20112024 புதன்
ஷெனாய் நகர் புகாரியில்
நல்ல கூட்டம்
உறவினர் பலரை சந்திக்க முடிந்தது
உள்ளே வந்ததும் கொடுத்த பழச்சாறு
மதிய உணவு
சூப்பில் தொடங்கி பனிக் கூழ் வரை எல்லாமே தரமாக சுவையாக இருந்தது
பைசல் மாலை 5 மணி பேருந்தில் கடலூர் போக வேண்டும்
அதனால் உணவு சாப்பிட்டு சிறிது நேரத்தில் பைசலும் நானும் மெட்ரோவில் மகள் வீட்டுக்கு பயணித்தோம்
புகாரிக்கு மிக அருகில் செனாய் நகர் நிலையம்_ நிலத்தடி நிலையம்
இது நம்மூரா இல்லை வளர்ச்சி பெற்ற நாடா என்று வியக்க வைக்கும் சுத்தம்
சுத்தம் மட்டுமல்ல -
பயணிகள் வசதியை மனதில் வைத்து எல்லாம் மிக நேர்த்தியாக இருக்கிறது --
தெளிவான அறிவிப்புப் பலகைகள். தமிழிலும் ஆங்கிலத்திலும்
செயல்பாடுகள் முற்றிலும் கணினி மயம்
வண்டிகள் வருகை புறப்பாடு பற்றி தமிழிலிலும் ஆங்கிலத்திலும் ஒலிபெருக்கியில்
தொடரி நிலையத்தின் உயிரரோட்டமான சலசலப்பு சந்தடி கூட்டம் எதுவும் இல்லை
வண்டி வந்தவுடன்தான் நடைமேடை கதவுகள் திறக்கும்
வண்டிக்குள்
அடுத்த நிறுத்தம் எது எந்தப் பக்க கதவு திறக்கும் என்பது பற்றி ஒலி ஒளி அறிவிப்பு
இதற்கு முன் இருமுறை செய்ததில் நிலத்தடி நிலையம் பார்த்த நினைவில்லை
உண்மையில் மிக அழகான
பிரமிக்க வைக்கும் அமைப்பு
வண்டிக்கும் நடைமேடைக்கும் இடையில் இடைவெளியே இல்லாத அமைப்பு
ஆனால் இடைவெளியை கவனித்து இறங்கவும் என்ற எச்சரிக்கை
எனக்கு உடனே கடலூர் திருப்பாதிரிப்பூர் தொடரி நிலையம் நினைவில் வந்தது
வண்டியில் இருந்து இறங்குவது ஒரு வீரதீரச் செயல்தான்
கொஞ்சம் தவறினால் தண்டவாளத்தில் விழுந்து விடுவது போல் பெரிய இடைவெளி
எல்லா வண்டிகளும் நிலையங்களும் மெட்ரோ போல் ஆகக்கூடாதா ஆகமுடியாதா!!
ஒரேயொரு குறை செனாய் நகர் மெட்ரோ நிலயத்துக்குள் நீண்ட தூரம் நடக்க வேண்டும்
இதற்கு எதாவது செய்யலாம்
சென்னை மாநகர ஆணையராக இருந்த திரு
J P L ஷெனாய் I.C.S. அவர்கள் நினைவாக இந்தப் பகுதி ஷெனாய் நகர் என்று
பெயரிடப்பட்டது
ஷெனாய்
செனாய் என்று மாறியது காலத்தின் கட்டாயம்.
மேற்கொண்டு எதாவது மா(ற்)றாமல் இருக்குமா!?
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
20112024 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment