தமிழ் (மொழி) அறிவோம்
நீதி
15122024 ஞாயிறு
ஆனால் நீதி என்பது தமிழ்ச்சொல் இல்லை என்று ஒரு கருத்து உலவுகிறது
அப்படி என்றால் நீதிக்கு சரியான தமிழ்ச் சொல் என்ன?
இந்த சிறிய வினா பட்டி மன்றம் போல் ஒரு சுவையான கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுத்தது விட்டது
நீதி தமிழ்ச் சொல் என்றும்
இல்லை வடமொழி என்றும்
வலுவான சான்றுகளுடன் தமிழறிஞர்கள் பலர் பதிவு செய்திருக்கிறார்கள்
அவற்றின் தொகுப்பு:
சகோ சிராஜுதீன்:
நீதி என்றால்
நியாயம்; முறைமை; மெய்; உலகத்தோடுபொருந்துகை; இயல்பு; ஒழுக்கநெறி; நடத்துவது; வழிவகை; என்ற வகைகளில் பொருள்படும்.
நீதி என்ற தமிழ் சொல் நியதி என்ற வேர் சொல்லினின்று உருவானது.
நியதி → நீதி ;
நியதி/நீதி என்றால் கட்டுப்பாடு,செய்கடன், ஒழுக்கவிதி, ஊழ் ,முறைமை, வரையறை, எப்பொழுதும் நியாயம், மெய், அறம், நன்னெறி, உலகத்தோடு பொருந்துதல் என்று பொருள்.
நீதி என்பது தமிழ் சொல் தான், இங்கிருந்து எடுத்து சமக்கிருதத்தில் கையாளப்பட்ட சொல் இது, நீதி என்ற வேர் மூலம் ஏதும் சமக்கிருதத்தில் இல்லை!
பண்டைய தமிழ் இலக்கியங்களில் நீதி என்ற சொல் கையாளப்பட்டுள்ளது, அவையாவன :
1 நீதியாவன யாவையு நினைக்கிலேன் (திருவாசகம். 26, 2).
2 கட்டமைநீதிதன்மேற் காப்பமைந்து (சீவக சிந்தாமணி :1145).
3 நீதியா லவர்கடம்மைப் பணிந்து (பெரியபுராணம். 197).
4 ஊர்தியிற் சேறலுநீதி யாகும் (நம்பி அகப்பொருள்: 83).
5 உலகமெல்லா மாண்டிட விளைக்குநீதி (சீவக சிந்தாமணி 755).
மனு நீதி சோழன் பசுவிற்கு நியாயம் வழங்கும் விதமாக தன் மகனையே தேர்க்காலில் இட்டு கொன்ற வரலாறு தமிழர் வரலாறு, சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் இன்றும் சுதை சிற்ப வடிவில் அந்த நிகழ்வை நினைவூட்டும் விதத்தில் அமைத்திருப்பதை காணலாம்.
இதே கருத்தை இன்னும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்
இதற்கு மாற்றாக
சதோ கணேச சுப்பிரமணியம்
நீதி -வட மொழியே.
நடுவு, முறைமை.
நிதி, நீதி இரண்டும் நியதி என்றச் சொல்லிருந்து வந்தது என்று சொல்வாருண்டு..தமிழே என்பார்கள்..
ஆயினும்
தமிழில் ஒரு சொல்லுக்கு முன் அ மற்றும் அன் ஒட்டு சேர்த்தால் எதிர் மறை பொருள் தந்தால் அது தமிழல்ல..நீதி-அநீதி, சுத்தம்-அசுத்தம் போல.
இணையத்தில் மனுநீதி சோழன் முதல் சீவக சிந்தாமணி,வரை quota ல் சொல்கிறார் கள்.
நியதிக்கு ஐதீகம், ஊழ் என்னும் பொருளுண்டு.
குறளுக்கு உரை எழுதிய வர்கள் நீதி எனும் சொல்லை பயன்படுத்தி உள்ளார்.
இதையொட்டியும் சில பதிவுகள் வந்துள்ளன
என் கருத்து
நீதி அநீதி
இது வடமொழி என்பது தெளிவாகிறது
இருந்தாலும் பண்ணொடுங்காலமாக இலக்கியங்களில் பயன் பாட்டில் இருப்பதால்
நீதி என்ற சொல்லை ஏற்றுக் கொள்ளலாம்
மொழி வளர்ச்சிக்கு பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளலாம்
தனித்தமிழ் என்பது கல்வி ஆர்வத்தில் (academic interest) மட்டுமே
சகோ அஜ்மீர் அலி
நீதி என்பது சங்க காலத்திற்கு பின்னர் தமிழில் தோன்றியவை. சங்க காலத்தில் போற்றப்பட்ட காதலும் வீரமும், பின் தள்ளப்பட்டு, அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.
திருவள்ளுவர் நடுநிலைமை பற்றி 111 - 120 வரை எடுத்துரைத்ததில் நீதி என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை!
பல ஒளவையார்கள் தோன்றியதாக தமிழ் வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அவர்களில் ஒருவர்
"*நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் "* என்றார். இதிலிருந்து இவர் சங்க காலத்திற்குப் பின்னர் தோன்றியவர் என்பது உண்மை.
மனுநீதிச்சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன் போன்றவர்கள் நீதி வழுவாத மன்னர்களாக திகழ்ந்ததாக இலக்கியங்கள் சங்ககாலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்களே!
நடுநிலைமை பொதுநிலை, மையக்கருத்து என்பது எல்லாம் நீதி என்ற
இரவலை நோக்குபவை. ஆங்கிலத்தில் Justice என்பார்கள். நடுநிலைமை என்பது Justice ஐ நோக்குபவை. தமிழில் நீதியைப் போன்ற தமிழ் சொல் இல்லாமையால் நீதி என்ற சொல்லை இரவல் வாங்கியிருக்கக்கூடும்.
பூஜ்யத்திற்கும் 50 க்கும் நடுநிலை என்றால் பூஜ்யம் உயரவோ 50 குறைப்பது தான் நடுநிலை என்றால் அது அறமாகுமா? அறம் எனப்படுவதே நீதியாகும் என்றும் தோன்றுகிறது.
நீதிபதி, நீதி என்பது எல்லாம் இரவல் மொழிச் சொற்களே.
[15/12, 11:58] Ajmeer Ali: *அறமுரைஞர்*
[15/12, 12:02] Ajmeer Ali: அறம் என்பது நடுநிலைக்கு மேலானது! இருசாரரின் வாதத்திற்கும் இறுதியான முடிவாகும். மனிதாபிமானத்தின் உச்சமானது! அது கிடைப்பதுதான் நடக்க முடியாதது!
பங்கேற்று சிறப்பித்த சகோ
ஷர்மதா
தல்லத்
நஸ் ரீன்
மீ மு இஸ்மாயில்
அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
கருகஉஉ0உச
15122024 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment