மனப்பசி
நாலைந்து இட்லி என் வழக்கமான காலைச் சாப்பாடு. சட்னி, சாம்பார் மிக சுவையாக இருந்தால் ஒன்றிரண்டு கூடலாம் . உற்றார் உறவினருடன் சேர்ந்து சாப்பிடும்போது ஒரு உற்சாகத்தில் எப்போதாவது அதையும் தாண்டிப் போகலாம்.
ஆனால் நாள்தோறும் தவறாமல் சொல்லி வைத்தது போல் இருபத்தி ஓன்று சாப்பிட்டால் ?
ஆம் அப்படி ஒருவர் இருந்தார் .அறுபதுகளில்
எங்கள் வீட்டுக்கு அடுத்து ஒரு ஆச்சிவீட்டு உணவகம் ( மெஸ் )._
35 ரூபாய்க்கு மாதம் முழுதும் மூன்று வேளை உணவு, வாரம் இருமுறை அசைவத்தோடு
அங்கு ஒருவர் காலை சிற்றுண்டி – அது இட்லி தோசை எதுவாக இருந்தாலும் இருபதுக்கு மேல்- சரியாக இருபத்தி ஓன்று சாப்பிடுவார் – தினமும் ஒரு நாள் விடாமல்
அடுத்து
(1985)
வடநாட்டில் என்னுடன் பணியாற்றிய தமிழக நண்பர் ஒருவர் அவர் சாப்பிடும் அழகே தனி
மலைபோல் சோறைக் குவித்து வைத்துக்கொண்டு , அங்கே கிடைக்கும் பருப்பை (தால்)வைத்தே முடித்து விடுவார் .அதற்கப்புறம் சில பல சப்பாத்திகள் . இதுவும் அன்றாட நிகழ்வு
ஒன்னரை ரூபாய்க்கு அளவில்லா சாப்பாடு
(2010) தமிழ் நாட்டில் காதில் விழுந்தது - ஒரு வங்கி மேலாளர்- முதலில் ஒரு வட இந்திய மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் சாப்பிடும் அளவு கட்டுபடியாகாமல் அவரை வெளியேற்றி விட்டார்கள் .
அதற்காக அவர் மனம் தளரவில்லை .
வேறு உணவு விடுதியில் முழுச் சாப்பாடு வாங்கி விடுதிப் பணியாளர் முகம் திரிந்து நோக்கும் வரை சாப்பிட்டு விட்டு உடனே அடுத்த உணவு விடுதிக்குப் போய் அங்கேயும் இதே போல் முழுச்சாப்பாடு
வேறு வேறு இடங்கள், வேறு வேறு காலங்களில் நடந்த இந்த நிகழ்வுகள் தொடர்புடைய ஒரு சொல்- ஆங்கிலச்சொல், அறிவியல் சொல் .
அது என்ன ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
25052021tue
Sherfuddin P
No comments:
Post a Comment