கம்பன் கண்ட அனுமன்
பகுதி 2 நிறைவுப்பகுதி
இனி அனுமனின் நாவண்மையை ஆராய்வோம். சசுக்ரீவனின் அரண்மனையில் விருந்துண்ட இராமன் அவனது மனைவி அங்கு இல்லைஎன்பதை அறிகிறான்.
“பொருந்தும் நின் மனைக்குரிய பூவையைப் பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்”
என் போல் நீயும் மனைவியைப் பறி கொடுத்தவனா! என்று உள்ளம் நொந்து கேட்கிறான்.
இராமனது மனோநிலையைத் தன் நுண்ணறிவால் யூகித்துக்கொண்ட அநுமன், வாலி சுக்ரீவன் கதையைக் கூறுகிறான். வாலியும் துந்துபி என்னும் அரக்கனும் போர் செய்துக்கொண்டே பிலத்தினுட் சென்றதையும், அண்ணனுக்காகத் தம்பி பல நாட்கள் காத்திருந்தும் வராததால் அண்ணனைக் கொன்றிருப்பான் அரக்கன் எனக் கருதி அவ்வரக்கன், நாட்டிலும் புகுந்து தீங்கிழைக்கக்காவண்ணம் பிலத்தினை அடைந்ததையும் பின் அரசுரிமை ஏற்கப் பெரியோர்கள் வேண்டியும் மறுத்துத் தானும் அப்பிலத்தினுட் சென்று
“இயன்றால் என் அண்ணனைக் காப்பேன் அன்றேல், யானும் மாள்வேன்”
என்று கூறியதையும், வலியுறுத்தலின் பேரில் கோதிலான் நண்முடி கொண்டதையும்; வாலி மடியாமல் திரும்பிவந்ததுகண்டு மகிழ்ந்து தமையனிடம் அரசுரிமை ஒப்படைத்ததையும்; வாலி தான் வரக்கூடா தென்று வேண்டும்மென்றே பிலத்தை மூடியதாய் வெகுள
“ஆணை அஞ்சி இவ்வரசை எய்தி வாழ்
நாணிலா த என் நவையை நல்குவாய்”
என்று பிழைபொருக்க இறைஞ்சியதையும் மந்திரி பிரதானிகளும் தங்கள் கட்டாயத்தின் பேரிலேயே, முடி ஏற்றான் என்று கூறியும், சினம் தணியாது சுக்ரீவனைக் கொல்லத் துரத்தியதையும், அவன் மனைவியாகிய உரிமை என்பாளையும் பறித்துக் கொண்டதையும், பின்னர் சாபத்தால் வாலி வர இயலாத மலக்கு வந்து சேர்ந்து தாரத்தையும் இழந்து, இங்கு வாழ்வதையும், சாங்கோ பங்கமாகக் கூறி, தன் சொல்வன்மையால் எதிரியின்` வாய்சொல் இன்றியே இராமனே நம்ப வைத்தான்,சொல்லின் செல்வன் அனுமன்.
வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அரசுரிமை தருவேன் என்ற வாக்குறிதியும் இராமனிடம் பெற்று விட்டான். இத்தகைய சொல்வன்மை படைத்தவன் இச் சொல்லின் செல்வன்.
வாலி இவ்வனுமனுக்கு விரோதி என்பதை யாவரும் அறிவோம். அவ்வாறிருக்க அந்த வாலியே, அனுமனைப் பற்றி, என்ன கூறுகிறான் என்று பாருங்கள்:-
இராமபாணத்தால் தாக்குண்ட வாலி உயிர்துறக்கம் நிலையில் உள்ளான்; அப்போது இராமனிடம் கூறுகிறான்
“ஏ இராமா! உன் மனைவியைத் தூக்கி சென்ற அந்த அரக்கனை என் வாலிற் சுற்றி, உன்னிடம் கொண்டு வந்து நிறுத்த வாய்ப்பில்லாமல் என்னைக் கொன்றுவிட்டாய் ஆனது ஆகிவிட்டது எனினும் அவ்வாறு செய்ய வல்லவன் ஒருவன் இருக்கிறான்; அவன் தான் அனுமன்
'மற்று இலேன் எனினும், மாய அரக்கனை வாலின் பற்றி,
கொற்றவ! நின்கண் தந்து, குரக்கு இயல் தொழிலும் காட்டப்
பெற்றிலென்; கடந்த சொல்லின், பயன் இலை; பிறிது ஒன்றேனும்,
"உற்றது செய்க!" என்றாலும், உரியன் இவ் அனுமன். 136
என்று கூறிவிட்டு வாலி சிந்திக்கிறான்.
“என்ன இது! போயும் போயும் என் வலிமையைப் பெரியதாகப் பேசிவிட்டேனே! என்னைத்தான் இந்த இராமபாணம்ம் கொன்று விட்டதே! எனவே, அது வன்றோ என்னிலும் வலியது!
“என்று எண்ணுகிறான் அநுமனின் பலம் தன்னுடைய பலத்தைவிடச் சிறந்தது, என்று சிந்தித்து,
“இராமா! அநுமனை என்பலத்திற்கு இணைவைத்தது சரியல்ல அவன் உன்னுடைய பாணத்தை ஒத்தவன். அநுமனநென்பவனை ஆழி அய்யனின் செய்ய செங்கைத் தனவென நினைதி” என்று திருத்தி அஞ்சநேயனின் வலிமையை புகழ்கிறான் அநுமனின் ஆத்மீகத்தன்மைக்கும் கல்விக்கும் மற்றொரு சான்று கம்பன் தருகிறான். சீதை இருக்கும் இடம் தேடி அனுமனை அனுப்பும் போது சுக்ரீவன் கூறுகிறான்
"வழியிலே வேங்கடமலை வருகிறது. அம் மலையில் முனிவர்கள் மாதவர்கள் எல்லாம் வாழ்கிறார்கள். அம்மலையை அடைந்தாள் உன் போன்ற ஞானிகள் முக்தி அடைவர். எனவே, அம்மலையைத் தவிர்த்துச் சென்று விடு. கோடுறுமால் வரையதனைக் குறுகுதிரேல். நும் நெடிய கொடுமை நீங்கி வீடுறுதும்; ஆதலினால் அம்மலை விட்டு அப்பாற் போய் விடு" என்று கூறி
"அதற்கப்புறம். அகத்திய முனியின் தமிழ் சங்க மலையாகிய பொதிய மலை வருகிறது, கல்வியிற் சிறந்த நீ, அங்கே சென்றால் அதுவே உன்னுடைய உறைவிடமாகி விடும். அப்புறம் நம்மகாரியம் கெட்டு விடும். எனவே அம்மலைக்கு ஒரு கும்பிடுபோட்டு விட்டு விலகிப் போய் விடு. தென்றமிழ் நாட்டு அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்ப்பபீரேல் என்று அவன் உறை விடமாம்.
ஆதலினால் அம்மலையை இறைஞ்சி ஏகி அப்புறம் போய் வீடு, " என்று கூறி சுக்ரிவன் வாயிலாக அனுமனது மகாத்மியத்தை கம்பன் நமக்கு கூறுகிறான்:
இனி சுயம் பிரபை தவம் செய்த பிலத்தி நின்று, தானும் இதர வீரர்களும் விடுதலை அடைய விஸ்வரூபம் எடுத்து மலையைப்பிளந்து தோன்றிய காட்சி வியக்கத் தக்கது நூற்றிநாற்பது யோசனை தூரம் வளர்ந்தான். அந்த மலையைப்பிளந்து சமுத்திரத்தில் ஏறிந்தான் அச்செயல் கண்டு வானவர்களும் அஞ்சி நடுங்கினர்.
ஏழிருப தோசனை இடந்து படியின் மேல்
ஊழுற எழுந்தகளை உம்பரும் ஒடுங்க,
பாழி நெடுவன் பிழனுள் நின்று படர் மேல் பால்
ஆழியின் எரிந்தனுமன் மேகமென ஆர்த்தான்
இலங்கையை அடையாக் கடலைக் கடக்கும் ஆற்றல் அனுமனை தவிர வேறு யாருக்கும்
இல்லை என்று ஜாம்பவான் முதலியோர் முடிவு கட,
அதற்கு இசைந்த ஆஞ்சநேயர் தன் பராக்கிரமத்தில் சற்றும் இறுமாப்பு எய்தவில்லை தன்னைத்தாழ்த்தி வெகு அடக்கத்தோடும் வினயதோடும் கூறுகிறான்,
“பெரியவர்களாகிய நீங்கள், நினைக்கு முன்பே,சப்த சமுத்திரத் தையும் தாண்டி, சீதாப்பிராட்டியை மீட்க வல்லீர்! எனினும் எனது எளிமையை அறிய இப்பணிபுரியுமாறு அடியேனைப் பணித்துள்ளீர் இவ்வாய்ப் பினைப் பெற்றதால் எனினும் பாக்கியாசாலி யாரிருக்க முடியும் என்று கூறும் பொழுது நமக்கொலம் மெய்சிலிர்க்கிற்த்ல்லவா?
நீயிரே ! நினைவின் முன்னே நெடுந்திரைப் பறவையேழும் தாயுலக்கனைத்தும் வென்று தையளைத்தருத்தர் கொத்தீர்
போயிது புரிதி! என்று புலமைத்திர் புன்மை காண்டற்
கேயிநீர் எண்ணில், என்னிற் பிறந்தவர் யாவர் இன்னும்,
இனி அனுமன் கடல் கடக்கச் சித்தமாகிப் பேருருக் கொள்ளும் காட்சியைப் பார்ப்போம். அன்று உலகை அளந்ததல்லவா திருமாலின் பாதங்கள் அந்த அனுமனே என்பதை, உலகுக்கு அறிவிக்குமாபோல், பெரிய வடிவெடுத்து வானளாவ ஓங்கி நின்றான். கடல் தாவுகின்றானே அநுமன், அந்த காட்சியைத்தான் அத்துணை அழகாகக் கூறுகிறான் கம்பன்.
வாலை உயர எடுத்து விசைகிறான் , கால்களை மடக்கிக் கொள்கிறான் மார்பை ஒடுக்கி தோள்களை உயர்த்துகிறான் ,கழுத்து குருகுகிறது, தோள்கள் உயரும்போது கழுத்து சுருங்கித் தெரிகிறது. இரண்டு கைகளையும் முன் நீட்டி உயர எழுகிறான் உச்சி பிரம்மலோகத்தை அளாவுகிறது .எழும்போதே கண்களால் காண இயலாத வேகத்தோடு கிளம்புகிறான்
வால் விசைத்து எடுத்து, வன் தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, மாதை
தோள் விசைத் துணைகள் பொங்கக் கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்
கால் விசைத் தடக் கை நீட்டி, கண்புலம் கதுவா வண்ணம்
மேல் விசைத்து எழுந்தான், உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச-வீரன்.
இலங்கையில் ஒரு மலை இருக்கிறது .திரிகோணமலை என்று பெயர். இந்த மலையை நோக்கி ஒரு பெரிய மலை பறந்து வருகிறது .பறக்கும் மலையின் அருள்முகம் தந்தை முகத்தை ஒத்துள்ளது .மேலும் அது மேருமலை போல் விளங்குகிறது .எனவே மேருமலைதான் தன் புதல்வனாகிய திரிகோண மலையைக் காண ஆவலாக வருகிறதோ என கவி ஐயுருகிறான்
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலைச் சிறுவன்தன்னைக்
காணிய, விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான். 26
யார் ?
பிரம்மச்சாரியும் ,மலரில் தோன்றிய பிரம்மாவைக் காட்டிலும் அறிவு மிக்கவனும் அதர்மத்தை அழித்து தர்மத்தை உலகில் பரப்பவுதற்கு ஒர் அச்சாணி போன்றவனுமான அண்ணலாகிய அனுமன்
மாணி ஆம் வேடம் தாங்கி, மலர் அயற்கு அறிவு மாண்டு, ஓர்
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம், அறம் பொருள் நிரப்பும் அண்ணல்
வட திசையிலிருந்து தென்திசை செல்லும் சூரியன் போல் உற்பாதமாகவும் தோன்றினான் என்றார் .இலங்கைக்கு வரவிருக்கும் தீங்கினை எண்ணி அனுமன் உயரக் கிளம்பும்போதே கட்புலன் கதுவா வண்ணம் வேகமா எழுந்தான் . மேலும் அவன் பறந்த வேகத்துக்கு வேகமானி இல்லைஎன்றாலும் கம்பன் அமரர்களின் விமான வேகத்தை ஒப்பிட்டுக்காட்டி நமக்கு அந்த வேகத்தின் அளவை ஒருவாறு உணர்த்துகிறான் .அனுமன் பறக்கும் வேகத்தில் காற்று வெகு விரைவாக வீசுகிறது .அந்தக்காற்றுப்பட்டு வானவர்களின் விண்வெளிக் கப்பல்கள் ஒன்றோடொன்று மோதுண்டு உடைந்து கடலில் விழுந்து விடுகின்றன .அனுமனது வேகத்தால் தாக்கப்பட்ட காற்றின் வேகமே அந்த விமானங்களை கவிழ்த்தன என்றால் அனுமன் வேகத்தை என்னவென்று கூறுவது !
குன்றோடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள் குரக்குச் சீயம்,
சென்றுறு வேகத் திண் கால் எறிதர, தேவர் வைகும்
மின் தொடர் வானத்து ஆன விமானங்கள், விசையின் தம்மின்
ஒன்றோடு ஒன்று உடையத் தாக்கி, மாக் கடல் உற்ற மாத.
இங்கனம் பறந்து சென்று சீதாதேவியைக் கண்டு அவள் தன உயிரை மாய்த்துக்கொள்ளவிருக்கும் தருவாயில் இராம நாமம் கூறி அவளைக் காத்து சிரஞ்சீவிப் பட்டம் பெறுகிறான் பாழிய பனைத்தோள் வீரன் . ஒரு நொடியில் தேவியின் நல்லெண்ணத்தைப் பெற்று அவள் உள்ளக்கிடக்கை எல்லாம் கொட்டச் செய்கிறான்
கம்பன் கண்ட அனுமன் இத்துடன் நிறைவு பெறுகிறது
பின் குறிப்பாக என் குறிப்பு
அத்தாவின் எழுத்துக்கள் க க அ முதல் பகுதி வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது .
இதற்கு காரணங்கள் பல . முதல் பகுதிக்கு முக நூலில் விதித்த தடை .மிக சிரத்தை எடுத்து தட்டச்சு பண்ணி ஒவ்வொரு பாடலையும் இணையத்தில் சரிபார்த்து பதிவிடும்போது ஒரே சொல்லில் தடை என்று சொல்லி விடுகிறார்கள் இது மிகுந்த மன சலிப்பை உண்டாக்குகிறது
இறைவன் அருளால் தொடர்ந்து வெளியிட முயற்சிக்கிறேன்
02012021
Sherfuddin P
1 share
Like
Comment
Share
No comments:
Post a Comment