Thursday, 20 May 2021

குரான் 18:35

 “இந்தத் தோட்டம் அழிந்து போகும் என்று எனக்குத் தோன்றவில்லை “

எதில் வரும் வசனம் இது ?
விடை
18:35 அவர் (இறைவனை மறந்து) தனக்குத்தானே தவறு செய்தவராக தன் தோட்டத்தைப் பார்த்து சொன்னார் :”இந்தத் தோட்டம் என்றும் அழிந்து போகும் என்று எனக்குத் தோன்றவில்லை “
சிறு விளக்கம்
சுராஹ் 18(32—44)
இறைவனை மறந்து ,அவனால்தான் எல்லாம் நடக்கிறது என்பதை மறந்து ,செழித்து வளர்ந்த தன் தோட்டத்தைக் கண்டு பெருமிதமும் ஆணவமும் கொண்டு “ இது சுவனத் தோட்டம் போல் அழிவில்லாத ஓன்று . மறுமை என்று ஓன்று இருந்தால் அதிலும் இதையே நான் அடைவேன் “ என்று எண்ணிய ஒருவரின் தோட்டத்தை முற்றிலுமாக அழித்து விடுகிறான் இறைவன்
இதே சூராவில் நபி ஸல் அவர்கள்” இறைவன்நாடினால் “
என்று சொல்லாமல் ஒரு செயல் பற்றி வாக்களிக்க , இறைவன் நபி அவர்களை கண்டித்ததும் தண்டித்ததும்
பற்றி வருகிறது (18:23,24)
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
21052021 fri
Sherfudddi P
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment