திரு மறை சில குறிப்புகள் 27
10052021mon
1. 251:24-46லூத் , ஆத் ,தமுத், பிர் அவுன் ,நுஹ் நபி கூட்டத்தினர் இறைவன் சினத்துக்கு ஆளாகி அழிக்கப்பட்டார்கள்
2. (51:52,53) எந்த ஒரு நபியையும் – இவர் பைத்தியம் பிடித்தவர் , மந்திரவாதி – என்று சொல்லாமல் மக்கள் விட்டதில்லை . வரம்பு மீறுவதில் அப்படி ஒரு ஒற்றுமை அவர்களுக்குள்
3. 52:1-27மலையின் மீது சத்தியமாக,புனித மறையின் மீது சத்தியமாக,புனித இறை இல்லத்தின் மீது சத்தியமாக, பொங்கும் கடல் மீது சத்தியமாக
என்று இறைவன் தீர்ப்பு நாள் பற்றியும் நரக வாசிகள், சுவன வாசிகள் பற்றியும் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறான்
4. (52:35) நபிமார்கள் பொய்யர்கள், மந்திரவாதிகள், திருமறை இறைவன் அருளியது இல்லை, நபியே எழுதியது என்று பல்வேறு வழிகளில் இறைவன் பற்றியும் நபி பற்றியும் அவதூறு சொல்பவர்களைஇறைவன் பலவாறாக கடுமயாக எச்சரிக்கிறான் . “படைப்பவன் எவனும் இல்லாமல் அவர்கள் உருவானார்களா , இல்லை அவர்களே தங்களைப் படைத்துக் கொண்டார்களா “ என்று கேட்கிறான்
5. (53:1,2) மறையும் விண்மீன்மேல் சத்தியமாக
உங்களில் ஒருவர் ( நபி) வழி தவறவில்லை ;
என்று துவங்கி எப்படி குரான் வானவர் தலைவன் ஜிப்ரில் அலை மூலம் இறைவனிடமிருந்து நபிக்கு ஒரு சிறு மாற்றமுமில்லாமல் கொண்டு சேர்க்கப்பட்டது என்று இறைவன் விவரிக்கிறான்
6. (53:26) எண்ணற்ற வானவர்கள்இருந்தாலும் இறைவன் அனுமதி இன்றி யாரும் இறைவனிடம் மற்றவர்களுக்காக பரிந்து பேசமுடியாது
நம்பிக்கைஇல்லாதவர்கள் அறியாமையினால் வானவர்கள் இறைவனின் மகள்கள் என்று கற்பனை செய்துகொள்கிறார்கள்
7. (53:38)ஒருவருடைய சுமையை மற்றவர் சுமக்க முடியாது
8. (54:1) “தீர்ப்பு நாள், நேரம் நெருங்கும்போது நிலவு இரண்டாகப் பிளந்து விடும் “ என்று எச்சரிக்கிறான் இறைவன் ( அதே போல் பூமி, வானம், விண் மீன்கள், கோள்களின் பாதைகள் எல்லாமே நிலை தடுமாறிபோகும்)
. 9. (54:40) புனிதக்குரானை இறைவன் மிக எளிதாகப் பின்பற்றும் அறிவுரையாகப் படைத்திருக்கிறான்.. இருந்தாலும் எத்தனை பேர் அதில் நல்வழி காண்கிறார்கள் ?
9. 10. (54:49) இறைவன் ஏலவற்றயுமே ஒரு குறிப்பிட்ட அளவின் படிதான் படைத்திருக்கிறான்
فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ
Fabi-ayyi ala-i rabbikumatukaththiban
—
11. 55:13) ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
என்ற வசனம் 31 தடவை திரும்பத் திரும்ப வரும் அர்ரஹ்மான் சுராவினின்( சுராஹ் 55) சிறப்புகள்
-இறைவானின் பெயரே சுராவின் பெயராக அமைந்த ஒரே சூராஹ்
-மனிதர்களையும் ஜின்களையும் ஒன்றாக் இறைவன் விளிக்கும் சூராஹ்
குரானின் அழகு சென்று சொல்லப்படும் சுராஹ்
12. (55:26, 27) பூமியில் உள்ள அனைத்தும் அழிந்து விடும். .எல்லாம் வல்ல மேன்மை பொருந்திய இறைவன் திருமுகம் மட்டுமே நிலைத்து நிற்கும்
13. (55:78) மேன்மையும் கண்ணியமும் மிகுந்த இறைவனின் பெயர் மிகவும் அருளுடையதாகும்
14. (56:4)பூமி முழுதும் மிகக் கடுமையாகக் குலுங்கும்போது ,மலைகள் நொறுங்கி தூளாகிப் பறக்கும்போது மக்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்டுவார்கள் .
வலது பக்கம் இருப்பவர்கள் மிக நல்ல செயல்கல செய்து இறைவனின் அருள்பெற்றவர்கள்
இடது பக்கம் உள்ளவர்கள் தீமைகள் புரிந்து இறைவனின் சினத்துக்கு ஆளானவர்கள்
இரண்டுக்கும் முந்தியிருப்பவர்கள் எல்லா வகையிலும் மேன்மை அடைந்த சாபிக்கூன்கள்
15. (56:59--:72)) பிறப்பும் இறப்பும் ; விதைகள் முளைத்துப் பயிராவதும் ;வானத்திலிருந்து இறங்கும் நீர் குடிக்கும்படி சுவையாக இருப்பதும் ,நெருப்புப் பற்றுவதும் ;
இவை எல்லலாமே இறைவனின் ஆணைப்படிதான் நடக்கின்றன . மனித முயற்சியால் அல்ல
16. (56:83--85) உயிர் தொண்டைக்கு வரும்போது எதுவும் செய்ய முடியாமல் மரணம் நெருங்குவதை நீங்கள் பார்த்துகொண்டு இருக்கும்போது இறைவன் உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் உங்கள் அருகிலேயே இருக்கிறான்
17. (56:86) உங்களுக்கு மேல் அதிகாரம் உடையவர் யாரும் இல்லை என்பது உண்மையென்றால் ஏன் நீங்கள் அவருக்கு உயிர் கொடுக்க முடியவில்லை ?
18. 57:2) வானங்களையும் பூமியையும் இறைவன் எல்லாவற்றிலும் மிகவும் வல்லமை வாய்ந்தவன் .உயிர் கொடுப்பவனும் எடுப்பவனும் அவனே
முதலும் அவனே, முடிவும் அவனே .மறைவாக இருப்பவனும் அவனே வெளிப்படையாகத் தெரிபவனும் அவனே . அவன் எல்லாம் அறிந்தவன்
19. (57:11) இறைவனுக்கு அழகிய கடன் கொடுப்பவர்க்கு இறைவன் அதைப் பன்மடங்காகத் திருப்பித் தருவதோடு பெரிய பரிசொன்ற்றையும் கொடுப்பான்
20. (57:20)ஒருவருக்கொருவர் போட்டி போட்டுகொண்டு செல்வங்களையும் மக்கட்பேறையும் பெருக்கும் இவ்வுல வாழ்வு அலங்காரங்கள் நிறைந்த ஒரு விளையாட்டே ஆகும் மழைக்காலத்தில் செழித்து வளரும் செடிகொடிகள் காய்ந்து மன்சள் நிறமாகி உதிர்ந்து போவது போல் இந்த உலக வாழ்வு ஒரு மாயைதான் .
மறுமை வாழ்வில்இறைவனின் மன்னிப்பும் சுவனமும் கிடைக்கலாம் அல்லது இறைவனின் சினத்துக்கு ஆளாகலாம்
21. 57:27) பல நபிமார்களுக்குப்பின்னல் நாம் ஈசா நபியை அனுப்பி இன்ஜீல் வேதத்தை அருளினோம். . அவரைப் பின்பற்றுவோர் நெஞ்சில் நாம் அன்பையும் இரக்கத்தையும் விதைத்தோம்
துறவறம் என்பது நாம் சொல்லாமல் அவர்களாக இறைவனை அடைய மேற்கொண்ட வழி. அதையும் அவர்கள் சரியான வழியில் கடைப்பிடிக்கவில்லை .நம்பிக்கை கொண்டவருக்கு உள்ள பரிசை நாம் கொடுத்தோம்
இது குரான் ஜூசு
27ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
குரானின் இந்தப்பகுதியில்
தூய்மையாக இருப்பவர்களே குரானைத் தொட வேண்டும் என்று வருகிறது
சுவன வாசிகளுக்கு இறைவன் வழங்கும் நன்மைகள் பற்றி விரிவாகச் சொல்லப்படுகிறது
இறைவழியில் செலவழித்தல் இறைவனுக்குக் கொடுக்கப்படும் அழகிய கடன், அதை இறைவன் பன்மடங்காக திருப்பித் தருவான் என்று வருகிறது
நேற்றைய வினா
“இறைவனுக்கு மனிதன் உதவினால் “
என்று வரும் வசனம் எது ?
விடை (47:7)
நம்பிக்கை கொண்டவர்கள் இறைவனுக்கு உதவி செய்தால் ,அவன் அவர்களுக்கு உதவி செய்து உங்களை இறைவழியில் நிலை நிறுத்துவான்
இன்றைய வினா
“வானம் குமுறும் நாளில்”
இது எந்த வசனத்தில் வருகிறது ?
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
10052021 mon
Sherfuddin P
No comments:
Post a Comment