Sunday, 30 May 2021

English - Triage

 A word of 6 letters

3 are vowels
First half reminds a number; second half reminds numbers
The word, starting with T used in Warfield and medical field
was recently found in print media with reference to Covid 19
What is that word?
Answer
“Triage “
Meaning: assignment of degrees of urgency to wounds or illnesses to decide the order of treatment of a large number of patients or casualties.
Thanks to all those who attempted
31052021mon
Sherfuddin P
May be an image of one or more people and text that says "ENGLISH"
Like
Comment
Share

Friday, 28 May 2021

முத்ரா -லிங்க

 



முத்திரை பதிப்போம்

ஆக்சிஜன அளவை அதிகரிக்க
லிங்க முத்ரா
யோகாவின் ஒரு பகுதியாகிய முத்திரைகள் பற்றி
அறிமுகம், விளக்கம் எல்லாம் பின்பு விரிவாகப் பார்ப்போம்
இப்போதைய அவசர அவசியத் தேவயான ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் லிங்க முத்ரா பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்
லிங்க முத்ரா செய்யும் முறை
வசதியாக உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு ஓரிரு முறை ஆழ்ந்து மூச்சு விடுங்கள்
(Deep Breathing)
உள்ளங்கைகளை இறுக்கமாக ஓன்று சேர்த்து விரல்களை ஒன்றோடு ஓன்று பின்னிக்கொள்ளுங்கள்
இடது பெருவிரல் மேலே நீட்டிகொண்டிருக்க வேண்டும் .வலது பெருவிரலும் வலது ஆட்காட்டி விரலும் இடது பெரு விரலைச் சுற்றி இருக்க வேண்டும்
அவ்வளவுதான்
அப்படியே முடிந்தால் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு முப்பது நிமிடம் வைத்திருங்கள் .
முடியாவிட்டால் ஒரு பத்துப் பன்னிரண்டு நிமிடம் .இது போல் ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யுங்கள். மூச்சு இயல்பானதாக் இருக்கட்டும்
இந்திய தொழில் நுட்பக் கழகம்(IIT) சென்னை உயிரியல் மருத்துவ பொறிஇயல் துறை (Bio Medical Engineering Dept)
லிங்க முத்திரை பற்றி ஒரு ஆய்வில் முத்திரையின் பய்னகளாகக் கண்டவை
ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பம்,குருதி ஓட்டம்
அதிகரிக்கிறது
நுரை ஈரல் விரிவடைகிறது
அதோடு உடல் வெப்பமும் அதிகரிக்கும்போது . நுரையீரலில் தேங்கியுள்ள நீர் கரைந்து சுவாசிக்கும் திறன் இ யல்பாக அதிகரிக்கிறது
உடல் பருமனைக் குறைக்கவும் லிங்க முத்ரா பயன்படுகிறது
காசு பணம் செலவில்லை .மருந்து மாத்திரை இல்லை அதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை
உடலை வருத்தும் பயிற்சிகளும் இல்லை
பிறகென்ன செய்துதான் பார்ப்போமே
முத்திரைகள் பற்றி தொடராக எழுதவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
29052021sat
Sherfuddin P
Like
Comment
Share

