Saturday, 28 December 2024

தமிழ் (மொழி) அறிவோம் மானம் 291224 ஞாயிறு







 தமிழ் (மொழி) அறிவோம்

மானம்
291224 ஞாயிறு
நீதி அநீதி வரிசையில்
அடுத்து
மானம் அவமானம் (உயிர் நீப்பர் மானம் வரின் குறள)
பெயர் அவப்பெயர்
இவை தமிழா இல்லையா
இல்லையென்றால் சரியான தமிழ்ச் சொல் என்ன?
நல்ல
இரண்டு விடைகள் வந்தன
இரண்டுமே மானம்
பெயர் தமிழே என்று உறுதி செய்கின்றன
சகோ சிராஜூதீன்
இலக்கிய இலக்கணச் சான்றுகளுடன் தெளிவான முழுமையான விளக்கம் கொடேத்துள்ளார்
சிறப்பு பாராட்டுகள் வாழ்த்துகள்
விடை:
மானம் அவமானம், பெயர் அவப்பெயர் இரண்டும் தமிழ் சொற்களே.
விளக்கம்: மானம்
மானம் என்பது ஒருவரின் மதிப்பு சொல்லைக் குறிக்கும். மானம் போய்விட்டது என்றால் பிறர் தன்மீது கொண்ட மதிப்பு குறைந்து விட்டது என்று பொருள்.
அவமானம் = அவமதிப்பு = அவமரியாதை என்பது மதிப்பின்மை, மதிப்பு இழப்பைக் குறிக்கும். இவ்வாறு மதிப்பையும் மரியாதையும் இழத்தலே மானம் போனதாகச் சொல்லப்படுகிறது.
தன்மானம், அவமானம், பிடிமானம், தீர்மானம், பரிமானம் போன்ற இதன் உறவுச் சொற்களும் கூட அளவுப்பொருள் குறிப்பனவே! .
இலக்கண சான்று:
மானம் என்பது தமிழ் சொல் என்பதற்கான அத்தாட்சியாக தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியமும் பிற காப்பியங்களும் கீழ் கண்ட நிலையில் உறுதி செய்கின்றன
1. புகழு மானமு மெடுத்து வற் புறுத்தலும் (தொல்காப்பியம். பொ. 41)
2. மானந்தலைவருவ செய்பவோ (நாலடியார், 198)
3. வஞ்சியை மீட்கிலே னென்னு மானமும் (கம்பராமாயணம். சடாயுவுயிர்நீ. 145)
4. மெய்ந்நிலை மயக்க மான மில்லை (தொல்காப்பியம்.எழுத். 47)
அவமானம் :
அவமானம் என்றால், ஒருவரின் பெருமையைக் குலைத்தல், இகழ்ச்சிப்படுத்துதல், தூய்மையான மனதை குற்றப்படுத்தி களங்கப்படுத்துதல், ஆற்றலைக் கேலி செய்தல், உயர்வுக்குக் கேடு செய்தல், இருக்கும் நிலையில் இருந்து தாழ்த்திவிடுதல், மீள முடியாத சூழ்நிலையில் தள்ளிவிடுதல் என்ற வகையில் பொருள் கொள்ளலாம்.
அவம் என்ற சொல் எதிர் பொருள் (antonym) தரும் சொற்கள். இதன் பொருள் கீழான (low) என்பதே.
அவம் என்ற சொல் மருகி
அவநெறி, அவநம்பிக்கை, அவப்பெயர், அவ மதிப்பு, அவமானம், அவமரியாதை ஆகிய சொற்களில் முன்னொட்டாக உள்ளதாக பார்க்கப்படுகின்றது
இலக்கிய சான்று:
தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு
(அதிகாரம்:தவம் குறள் எண்:266)
II) பெயர்:
இங்கு பெயர் என்பது தொல்காப்பிய இலக்கணம் உரைக்கும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயரை உணர்த்தும் பெயர்ச்சொல் விளக்கத்தை கருத்தில் எடுத்துக்கொள்ள கூடாது .
இங்கு பெயர் என்பது தனி ஒருவருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ பொதுவாக நடத்தை அல்லது செயல்திறன் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் சமூக மதிப்பீட்டின் விளைவாக உருவாக்கப்பட்ட நற்பெயர் கெட்ட பெயர் (goodwill, reputation ) என்ற சொல்லாக பொருள் கொள்ளப்படும்
அவப்பெயர்:
அவப்பெயர் என்பது , கெட்ட பெயர், பழி, நிந்தை, களங்கம் (bad reputation) என்று பொருள்படும்
அவம் என்ற சொல் மருகி
அவநெறி, அவநம்பிக்கை, அவப்பெயர், அவ மதிப்பு, அவமானம், அவமரியாதை ஆகிய சொற்களில் முன்னொட்டாக உள்ளதாக பார்க்க படுகின்றது
இலக்கிய சான்று:
தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு
(அதிகாரம்:தவம் குறள் எண்:266)
------
சகோ செங்கை A சண்முகம் பெயரை விட்டு மானத்துக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்
வாழ்த்துகள் பாராட்டுகள்
சரியான...
தமிழ்ச் சொல்
தான்..!
இல்லையென்
றால்...நம் முப்பாட்டன்
திருவள்ளுவன்..
மானம் என..
ஓர் அதிகாரமே
வைத்து...அதற்குப்
பத்து குறள்கள்
எழுதியிருப்பானா?
மானம் அழிந்து..
மதி கெட்டுப்
போன திசை...
---ஔவையார்
உயிர் நீப்பின்..
மானம்...வரின்..
....திருக்குறள்.
மானம்...மதிப்பு
அவமானம்..
அவமதிப்பு..
சரியான..
தமிழ்ச்..
சொற்களே!
👍👍👍👏👏👏
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
உ௯ க உ‌ உ0உச
29122024 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment