வானங்களும் பூமியும் படைக்கப்படுமுன் இறைவனின் அர்ஷ் எங்கே இருந்ததாய் திருமறையில் வருகிறது ?
விடை
மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது...............(திருமறை 11:7)
நீர் என்பதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை .ஒரு நீர்மப்பொருளுக்கு ,குறிப்பாக உலகம் படைக்கப்படுவதற்கு முன்பு இருந்த நீர்ம நிலையைக் (fluid state)குறிப்பதாக இருக்கலாம்
.ஏக இறைவனின் அரசாங்கம் நீர் மேல் இருந்தது என்று பொருள் கொள்ளலாம்
சரியான விடை அளித்து வாழ்த்தும் பாராட்டும் பெறுபவர்கள்
சகோ ஞாழல் மலர் - சுருக்கமான முதல் விடை அனுப்பி சிறப்புப் பாராட்டுப் பெறுபவர்
சகோ ஹசினா நாசர் -மிக விளக்கமான விடை அளித்தவர்
சகோ அசன் அலி – இறை வசன எண் 11:7 என்று குறிப்பிட்டு சிறு விளக்கமும் அளித்தவர்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
22012021fri
Sherfuddin P
No comments:
Post a Comment