Wednesday, 27 January 2021

"ஆரையடா சொன்னாயது"

 

"ஆரையடா சொன்னாயது"
எந்தப்படலில் வரும் வரி இது ?பொருள் , விளக்கம் என்ன ?
விடை
"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."
இது பாடல்
இந்தப் பாடல் பற்றி பல செய்திகள் காணப்படுகின்றன -
ஔவையார் கம்பனைப்பர்த்துப் பாடியது , காளமேகப் புலவரைப்பார்த்துப் பாடியது, ஓட்டக்கூத்தரைபற்றிப் பாடியது என்று .
ஔவையார் ஒன்றுக்கு மேற்பட்டவர் என்றும் ஒரு கருத்து உண்டு .
இவற்றை எல்லாம் தாண்டி இந்தபாடலின் பொருளும் சுவையும் ரசிக்கத் தக்கவை
பொருளை பார்ப்போம்
தமிழ் எண்ணில் எட்டு என்பது “அ” என்று வரும் .கால் (1/4) “வ” என்று வரும் . எனவே எட்டே கால் லட்சணம் என்பது அவலட்சணம் என்று பொருள் படும்
எமனேறும் பரியே = எமனின் வாகனம்= எருமை
பெரியம்மை வாகனமே = மூத்த தேவியான மூதேவியின் வாகனமே -= கழுதை
கூரைஇல்லாத வீடு குட்டிச் சுவரைக் குறிக்கும்
குலராமன் தூதுவனே = அனுமன் = குரங்கு
ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரையென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள்படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.
கம்பர் ஔவையை நோக்கி ஆரைக்கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும்படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,
"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"
அந்த டீ க்கு பதிலடிதான் டா
ஆரைக்கீரை – ஒரு காம்பில் நான்கு இலைகள் இருப்பதாய்ச் சொல்லப்படுகிறது
இவ்வளவு விளக்கம் போதும் என எண்ணுகிறேன்
சரியான விடை அனுப்பி பாராட்டும் வாழ்த்தும் பெறும் தமிழ் ஆர்வலர்கள்
அஷ்ரப் ஹமீதா , ஆராமதி ,ஞாழல் மலர் , முத்துசாமி
செங்கை சண்முகம் , கணேச சுப்பிரமணியன் –(ஒரு ஆய்வுக்கட்டுரையே பதிவிட்டிருக்கிறார் )
மரு ,சந்த்ரசேகரன், சிராஜுதீன் , ராஜாராமன்
பெரும்பாலும் எல்லோருமே விரிவான விடை அனுப்பியிருக்கிறார்கள்
முயற்சித்த அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
27012020wed
Sherfuddin P

No comments:

Post a Comment