$ ட்ரில்லியன்/2
ஈகைத் திருநாள் சிந்தனைகள் சில
– பல தடவை சொன்னதுதான் – திரும்பச் சொல்லாமல் இருக்க முடியவில்லை
அண்மையில் கட்செவியில் கண்ட ஒரு செய்தி
உலகில் மிகப்பெரிய அளவில் செய்யப்படும் தருமம்
இசுலாமிய சக்காத்துதானாம் –ஆண்டுக்கு
அரை ட்ரில்லியன் டாலர்
அதாவது
ஐம்பது ஆயிரம் கோடி டாலர்
அதாவது
இந்திய ரூபாயில்
முப்பத்தி ஐந்து லட்சம் கோடி
3,50,00,00,00,00,000
(உலகில் உள்ள ஒவ்வொரு இசுலாமியருக்கும் ரூ.20000/ கொடுக்கலாம்)
பெருக்கல, ௦௦ எல்லாம் சரிதானே
நம் நாட்டில், நம் தமிழ் நாட்டில் , நம்மூரில் எவ்வளவு என்று தெரியாது
இவ்வளவு பெரிய தொகை எந்த வழியில் செலவாகிறது ?
ஒரு இசுலாமிய இலவச மருத்துவ மனை, பள்ளி , கல்லூரி என எங்குமே கண்ணில் படவில்லையே ஏன் ?
பெருந்தொகையில் ஒரு சிறிய பகுதியாவது இது போன்ற நிறுவனங்கள் தொடங்க பயன் படுதப் படலாமே ?
தடுப்பது எது ?
புரியவில்லை
இல்லை என் கேள்வியே தவறா தெரியாவில்லை
மீண்டும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்
நேற்று கு கு பகுதி 30ல் கேட்ட வினா
சூராவில் இல்லாத ஒரு சொல்லைத் தலைப்பாகக் கொண்ட சூராஹ் எது ?
சூராஹ் 112- அல் இக்லாஸ்
சரியான விடை அனுப்பிய பர்வேஸ் அஹமதுக்கு வாழ்த்துகள் ,பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
No comments:
Post a Comment