Tuesday, 17 December 2024

திருமறை குரான் 11:44 13122024 வெ1ள்ளி





 திருமறை குரான்

11:44

13122024 வெ1ள்ளி
----பின்னர், "பூமியே! நீ உன் நீரை விழுங்கிவிடு; வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது:-----
இது குரானில் எந்த வசனத்தின் பகுதி?
விடை
சூராஹ் 11 ஹுத் வசனம் 44
பின்னர், "பூமியே! நீ உன் நீரை விழுங்கிவிடு; வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது: (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியம் முடிக்கப்பட்டது; (கப்பல்) ஜூதி மலை மீது தங்கியது: "அநியாயக்காரர்களான சமுதாயத்திற்கு (இத்தகைய) அழிவுதான்" என்று கூறப்பட்டது.(11:44)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்;
முதலில் சிறப்பு பாராட்டு
முதல் சரியான விடை அனுப்பிய
சகோ
ரவிராஜுக்கு
மற்றவர்கள்
ஹஸன் அலி
சிராஜுதீன்
ஷிரின் ஃபாருக்
ஷர்மதா &
தல்லத்
விளக்கம்
கப்பலோட்டிய நபி நூஹ் அவர்களின் நீண்ட வரலாற்றில் வரும் வசனம் இது
முன்பு பலமுறை விளக்கமாக எழுதியிருக்கிறேன்
இப்போது மிகச் சுருக்கமாக:
இறைவன் ஆணைக்கினங்க பலரின் கிண்டலை பொருட்படுத்தாது நூஹ் நபி அவர்கள் ஒரு கப்பல் கட்டுகிறார்கள்
கட்டுக்கடங்காத வெள்ளம் மழை
இறையச்சம் கொண்டோர் கப்பலில் ஏறித் தப்பிக்க
மற்றவர்கள் --நபி குடும்பத்தினர் சிலர் உட்பட
--- நீரில் மூழ்கடிக்கப் படுகிறார்கள்
பலநாள் பயணித்த கப்பல்
இறைவன் ஆணைப்படி மழை வெள்ளம் வடிந்த பின் ஜூதி மலை மீது தங்கியது:
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
11 ரபியுல் ஆகிர்(06) 1446
13122024 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment