கிட்டன்சி (சு)ல இந்தச்சொல்லைக் கேட்டதுண்டா ?
பொருள் என்ன ? தமிழ்ச் சொல்தான்
விடை
அண்மையில்,அருகாமையில் என்ற பொருள் தரும் இந்தச்சொல் சென்ற தலைமுறையில் எங்கள் ஊரில் பேச்சு வழக்கில் புழங்கி வந்தது . எங்கள் அம்மா இந்தச் சொல்லை பயன்படுத்திக் கேட்டிருக்கிறேன்
அதன் பிறகு யாரும் இதை சொல்லிக்கேட்ட நினவு இல்லை
கிட்டன்ஸ்ல என்ற உச்சரிப்பில் வரும் இந்தச் சொல் எப்படி எங்கள் ஊர் பேச்சில் வந்தது என்று தெரியவில்லை .ஜ ,ஷ ஸ ஹ இதெல்லாம் எங்கள் பேச்சு வழக்கில் வராது ரோஜா ரோசாதான் ராஜா ர்சாசாதான் ஷாம்பூ சாம்பூதான்
ஓரு மகிழ்ச்சியான வியப்பு பலர் சரியான விடை அனுப்பியிருப்பது .
குறிப்பாக அடுத்த தலை முறையான என் மகள் சரியான விடை அனுப்பியிருப்பதில் ஒரு பெருமை
சரியான விடை அனுப்பி பாராட்டும் வாழ்த்தும் பெரும் தமிழ் அறிஞர்கள்
செங்கை சண்முகம் , மெகர்ஜோதி , சுராஜ், மெஹராஜ்,, பாப்டி கதீஜா ,மரு.சந்திரசேகரன் ,அசன் அலி ,இப்ராஹீம் அன்சாரி
பூனைக்குட்டி என்றும் சில விடைகள் வந்தன .முயற்சித்த அனைவருக்கும் நன்றி
.கூகிளில் இந்தச் சொல் தொடர்பான பதிவுகள் மூன்று கிடைத்தன
இந்தச் சொல்லின் மூலம் பற்றி தகவல் ஏதும் இல்லை .
தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
13012021wed
SherfuddinP
No comments:
Post a Comment