Tuesday, 18 May 2021

தாக்கு/ தப்பி ஓடு Fight or Flight response

 “தாக்கு / தப்பி ஓடு “

இது எதைக் குறிக்கிறது ?
விடை
Fight or Flight Response
இந்த ஆங்கிலச் சொற்களைப் பார்த்ததும் பலருக்கு விடை தெளிவாயிருக்கும்
சரியான விடை அனுப்பிய
சகோ ஸ்ரீனிவாசன் ராமசாமிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
முயற்சித்த அனைவருக்கும் நன்றி
புலியை முறத்தால் அடித்துத் துரத்திய வீரப்பெண் பற்றி சங்க இலக்கியம் சொல்கிறது
இது உண்மையா இல்லை மிகைப்படுத்தப்பட்டசெய்தியா என்பதில் உடன்பாடு ஏற்படவில்லை
ஆனால் விறகால் புலியை விரட்டி புலி கவ்விய தன் மகளைக் காப்பாற்றிய தாய் பற்றி செய்தி ஓன்று சில காலம் முன்பு முகநூலில் வந்தது
இரண்டு செய்திகளுமே ஒரு அறிவியல் அடிப்படையில் உண்மை ஆகின்றன
“தாக்கு / தப்பி ஓடு “
Fight or Flight response
முதலில் fight or flight என்ற பெயருக்குள்ள எடுத்துக்காட்டைப் பார்ப்போம்
காலத்துக்கு ஒவ்வாத எடுத்துக்காட்டுதான்
ஒரு காட்டு வழியே நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள் சிறிதும் எதிர்பாராமல் ஒரு புலி எதிரே வருகிறது இப்போது இரண்டு வழிகள் உங்களுக்கு . ஓன்று புலியோடு போராடலாம் அல்லது தப்பித்து ஓடலாம்
இரண்டுக்குமே புலியின் வலிமை , வேகம் இவற்றை மிஞ்சும் அளவுக்கு உடலுக்கும் மனதுக்கும் மிகப்பெரிய அளவில் வலிமை தேவைப் படுகிறது . மிகக்குறுகிய காலத்தில் ., நொடிப்பொழுதில் இந்த வலிமையை வழங்குவது எது ?
இன்னொரு எடுத்துக்காட்டு
இரவில் வெகு தொலைவு நடந்து களைத்துப்போய்
. சற்று இளைப்பாற ஒரு இடத்தில் உட்காரும்போது எதிர் பாராமல் ஒரு நாய்க்கும்பல் உங்களைப் பார்த்து உறுமிக் கொண்டிருக்கிறது . கடித்து விடுமோ என்று ஒரு அச்சம் பரவுக்கிறது .
இப்போது ஓன்று நீங்கள் தப்பி ஓடவேண்டும் . இல்லை நாய்களை விரட்ட வேண்டும்
இதற்கான வலிமையை உங்களுக்கு கொடுப்பது எது ?
இறைவன் படைத்த மிகப்பெரிய அற்புதங்களில் ஓன்று நம் உடல்
கண் காது மூக்கு என வெளி உறுப்புகள் ஆகட்டும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளே இயங்கும் இதயம் நுரையீரல் போன்றவை ஆகட்டும் ஒவ்வொன்றும் பொறியியல் அறிவியல் என எல்லா இயல்கள் சேர்ந்தாலும் உருவாக்க முடியாத அற்புதங்கள்
தாக்கு அல்லது தப்பி ஓடு என்று ஒரு உடல் உறுப்பு இருக்கிறது fight or flight hormone என அழைக்கப்படும் அட்ரீனல் சுரப்பிதான் அது
முன்பு ஒரு பதிவில் நாளம்இல்லாச் சுரப்பிகள் பற்றி எழுதியிருந்தேன் பேறுகாலத்தில் அவை எவ்வாறு வலியை மறக்க உதவுகின்றன என்று குறிப்பிட்டு இருந்தேன்
உடல் நலம் மன நலம் உடல் வளர்ச்சி மன வளர்ச்சியில்
இந்தச் சுரப்பிகள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன இவை பற்றி மிக விரிவாக எழுதலாம்
இப்போது அட்ரீனலின் என்ற அற்புத சுரப்பி பற்றி முடிந்த அளவு சுருக்கமாகபார்ப்போம்
அட்ரீனலின் என்றால் என்ன என்ற அறிவியல் வரையறையைப் படிப்பதை விட அது என்ன செய்கிறது , எப்படி செயல்படுகிறது என்பதைபார்த்தால் எளிதில் விளங்கும்
மேலே சொன்ன புலி, நாய் விரட்டும் இரண்டிலும் தாக்கவோ தப்பித்து ஓடவோ வேண்டிய உடல் வலிமையை கொடுப்பது அட்ரீனலின்தான்
அட்ரீனல் எனும் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் நீர்மப்பொருள்தான் அட்ரீனலின்
நாளமில்ல சுரப்பிகள் பற்றி தெளிவாக விளங்க ,நாளம் உள்ள சுரப்பிகள் பற்றி அறிய வேண்டியதாகிறது . வியர்வை, கண்ணீர் போன்றவை நாளங்கள் வழியாக வெளியே வருகின்றன
(நாளம்- duct- குழாய்)
குழாய்கள் இல்லாமல் குருதியில் நேரடியாக கலந்து உடலில் தேவையான இடங்களுக்கு செல்கின்றன நாளம் இல்லாச் சுரப்பிகள் சுரக்கும் நீர்மப் பொருட்கள் (அது எப்படிக் கலக்கின்றது என்பது தனிக் கதை )
.ஆபத்தை எதிர்கொள்ளும்போது நாளமில்லா நீர்மங்கள் குறிப்பாக அட்ரீனலின் வெள்ளம் போல் பாய்ந்து உடலெங்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதயத் துடிப்பை அதிகரித்து அதிகமான குருதியை தசைகளுக்கு அனுப்பி வைக்கின்றது .சுவாசம் வேகமாகி மூளைக்கு அதிக அளவில் ஆக்சிஜன் பாய்கிறது .குருதியில் குளுகோஸ் பாய்ந்து மிக விரைவாக ஆற்றலை அதிகப்படுத்துகிறது .
நமக்குத் தெரியாமலே, நாம் உணராமலே இவ்வளவு செயல்களையும் மிக விரைவாக – கண் இமைக்கும் நேரத்துக்குள் செய்து முடிப்பது நம் மேல் பரிவும் இரக்கமும் கொண்ட பரிவு நரம்பு மண்டலம் . Sympathetic Nervous System (SNS) என்று பெயர கொண்ட இதற்கு இன்னொரு பெயர் Fight or Flight system
இதயத் துடிப்பு, மூச்சு ,போன்ற பல முக்கிய செயல்கள் நம்மை அறியாமல் நடை பெறுவது இந்த பரிவு நரம்பு மண்டலத்தால்தான்
• வேறு சில நாளம் இல்லாச் சுரப்பிகள்
• பிட்யுடரி, தைராய்ட்,
• அட்ரீனல் சுரப்பி ஒவ்வொரு சிறுநீரகத்துக்கு மேலாக ஒன்றொன்றாக மொத்தம் இரண்டு அமைந்துள்ளது
மிகச் சுருக்கமாக , மிகத் தெளிவாக அட்ரீனல் பற்றி சொல்ல நினைத்தேன் .
அப்படிச் செய்தேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
19052021thu
Sherfuddin P
May be a cartoon
Like
Comment
Share

No comments:

Post a Comment