Thursday, 26 December 2024

tதிருமறை குரான் 46: 19 27 12 2-924 வெள்ளி

 




tதிருமறை குரான்

46: 19
27 12 2024 வெள்ளி
----------------- அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு----------------
குரானின் எந்த வசனத்தின் பகுதி இது ?
விடை
சூரா 46 அஹ்காப் -மணல் திட்டுகள் வசனம் 19
gஅன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு –
ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் 46:19
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷர்மதா முதல் சரியான விடை
நெய்வேலி ராஜா -சிறு விளக்கத்துடன்
பீர் ராஜா -46:19,20 .6:132, &
சிராஜூதீன் -36:54
விளக்கம்
ஹுத் நபி மணல் மேடுகளில் வசிக்கும் தன் ஆது சமுதாயத்தினருக்கு மறுமை நாள் பற்றி எச்சரிக்கை செய்கிறார் . வசனம் 21.
இதில் வரும் அஹ்காஃபி என்ற சொல்லால் இவ்வத்தியாயம் அறியப்படுகிறது-(சகோ நெய்வேலி ராஜா)
“நாம் செய்த நல்ல செயல்கள் அனைததுக்கும் நிறைவான பலன் மறுமையில் கிடைக்கும்
அதே போல தவறுகளுக்கு அதற்கேற்ற கூலி கிடைக்கும்
செயல்களை பொருத்து நன்மையின் பலன் பன்மடங்காகப் பெருகலாம்
ஆனால் தவறுகளுக்கு கூடுதல் இன்றி அளவான தண்டனை கிடைக்கும் “
இது திருமறையில் பல இடங்களில் வரும் கருத்து
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
25 ஜமாதுல் ஆகிர் (6) 1446
27 122024 வெள்ளி
சரபுதீன் பீ
மடிக் கணினியில் புதிய தமிழ் எழுத்துரு -font இன்னும் பழகி வரவில்லை
பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment