Saturday, 30 January 2021

நாகப்பட்டினம் , நாகர்கோயில் ------------


காரைக்குடியில் நான் எட்டாவதோ ,ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்தேன் . ஆண்டு விடுமுறை
எங்கள் வீட்டுக்கு வந்த எம். பீ சச்சா என்னையும் , தம்பி ஷஹாவையும் மாமா மகன் சக்ரவர்த்தியையும் சச்சா பணியில் இருந்த நாகர் கோயிலுக்கு அழைத்துச் சென்றது
ஏற்கனவே விடுமுறைக்கு வந்த அஜுமலும் அங்கு இருக்க , விடுமுறை மிக இனிதாகக் கழிந்தது .
முத்தக்கா , சச்சாவின் அன்பும் பாசமும் உபசரிப்பும் இன்றும் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது. .குமரி முனை , பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை என பல இடங்களுக்கு போய் வந்தோம் ..தினமும் பூங்காவுக்கு விளையாடப் போவோம்
திரும்பி நாங்கள் காரைக்குடி வரும்போது நிறைய முந்திரிப்பருப்பு , நேந்திரங்காய் வறுவல் வாங்கிக்கொடுத்து விட்டார்கள்
சச்சா புதுக்கோட்டையில் பணியில் இருக்கும்போது அங்கு போயிருந்தோம் .பிள்ளைகளோடு திருக் கோகர்ணத்தில் இருக்கும் அருங்காட்சியகம் போய் வந்தோம் . நிறைய தென்னை மரங்கள் ,சிறிய நீர் நிலை , பச்சைப் புல் வெளியென அந்த இடம் அருங்காட்சியகத்தை விட பார்க்க இனிமையாக இருந்தது
நாகூர் போகும்போது நாகப்பட்டினத்தில் சச்சா வீட்டுக்குப் போனோம் .வெளிப்பாளையத்தில் வீடு என நினவு
மேட்டூரில் நாங்கள் இருக்கும்போது சச்சா பணியில் இருந்த கிருஷ்ணகிரிக்கு அதிகாலையில் போனதாக ஒரு மெல்லிய நினவு
சச்சாவின் முகத்தில் எப்போதும் ஒரு புன்முறுவல். எங்கு போனாலும் அக்கா சச்சாவின் அன்பான உபசரிப்போடு சுவையான நிறைவான சாப்பாடு
பிள்ளைகள் ராஜா , அமீதா ,பர்ஜானா , ஷேக் , சையதா .ரசூலா ,ஹபீபா எல்லோரும் அதே போல் பாசம்,பிரியத்துடன் பழகுவார்கள்
பிறப்பதும் போவதும் மாற்ற முடியாத இறைவன் கட்டளை .
நிலைத்து நிற்பது நினைவுகள் மட்டுமே .
அந்த நினைவுகளில் சிலவற்றை பகிர்ந்து கொண்டு பதிவு செய்கிறன்
முத்தக்காவுக்கு வாழ்க்கை , மறைவு , அடக்கம் எல்லாம் இறைவன் அருளால் நல்ல சலாமத்தானதாக அமைந்தது ,அதே போல் நல்ல சலாமத்தான மண்ணறையும், கேள்விக்கணக்கும் ,மறுமையும் அமைய இறைவன் அருள்புரிவானாக
(எங்கள் பெரியத்தா மகள் ஹஜ்ஜானி முத்து மீராம்பீவி அவர்கள் 26012021 அன்று காலமானார்கள் . அவர்கள் நினைவாக இந்தப்பதிவு )
30012021
Sherfuddin P
Image may contain: food
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment