Monday, 16 December 2024

தமிழ் (மொழி) அறிவோம் போந்தை 0112 2024 ஞாயிறு





தமிழ் (மொழி) அறிவோம்

போந்தை
0112 2024 ஞாயிறு
தாவரம் ஒன்றைக் குறிக்கும் மூன்றெழுத்துச் சொல்
இடையில் உள்ளது மெல்லின ஒற்று
அதை நீக்கி விட்டால் மதி மயங்கும்
முதல் எழுத்து
வல்லின ஓகாரம (நெடில்)
என்ன அந்தச் சொல்?
விடை
போந்தை=
பனை;
இளம்பனைமரம்;
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
தல்லத். முதல் சரியான விடை
சிராஜுதீன்
விளக்கம்
சேரர், பாண்டியர், சோழர் ஆகிய மூவேந்தர்களின் அடையாளப் பூக்களான போந்தை (பனம் பூ), வேம்பு (வேப்பம்பூ), ஆர் (ஆத்திப்பூ) ஆகியன பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன
போந்தை வேம்பே ஆர்என வரூஉம்
மாபெருஞ் தானையர் மலைந்த பூவும் (புறத்திணை இயல். 5)
என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
0க கஉ உ0உச
0112 2024 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment