கடலில் மூழ்கடிக்கப்பட்டு உயிர் பறிக்கப்பட்ட கொடுங்கோல் மன்னன் பிர் அவ்னின் (Pharoah)உடலை பாதுகாப்பதாக இறைவன் கூறும் திரு மறை வசனம் எது ?
விடை
குரான் வசனம் 10:92
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (என்று அவனிடம் கூறப்பட்டது)
மிக நீளமானவை நபி மூசாவின் வரலாறும் அதோடு பின்னிப்பிணைந்த கொடுங்கோல் மன்னன் பிர் அவ்ன் வரலாறும் .ஏற்கனவே இவை பற்றிப் பல பதிவுகள் போட்டிருக்கிறேன் .
இப்போது இந்த வசனம் பற்றிய செய்திகளை மிகச் சுருக்கமாகபார்ப்போம்
இறைவன் தூதர்கள் மூசா ஹாரூன் இருவரும் எவ்வளோவோ எடுத்துச் சொல்லியும் ஆணவத்தின் உச்சியில் இருந்த பிர் அவ்ன் திருந்த மறுத்து தானே இறைவன் என்று அறிவிக்க கடலில் மூழ்கடித்து பிர்அவ்னின் உயிரைக் கைப்பற்றுகிறான் இறைவன்
அப்போதுதான் இந்த வசனம் இறக்கப்படுகிறது
பிர் அவ்ன் என்பது ஒரு தனி மனிதன் பெயர் அல்ல பொதுப்பெயர் .இன்றும் பிர் அவ்ன் உடல் எகிப்தில் உள்ள கெய்ரோ அருங்காட்சி அகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது
3000 ஆண்டுகள் கடந்து விட்டன ஆனால் இன்றும் கூட பிர் அவ்ன் உடல் கடலில் மிதந்த இடம்அங்குள்ள மக்ககளால் சுட்டிக்காட்கப் படுகிறது . பிர் அவ்ன் குன்று (Jabl-i-Firaun) என்று பெயருள்ள அந்த இடம் சினாய் தீபகற்பகத்தில் மேற்குக் கடற்கரையில் இருக்கிறது .அங்கிருந்து சில கல் தொலைவில் பிர் அவ்ன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட அபு ஜெனிமா Abu Zenimah என்ற இடம் இருக்கிறது . பிர் அவ்ன் பெயர் Mineptah,
10 :92 என்று மிகச் சுருக்கமான சரியான விடை அனுப்பிய
சகோ ஹசன் அலிக்கு வாழ்த்துகள் , பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
15012021fri
SherfuddinP
No comments:
Post a Comment