Thursday, 27 May 2021

குரான் -18:61,63

 “வியப்பான முறையில் அது (மீன்) கடலுக்குள் சென்று விட்டது “

என்ற கருத்துள்ள திருமறை வசனம் எது ?
விடை
18:61
இரு கடல்கள் சந்திக்கும் இடத்தை அவர்கள் இருவரும் மீனை மறந்து விட்டார்கள் . அது (மீன்) கடலுக்குள் நழுவிப் போய் விட்டது
18;63
“நான் மீனை மறந்து விட்டேன். கற்பாறையில் நாம் ஒய்வு எடுத்தபோது மீன் ஒரு வியப்பான முறையில் கடலுக்குள் போய் விட்டது “ என்று பணியாள் (மூசாவிடம் ) சொன்னார்
சிறு விளக்கம்
குகை மனிதர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு இறை மொழி (வஹி) மறுக்கப்பட்டது, மூஸா நபி கிதர் எனும் இறை அடியாரைத் தேடி மேற்கொண்டஒருபயணம்,கிதரின் செயல்களுக்கு மூஸா நபி எதிர்ப்புத் தெரிவித்தது துல் கர்னைன் எனும் அரசன்
என பல மிக நுட்பமான செய்திகளைச் சொல்வது சுராஹ் 18 –அல் காப் – குகை –
அதில் ஒன்றுதான் மீன் பற்றிய செய்தி
நான் படித்து விளங்கிக் கொண்ட செய்தி/ விளக்கம்
மூசா நபி இரு கடல்கள் சந்திக்கும் ஒரு இடத்துக்கு நீண்ட- ஆண்டுகள் பல ஆகக்கூடிய ,சிரமமான பயணத்துக்கு ஆயத்தமாகி தன் பணியாளுடன் புறப்படுகிறார்.
அந்த இடம் வரும்போது, அவர்கள் உணவுக்காக வைத்திருந்த (சமைத்த ) மீன் கடலுக்குள் நழுவிப்போய் விடுகிறது
இதை மூசா கவனிக்கவில்லை
எனவே அந்த இடத்தைத் தாண்டிப்போய் களைப்பாகி ஒரு இடத்தில் ஒய்வு எடுக்கிறார்கள் . அப்போது மூசா பணியாளிடம் சாப்பிட மீனைக் கொண்டு வரும்படி சொல்ல,அப்போதுதான் பணியாள் “எப்படியோ மறந்து விட்டேன் . நாம் பாறையில் ஓய்வு எடுக்கும்போது மீன் ஒரு அற்புதமான முறையில் கடலுக்குள் போய் விட்டது “
என்று சொல்கிறார்
அதுதான் தான் செல்ல வேண்டிய இடம் என இறைவன் அடையாளம் காட்டியிருக்கிறான் என்று மூசா உணர, இருவரும் வந்த வழியே திரும்பி அந்த இரு கடல்கள் சந்திக்கும் இடத்துக்குப் போகிறார்கள்
அங்கு இறைவனின் அருளும் ஞானமும்
பெற்ற அடியார் ஒருவரை (அல் கிதர்) மூஸா சந்தித்து அவரிடம் கல்வி கற்பது ஒரு தனிக்கதை
கடலுக்குள் போனது உயிர் மீனா இல்லை சமைத்த மீனா என்பது பற்றி திருமறையில் குறிப்பு எதுவும்
இல்லை
ஆனால் வசனம் 18:63ல் அற்புதம், marvel என்ற பொருள் கொண்ட அஜபா
AAajabaعَجَبًا
என்ற அரபுச் சொல் இந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறது
ஒரு உயிர் மீன் துள்ளிக் குதித்து கடலுக்குள் போவதில் அற்புதம் ஒன்றும் இல்லை
எனவே நபி மூஸாவுக்கு அவர் போக வேண்டிய இடத்தை சுட்டிக் காண்பிக்கும் வகையில் இறைவன் சமைத்த மீன் துள்ளிக் குதித்து கடலுக்குள் போகும் அற்புதத்தை நிகழ்த்துகின்றான் என்பது அறிஞர்கள் கூறும் விளக்கம்
(Source Overview (Verses 60 - 65))
இது பற்றிய வினாவையும் விடையும் திருமறை குறிப்புகளில் பதிவு செய்திருந்தேன்
விடை தெளிவாக இல்லை சென்று சகோ ஞாழல் மலர் குறிப்பிட்டிருந்தார்
இப்போது எனக்கு விளங்கிய தெளிவை நான் பகிர்கிறேன்
இதில் தவறுகள், விடுதல்கள் இருந்தால் (இறைவன் மன்னிப்பானாக) சுட்டிக்காட்டும்படி கேட்டுக்
கொள்கிறேன்
சரியான விடை அனுப்பிய சகோ பாடி பீர், முனைவர் பாஷாவுக்கு வாழ்த்துகள் ,பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும்சிந்திப்போம்
28052021fri
Sherfuddin P
No photo description available.
Like
Comment
Share

Tuesday, 25 May 2021

மனப்பசி -புலிமியா

 மனப்பசி

நாலைந்து இட்லி என் வழக்கமான காலைச் சாப்பாடு. சட்னி, சாம்பார் மிக சுவையாக இருந்தால் ஒன்றிரண்டு கூடலாம் . உற்றார் உறவினருடன் சேர்ந்து சாப்பிடும்போது ஒரு உற்சாகத்தில் எப்போதாவது அதையும் தாண்டிப் போகலாம்.
ஆனால் நாள்தோறும் தவறாமல் சொல்லி வைத்தது போல் இருபத்தி ஓன்று சாப்பிட்டால் ?
ஆம் அப்படி ஒருவர் இருந்தார் .அறுபதுகளில்
எங்கள் வீட்டுக்கு அடுத்து ஒரு ஆச்சிவீட்டு உணவகம் ( மெஸ் )._
35 ரூபாய்க்கு மாதம் முழுதும் மூன்று வேளை உணவு, வாரம் இருமுறை அசைவத்தோடு
அங்கு ஒருவர் காலை சிற்றுண்டி – அது இட்லி தோசை எதுவாக இருந்தாலும் இருபதுக்கு மேல்- சரியாக இருபத்தி ஓன்று சாப்பிடுவார் – தினமும் ஒரு நாள் விடாமல்
அடுத்து
(1985)
வடநாட்டில் என்னுடன் பணியாற்றிய தமிழக நண்பர் ஒருவர் அவர் சாப்பிடும் அழகே தனி
மலைபோல் சோறைக் குவித்து வைத்துக்கொண்டு , அங்கே கிடைக்கும் பருப்பை (தால்)வைத்தே முடித்து விடுவார் .அதற்கப்புறம் சில பல சப்பாத்திகள் . இதுவும் அன்றாட நிகழ்வு
ஒன்னரை ரூபாய்க்கு அளவில்லா சாப்பாடு
(2010) தமிழ் நாட்டில் காதில் விழுந்தது - ஒரு வங்கி மேலாளர்- முதலில் ஒரு வட இந்திய மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் சாப்பிடும் அளவு கட்டுபடியாகாமல் அவரை வெளியேற்றி விட்டார்கள் . அதற்காக அவர் மனம் தளரவில்லை .
வேறு உணவு விடுதியில் முழுச் சாப்பாடு வாங்கி விடுதிப் பணியாளர் முகம் திரிந்து நோக்கும் வரை சாப்பிட்டு விட்டு உடனே அடுத்த உணவு விடுதிக்குப் போய் அங்கேயும் இதே போல் முழுச்சாப்பாடு
வேறு வேறு இடங்கள், வேறு வேறு காலங்களில் நடந்த இந்த நிகழ்வுகள் தொடர்புடைய ஒரு சொல்- ஆங்கிலச்சொல், அறிவியல் சொல் .
அது என்ன ?
விடை
புலிமியா (Bulimia/ Bulimia nervosa)
சரியான விடை எழுதிய
பாப்டி கதீஜாவுக்கு
வாழ்த்துகள்
, பாராட்டுகள்
முயற்சித்தவர்களுக்கு நன்றி
புலிமியா
இது ஒரு உளவியல் பிரச்சினை
புலிமியா உள்ளவர்கள்
கட்டுப்பாடு இல்லாமல் மிக அதிகமான அளவில் ஒரு நேரத்தில் உணவு உட்கொள்வார்கள்
என்றாவது ஒரு நாள் அல்ல, தினமும்,
இது பற்றி ஒரு நான் படித்த ஒரு சில செய்திகள்
இது ஆண்களை விட பெண்களில் அதிகம் காணப்படுகிறது
புலிமியா உள்ளவர்கள் மிகவும் மன அழுத்தம் உள்ளவர்களாய் இருப்பார்கள்
அளவுக்கு மீறி அவரகள் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்த்து விடக்கூடாது என்று நினைப்பார்கள்
உடல் பெருத்துவிடும் என்ற அச்சத்தில் உண்ட உணவை உடனே வெளியேற்றுவார்கள் .அதனால் பல உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்
இன்னும் நிறைய செய்திகள் சொல்லப்படுகின்றன .
ஆனால் அவையெல்லாம் நம் நாடு, நம் ஊர் அளவில் உண்மையா என்று தெரியவில்லை
உளவியல் நூல்கள் பெரும்பாலும் ,மேற்கத்திய அறிஞர்கள் ஆசிரியர்கள் எழுதியவைதான் இங்கும் படிக்கப்படுகின்றன
எனவே புலிமியா என்ற சொல்லையும் ,அதிக அளவில் உணவு உட்கொள்வது என்று அதற்குப் பொருள் என்றும் தெரிந்து கொள்வோம்.
புலிமியாவுக்கு எதிர்ச் சொல் போல் இருக்கும் உளவியல் பிரச்சினை
அனோரெக்சியா – anorexia nervosa
பசியே இல்லாத நிலை
இது பற்றி பின்பு பார்ப்போம்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
26052021wed
Sherfuddin P


Bulimia A few more points as you required As said earlier I doubt how much these are applicable in our country You can take as much you want and leave others புலிமியா அறிகுறிகள் 1 புலிமியா தாக்கம் 11 வயதில் இருந்து 25 வயது வரை உள்ளவர்களிம் அதிகம் காணப்படுகிறத 2.கடுமையான உணவக்கட்டுப் பாட்டில் இருந்தவர்கள் உடல் எடை குறைந்தவர்களிடம் இதன் தாக்கம் அதிகம் 3. சிறிய மாறுதல்களுடன் உடல் எடை சீராக இருக்கும் 4.கையின் பின்புறத்தோல் தடியாக இருக்கும் 5 பல் மேல் பூச்சு (எனாமல்) தேய்ந்து பல்சொத்தையாகும் 6. சரியான ஊட்டச்சத்து இல்லாமல் அதிக சோர்வு உணவுப் பழக்கங்களும் மற்ற செயல்பாடுகளும் 1 கடுமையான உணவுக்கட்டுப்பாட்டைத் தொடர்ந்து அதிக அளவில் உண்ணுதல் 2 சாப்பிட்டு உடனே கழிவறை போவது 3. வயிறை சுத்தம் செய்ய அதிக உடல் பயிற்சி மருந்து மாத்திரைகள் மூலம் உணவை வெளியேற்றுதல் 4 பிறர் பார்க்காமல் மறைத்து உண்ணுதல் . விழா விருந்துகளைத் தவிர்த்தல் உளவியல் அறிகுறிகள் 1 உடல் பயிற்சி உணவுக் கட்டுப்பாடு.உடல் எடையில் மிக அதிக அளவில் கவனம் செலுத்துதல் 2 மனச்சோர்வு தனிமை.லெறுமையாக உணர்தல் 3.தாழ்வு மனப்பாங்கு சாப்பிடும் அளவு. முறை தவறு என்ற உணர்வு With best wishes Sherfuddin P 10102021

May be an image of food
Like
Comment
Share