Thursday, 19 December 2024

திருமறை குரான் 26 :14 28:33 20122024 வெள்ளி




 திருமறை குரான்

26 :14
28:33
20122024 வெள்ளி
மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்).(26:14)
இது குரானில் எந்தப் பகுதியில் வரும் வசனம்?
விடை
சூராஹ்26:அஷ்ஷுரா (கவிஞர்கள்) வசனம் 14
28 கஸ்ஸஸ் (வரலாறுகள்): வசனம் 33
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
தல்லத் (28:33)
முதல் சரியான விடை
ஹஸன் அலி
கத்தீபு மாமூனா லெப்பை
ஷர்மதா &
ஷிரீன் ஃபாருக் (28:33)
(அதற்கு) அவர், "என் இறைவா! நிச்சயமாக நான் அவர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டேன்; ஆகையால், அவர்கள் என்னைக் கொலைசெய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்" என்று கூறினார்(28:33)
விளக்கம்
நபி மூஸா அவர்களின் நீண்ட வரலாறு திருமறையில் திரும்பத் திரும்ப பல இடங்களில் வரும்
முன்பே அதை நான் எழுதியிருக்கிறேன்
இப்போது மிகச் சுருக்கமாக:
கொடுங்கோல் மன்னன் பிர் அவுனிடம் ஏக இறைத் தத்துவத்தை எடுத்துரைக்க
ஆணை வரும் மூசா நபி இறைவனிடம் சொல்கிறார்:
1 தனக்கு சரளமாக பேச வராது
அதனால் உடன்பிறப்பு ஹாரூன் துணைக்கு வரவேண்டும்
2 ஒரு கைகலப்பில் தன் இனத்தவர் ஒருவருக்கு ஆதரவாக எதிரியை மூஸா தாக்க . அந்த எதிரியின் உயிர் போய் விட
மூஸா அச்சத்தில் ஊரை விட்டு ஓடி விடுகிறார்
நீண்ட இடைவெளிக்குப் பின் நபியாக சொந்த மண்ணுக்கு திரும்பி வருகிறார்
பிர் அவுனிடம் போனால் கொலைக் குற்றத்துக்காக மரணதண்டனை கிடைக்கும் என்று அஞ்சுகிறார்
இறைவன் அவரைப் பாதுகாப்பதாக உறுதி அளித்து. துணையாக ஹாரூன் நபியை அனுப்புகிறான்
இவ்வளவு போதும் என்று எண்ணி பதிவை நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
18ஜமாத்துல் ஆகிர் 1446
20122024 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment