Tuesday, 17 December 2024

திருமறை குரான் 4:28 06122024 வெள்ளி

 




திருமறை குரான்

4:28
06122024 வெள்ளி
-----மனிதன் வலிமையற்றவனாகவே படைக்கப் பட்டுள்ளான்-- --------திருமறையின் எந்த வசனத்தின் பகுதி இது?
விடை
சூராஹ் 4 அந்நிசா (பெண்கள்) வசனம் 28
அன்றியும், இறைவன் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்;. ஏனெனில் மனிதன் வலிமை அற்றவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.(4:28)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்:
சகோ
ஹசன் அலி. முதல் சரியான விடை
ஷர்மதா
தல்லத்
ஷிரீன் ஃபாருக்(30:54)&
இறைவன்தான் உங்களை
(துவக்கத்தில்) வலிமை அற்றவனாகவே படைக்கிறான்&
சிராஜுதீன்
விளக்கம்
இஸ்லாமிய (ஷரி அத்) சட்டம் என்பது மனித இனத்தின் அறிவு மனம் உடல் அமைப்புக்கு மிகவும் பொருத்தமான சட்டம் என்பதற்கு இந்த வசனம் ஒரு சான்றாக இருக்கிறது
உயர் நிலையில் இருந்தாலும் சர்வ அதிகாரம் கொண்டவனாக இருந்தாலும் உண்மையில் மனிதன் மிகவும் வலிமை அற்றவனாகவே இருக்கிறான்
தகுந்த சுற்றுப்புறசூழலும் அமைப்பும் இருந்தால் மட்டுமே அவன் உயிர் வாழ முடியும்
எனவேதான் மனிதன் புரிந்து கொண்டு நடக்கும் வகையில் இறைவன் சட்டங்களை எளிதாகவும் தெளிவாகவும் ஆக்கி இருக்கிறான்
அதனால்தான் இஸ்லாமிய சட்டங்கள் எந்தக் காலத்துக்கும் பொருந்தும் வகையில் இருக்கின்றன என்பது அறிஞர்கள் கருத்து
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
03 ஜமாதுல் ஆகிர் (6)1446
06122024 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment