ஒரே ஒரு ஊரிலே
11122024 புதன்
மிகச் சிறப்பாக இயங்கி தொடர்ந்து லாபம் ஈட்டும் நிறுவனம்
போராட்டம் கதவடைப்பு வேலை நிறுத்தம் அறியாத ஒன்று
காரணம் நல்ல நிர்வாகம்
தொழிலாளர் நலனில் முழு அக்கறை செலுத்தும் முதலாளி
ஒரு காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் குழு காப்பீடு பற்றி முதலாளியிடம் விளக்குகிறார்கள் மிகக்குறைந்த ப்ரிமியம் என்பது குழுக்காப்பீட்டின் சிறப்பு
முதலாளி தொழிற்சங்க தலைவர்களை கலந்து பேச அவர்கள் உடனே சம்மதிக்கிறனர்
காரணம் ப்ரிமியம் தொகை நிர்வாகமே செலுத்தி விடும் என்று முதலாளி சொல்கிறார்
பிறகென்ன தொழிலாளர்கள் கூட்டத்தில் நிறுவனர்கள் தொழிற்சங்கத்தினர் காப்பீட்டு அதிகாரிகள் குழு காப்பீடு திட்டம் பற்றி விளக்குகிறார்கள்
ப்ரிமியம் தொகை நிறுலனமே செலுத்தும் என்பதால் அனைவரும் மகிழ்வுடன் சம்மதிக்கிறார் கள் -----
ஒரே ஒருவரைத் தவிர
காரணம் எதுவும் இல்லாமல் மறுக்கிறார் அவர்
சக தொழிலாளிகள்
சங்கத் தலைவர்கள்
மேல் நிலை அதிகாரிகள்
பொது மேலாளர் வரை அவரிடம் பேசிப் பார்த்து விட்டார்கள்
அவர் எதற்கும் மசிவதாகத் தெரியவில்லை
எல்லோருக்கும் சலிப்பு
ஏமாற்றம்
காரணம் குழு காப்பீட்டில் ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும்
100% இணைய வேண்டும்
இது மாற்ற முடியாத தவிர்க்க முடியாத விதி
கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் நழுவிப் போகிறது
இந்த நிலையில் முதலாளியின் அறைக்கு அழைக்கப் படுகிறார் பிடிவாதர்
போனவர் அடுத்த நொடியே வேகமாகத் திரும்பி வந்து
காப்பீடு பற்றிய எல்லா ஆவணங்களிலும் கையெழுத்துப் போடுகிறார்
எல்லோருக்கும் ஒரே வியப்பு
நாமெல்லாம் மணிக்கணக்காய் பேசிப் பார்த்தும் சம்மதிக்கவில்லை
அப்படி என்ன மந்திரம் போட்டிருப்பார் முதலாளி!!
நீங்களும் கொஞ்சம் சிந்தித்து விடை தெரிந்தால் எழுதி அனுப்புங்கள்
மிக எளிதான விடை
இறைவன் நாடினால் விரைவில் விடையுடன் முடிந்தால் இன்று இரவே சிந்திப்போம்
11122024 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment