் கண்டுபிடித்த நான் விளையாட்டாக பெட்டியை மூடி தாழ்ப்பாளை போட்டு விட்டேன்
திறக்க முயற்சித்து முடியாததால் தம்பி வேர்த்து விறுவிறுத்து மூர்ச்சை ஆகும் நிலையில் இருந்தார்
நல்லவேளை அந்தப் பக்கம் வந்த யாரோ பெட்டியைத் திறந்து மீட்டார்கள்
விளையாட்டு வினையாகாமல் காத்த இறைவனுக்கு நன்றி
வினை வினையான ஒரு நிகழ்வு எங்கள் வங்கியில்---இது பற்றி முன்பு விரிவாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி இருக்கிறேன்
இப்போது சுருக்கமாக:
வங்கி வட்ட அலுவலகம்
மனித வளப்பிரிவு --
அதில் ஒரு கொடுங்கோல் மேலாளர்
(தெரிந்தே தேர்வு செய்தேன் சொல்லை)--
எப்போதும் கடுகடுப்பு
எது கேட்டாலும் எரிந்து விழுதல் அச்சுறுத்தும் பேச்சு -- தானே வங்கி உரிமையாளர் என்று நினைப்பு
அந்த பிரிவில் பணியாளர் ஒருவருக்கு அவரின் சொந்த ஊருக்கு இடமாற்ற
ஆணை வந்து வெகு நாளாகியும ஆள் பற்றாக் குறை என்று சொல்லி மாறுதல் ஆணையை செயல்படுத்த‌ மறுத்து விட்டார் மேலாளர்
மனம் வெறுத்துப் போன பணியாளர் தன் எதிர்ப்பை வெளிப்படுத்த
ஒரு நாள் உள்ளாடையோடு அலுவலகம் வந்து இருக்கையில் உட்கார்ந்தார்
இதைக் கண்ட மேலாளருக்கு சினம் தலைக்கேறியது
அந்தப் பணியாளரை கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக கொண்டு போய் ஒரு அறையில் அடைத்து கதவை அடைத்து வெற்றிப் புன்னகை பூத்தார்
அதன் பின்விளைவு ஒரு வரலாறு --மின்னல் வேகத்தில் நிகழ்வுகள் --
மற்ற பணியாளர்கள் தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவிக்க
அவர்கள் உடன் வந்து ஒலிஓளிப் பதிவுகள் செய்து சற்று நேரத்தில் உடனடிச் செய்தியாக (breaking news) நாடெங்கும் பரவி
தகவல் அறிந்த தலைமை அலுவலகம் உடனே செயல்படுகிறது
அந்த மேலாளர் உடனடியாக வடகிழக்கு மாநிலத்தில் உள்ள பெரிய ஒரு கிளைக்கு branch in charge ஆக மாற்றப்படுகிறார்
Immediate relief
No joining time
No leave
உதவி செய்ய என்ன.இரக்கப்படக் கூட யாரும் இல்லை
அந்த அளவுக்கு மனித உறவுகளை மேம்படுத்தி இருக்கிறார்!!
(Incidentally it happened on the day I Retired from bank)
எல்லாம் அவன் செயல்
அன்பிலதனை அறம் நன்றாக காய்ந்து விட்டது
ஒரு வேடிக்கை நிகழ்வு
என் நெருங்கிய உறவினர் ஒருவரும் அவர் தோளுக்கு மிஞ்சிய மகனும் தோழர்களாகத்தான் உறவாடுவார்கள் தவறுக்காக மகனை ஒரு அறையில் அடைக்கிறார்
தந்தை
"உடனே திறந்து விடாவிட்டால் இங்கிருக்கும் பலகாரங்களை தின்று விடுவேன்"
என்று மகன் குரல் கொடுக்க
பதறிப்போய் தந்தை கதவைத் திறந்து விடுகிறார்
அவருக்குத் தெரியும் மகன் செயல் வீரர் என்று
இன்னும் சிலபல நினைவுகள் நெஞ்சில்
அவை பற்றி பின்னொரு நாளில் பார்ப்போம்
இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்
27112024 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment