பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
எந்த நூல் , பாடல் ?
“முத்தைத்தரு பத்தித் திருநகை”
டி எம் எஸ்ஸின் கணீர் குரல் , தெளிவான உச்சரிப்பில் இந்தப்பாடலை வானொலியில் கேட்டதுதான் இந்தப்பாடலின் வரிகளைப் படித்துப்பார்க்க தூண்டுதலாக இருந்தது இல்ல்லாவிடால் இது போன்ற கடுமையான பாடல்கள் பக்கமே நான் போக மாட்டேன்
மிக நீளமான பாடல் .அதில் வரும் ஒரு வரிதான்
… பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே, என்ற பொருளில்
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
நூல்: அருணகிரி நாதர் இயற்றிய பக்தி நூலான திருப்புகழ்.இந்த நூல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைப்பாடல்கள் கொண்டது .இதில் உள்ள இசைத்தாளங்கள் இசை நூல்கள் எதிலும் அடங்காத் தனித்தன்மை பெற்றவை முருகன் மேல் பக்தி கொண்டோர் பின்பற்றும் நூல்
சரியான விடை எழுதி பாராட்டுப் பெறும் தமிழ் அறிஞர்கள்
சகோ. லியாகத் அலி கலீமுல்லா, கரம், சந்திர சேகரன் கோவிந்தசாமி , செங்கை சண்முகம் ,அசன் அலி, பாடி பீர் முகமது இதயத் , ரவிராஜ் , வேலவன்
மிக நீளமான பாடல் எனவே விரும்புபவர்கள் இணையத்தில் பார்த்துக்கொள்ளலாம்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சந்திப்போம்
06012021wed
Sherfuddin P
No comments:
Post a Comment