Friday, 1 January 2021

குரான் -கொடுக்கல் வாங்கல் 2:282

 கொடுக்கல் வாங்கல் பற்றிய விதிகள் திருமறையின் எந்தப்பகுதியில் வருகின்றன ?

விடை
2:282
சுருக்கமான சரியான விடையை எழுதி அனுப்பி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவராகிறார்
சகோ அசன் அலி
இந்த சுருக்கமான விடை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்
திரு மறையின் இரண்டாம் பகுதியில் 282 ஆம் வசனத்தில் கொடுக்கல் வாங்கல் பற்றி விரிவாக வருகிறது
திரு மறையியின் வசனங்களில் மிக நீண்ட வசனம் என்ற சிறப்பு இதற்கு உண்டு .
கடனாளியின் உரிமைகள் கடன் கொடுத்தவர் நடந்து கொள்ள வேண்டிய முறை , நீதி , நேர்மை ,ஆவணங்கள் , சாட்சிகள் இறையச்சம் என கொடுக்கல் வாங்கலின் விதிகள் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கிறது
அவற்றில் சில :
கொடுக்கல் வாங்கல் சிறிதோ பெரிதோ அதை கால வரையறையுடன் எழுதிக் கொள்ளுங்கள்
கடன் வாங்கியவர்தான் ஆவணத்தின் வாசகத்தை சொல்ல வேண்டும்
இறையச்சத்துடன் , எதையும் குறைக்காமல் அவர் சொல்ல வேண்டும்
இப்படி முழுக்க முழுக்க ஒரு சட்ட நூலின் வரிகள் போல் இருக்கும் இந்த வசனம் எந்த விதக் குழப்பத்துக்கும் இடம் கொடாமல் மிகத் தெளிவான ஒன்றாக இருக்கின்றது
விடை அளிக்க முயற்சித்த சகோ ரவிராஜுக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
01012021fri
Sherfuddin P
No photo description available.
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment