மாடிப்படியில் ஏறாதீர்கள் . கூடியமட்டும் எல்லாப் படிகளையும் தவிர்த்து விடுங்கள் . நடந்தோ வண்டியிலோ தனியே எங்கும் போகாதீர்கள .பிடித்த உணவுகளை விட உடலுக்கு உகந்த உணவுகளை உண்ணுங்கள் . தண்ணீர் அளவாகக் குடியுங்கள்
இது அண்மையில் ஊடகத்தில் நான் கண்ட பதிவு---மூத்த குடிமக்களுக்கானது ./மிகச் சுருக்கமாகக் கொடுத்திருக்கிறேன்
அறிவுரை சொல்லவேண்டியதுதான் , சொல்வதைக் கேட்க வேண்டியதுதான் அதற்காக இப்படி ஒரேடியாக எதிர்மறைக் கருத்துகளைக் கொட்டவேண்டுமா ?
நன்றாக நடமாடிக் கொண்டிருப்பவர்களைக் கூட முடக்கி விடும் இது போன்ற பதிவுகள்
உங்களுக்குத் தெரியுமா ? அறுபத்தி ஐந்து வயது கடந்தவர்கள் நூற்றுக்கு எட்டுப் பேர்தான் (8%). அதாவது நூற்றுக்குத் தொண்ணூற்று இரண்டு பேர் அறுபத்து ஐந்து வயதை எட்டிப்பார்ப்பதில்லை
எட்டில் ஒருவராய் இருப்பது எவ்வளவு பெரியு கொடுப்பினை அதை நினைத்து மகிழ்ந்து உற்சாகமாக வாழ்க்கையை கொண்டாடுங்கள்
இன்னும் ஒரு அருமையான செய்தி
உங்களுக்கு சொந்த வீடு இருக்கிறது ,நல்ல உணவும் குடி நீரும் கிடைக்கிறது .. இணைய வசதியுடன் கூடிய கைப்பேசி வைத்திருக்கிறீர்கள் .கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறீர்கள்
இவ்வளவு வசதிகள் உள்ளவர்கள் உலகில் மிகச் சிலர்தான் – நூற்றுக்கு ஏழு பேர்தான் .இப்போது நினைத்துப் பாருங்கள் – How blessed you are
உடல் இருந்தால் நோய் வரத்தான் செய்யும் .உள்ளம் இருந்தால் கவலைகள் வராமல் இருக்காது . உற்றார் உறவினர் –அவர்கள் யாராக இருந்தாலும் பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும் பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வுகளும் வரும் ஆனால் அவையெல்லாம் அப்படியே தங்கி விடுவதில்லை
கடந்த பத்து நாட்களாக தொடரந்து மழை--தூறல் , சிறுமழை பெருமழை,, கன மழை -அதோடு நடுக்கும் குளிர் – ஊட்டியா ,குற்றாலமா இல்லை வெளி நாடா என்ற எண்ணம் தோன்றியது
நேற்றிலிருந்து சுகமான வெய்யில் ,இதமான குளிர் –
மழை விட்டு விட்டது
இப்படித்தானே வாழ்க்கையும்
அலைகள் இருந்தாலும் படகு ஆடித் தவழ்ந்து வரும்
துயரம் இருந்தாலும் வாழ்வில் சுகமும் கலந்து வரும்
அந்த சுகத்தில் மயங்கி விடு இந்த உலகை மறந்து விடு இன்பச் சுவையில் உறங்கி விடு
என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
09012021sat
Sherfuddin P
No comments:
Post a Comment