மூலிகைகள் பற்றி எழுதும் ஒவ்வொரு முறையும்
“இது மூலிகை அறிமுகம் மட்டுமே . மருத்துவக் குறிப்பு அல்ல .தகுதி,அனுபவம் வாய்ந்த மருத்துவரைக் கலக்காமல் எந்த மூலிகையும் பயன்படுத்தக்கூடாது என்ற ஒரு எச்சரிக்கை .விடுப்பேன்
இப்போது அந்த எச்சரிக்கையை வலியுறுத்தி ஒரு தனிப் பதிவு போடுகிறேன்
காரணம் அண்மைக் காலமாக வலைதளத்தில் வரும் செய்திகள் –
மிகவும் நச்சுத்தன்மை கொண்ட மூலிகைகள் பற்றிய மருத்தவக் குறிப்புகள்
ஆண்மைப்பெருக்கம் , முடி வளர்தல் பற்றிய குறிப்புகள் யாரையும் எளிதில் ஈர்க்கும்
கொடிய நச்சுத் தன்மை கொண்ட குன்றிமணி , ஊமத்தை போன்றவை இவற்றிற்கு தீர்வாகச் சொல்லப்படுகின்றன.
சரியான முறை அறியாமல் பயன்படுத்தினால் இவற்றால் உண்டாகும் எதிர் மறை விளைவுகள் மிகத் தீவிரமாக இருக்கும்
என் கருத்தை வலியுறுத்த ஒரு சில எடுத்துக்காட்டுகள்
எருக்கன்செடி எங்கும் கானாபடும் ஒரு நல்ல மூலிகை .ஆனால் அந்தச் செடியின்யின் பால் கையில் கண்ணில், பட்டால் பல நாட்களுக்கு அரிப்பு இருக்கும்
மிளகு நம் அன்றாடம் சமையலில் இடம் பெரும் மிகச் சிறந்த மருந்து
இது பற்றி ஒரு மருத்துவக் குறிப்பு இருக்கிறது
முதல் நாள் ஒரு மிளகு , அடுத்த நாள் இரண்டு , அதற்கடுத்து மூன்று என்று கூட்டி நாற்பதாவது நாள் நாற்பது மிளகு சாப்பிட்டால் உடல் வைரம் பாய்ந்தது போல் உறுதியாகி எந்த நோயும் அண்டாது
இதைப்படித்த ஒருவர் யாரையும் கேட்காமல் மிளகு சாப்பிடத் துவங்கி விட்டார்.
பதினைந்து நாளில் வாய், வயிறெல்லாம் புண்ணாகி , மருத்துவரிடம் போனார்
குறிப்பில் ஒன்றும் தவறு இல்லை .ஆனால் மிளகை தண்ணீரில், நீச்சுத் தண்ணீரில் புளித்த மோரில் பல நாட்கள் ஊறவைத்து , கழுவி பதப்படுத்தி பிறகுதான் உண்ணவேண்டும்
அது போல வாழைமரம் – எங்கும் காணப்படுவது –பூ, காய் ,பழம் இலை, தண்டு என எல்லாமே உண்ணக் கூடியவைதான்
ஆனால் வாழை இலைக்குளியல் என்றொரு வைத்திய முறை இருக்கிறது . இது ஒரு மிகவும் நுட்பமான முறை .மிக நன்றாகத் தெரிந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும்
இவ்வளவு ஏன் – தினமும் சாப்பிட்டால் நல்லது என்று சொல்லப்படும் இஞ்சியில் தோல் நஞ்சு (புற நஞ்சு) .கடுக்காயில் விதை நஞ்சு (அக நஞ்சு)
அது போல மிக நல்ல உணவாகவும் மூலிகையாகவும் நாம் அனைவரும் அறிந்த முருங்கை இலைச்சாறு பக்குவம் தவறினால் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்
வாழைத்தண்டு சாறு, எலுமிச்சை சாறு ,பச்சைத் தேநீர் எல்லாமே அளவோடுதான் பயன்படுத்த வேண்டும்
மீண்டும் சொல்கிறேன் எந்த மூலிகையும் நல்ல மூலிகைதான் மண்ணில் முளைக்கையில் .அது நன்மையா தீமையா என்பது நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்தது
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
23012021sat
Sherfuddin P
No comments:
Post a Comment