திரு மறை சில குறிப்புகள் 20
03052021mon
1. 27: 45- 53தமுத் கூட்டத் தலைவர்கள் ஒன்பது பேர் கூடி ஸாலிஹ் நபியை கொல்ல திட்டம் தீட்டினர் . ஆனால் இறைவன் திட்டப்படி அவர்கள் அழிக்கப்பட்டனர்
2. (27:60) வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே மழைநீரையும் அனுப்பி வைத்தான் அவனே அழகிய தோட்டங்களையும் உண்டாக்கினான்
3. (27:61) அவனே பூமியை ஒரு அழகிய தங்குமிடமாக ஆக்கி வைத்தான்.
அதன் இடை இடையே ஆறுகளை ஓடவிட்டு மலைளையும் நிறுத்தி வைத்தான் .நல்ல நீருக்கும் உப்பு நீருக்கும் இடையே ஒரு தடுப்பை வைத்தவனும் அவனே
அவனைத் தவிர வேறு யாரும் இதையெல்லாம் செய்ய முடியாது என்பது பலருக்கும் புரிவதில்லை
அள்ளி அள்ளிக் கொடுக்கும் இறைனுக்கு மனிதர்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறார்கள்
4, (27:87) இறுதித் தீர்ப்பு நாளில் எக்காளம் ஊதப்படும்போது வானங்களிலும் பூமியிலும்உள்ள அனைவரும்,(இறைவன் நாடியவர்கள்தவிர) அனைவரும் அச்சத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் பணிந்த நிலையில் இறைவனிடம் வருவார்கள்
5 . (27:88) மிக உறுதியாக இருக்கும் மலைகள் இறைவன் ஆணைப்படி மேகங்கள் போல் பறக்கும்
6. 28:1-13 மீண்டும் ஒரு முறை மூஸா கதை. அதில் சில புதிய செய்திகள் –
இறைவன் ஆணைப்படி குழந்தை மூஸா(ஒரு கூடையில்)ஆற்றில் விடப்பட்டது;
அந்தகூடை பிர்அவுன் மாளிகையை அடைந்தது ,பிர் அவுனின் துணைவி மூஸாவை வளர்க்க முடிவு செய்தது ; கூடையைத் தொடர்ந்து சென்ற மூசாவின் அக்காவின் முயற்சியாலும் ,இறைவன் அருளாலும் மூசாவின் தாய் மூசாவுக்குப் பாலூட்டும் தாயாக பிர் அவுனின் மாளிகையை அடைந்தது
7. 28:14-21 [பருவ வயது வந்தவுடன் மூஸாவுக்கு அறிவையும் ஞானத்தையும் இறைவன் வழங்குகிறான் .தெருவில் சண்டை போட்டுகொண்டிருந்த இருவரில் ஒருவரை மூசா தாக்கியதில் இறந்து விடுகிறார்,
அறியாமல் செய்த கொலை என்றாலும் அதற்கு தண்டனையும் கொலையாக இருக்கும் என்ற அச்சத்தில் மூசா ஊரை விட்டு ஓடி விடுகிறார்
8. 28:22-28 இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட மூஸா தனக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட இறைவனை வேண்டுகிறார். மத்தியன் நகரில் இரு பெண்கள் ஆண் துணை இல்லாததால் தங்கள் கால்நடைகளுக்கு தண்ணீர்புகட்ட முடியாமல் தவிப்பது கண்டு அவர்களுக்கு உதவி செய்ய முன் வருகிறார்
பின்னர் அப்பெண்களின் தந்தையை சந்தித்து தன் கதையைச் சொல்லிய மூசா , அவர் கூறியபடி ஒரு எட்டு, பத்து ஆண்டுகள் அங்கு பணிபுரியவும் பெண்ணை மணம் முடிக்கவும் சம்மதிக்கிறார்
9. 2 28:29-42 மூஸா நபி தூர் மலைக்கு அழைக்கபட்டு நபித்துவம் வழங்கபட்டது, அவரும் அவர் அண்ணன் ஹாருனும் பிர் அவுனிடம் போனது எல்லாம் மீண்டும் விவரிக்கப்படுகிறது
10. (28:53) இதற்கு முன் வேதம் அருளப்பட்டவர்களில் உண்மையானவர்கள் குரான் இறைவன் இறக்கி வைத்த உண்மை மொழி .நாங்கள் அதை நம்புகிறோம் . நாங்களும் முசுலீம்களே ,,என்று சொல்கிறார்கள் ,
11. (28:68) இறைவன் தான் நாடியவரைத் தன் பணிகளைச் செய்யும் தூதுவராய் ஆக்குகிறான் . இதில் அவர்கள் விருப்பத்துக்கு இடம் இல்லை
12. (28:71, 72) இரவையோ பகலையோ இறைவன் நிரந்தரமாக்கி விட்டால் அதை மாற்றி அமைக்கும் வல்லமை அவனைத்தவிர யாருக்கும் கிடயாது
13. காருனுக்கு இறைவன் அளவிட முடியாத செல்வக்குவியலை வழங்கினான் .ஆனால் காருனோ தன் அறிவாலும் திறமையாலுமே செல்வத்தை அடைந்ததாகச் சொல்லி செருக்குடன் திரிந்தான்
14. 28:81)இறைவன் ஆணைப்படிபூமி அவனையும் அவன் இருப்பிடத்தையும் பூமி விழுங்கி விட்டது. அவனுக்கு உதவி செய்ய எவரும் முன்வரவில்லை
15. (28:83) பூமியில் தீங்கும் குழப்பமும் செய்யாமல், வீண் பெருமை கொள்ளாமல் இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களுக்காகவே சுவனபதி இருக்கிறது (28:86)நபியே திருமறை உங்களுக்கு இறக்கி வைக்கப்படும் என்பது நீங்களே அறியாத ஓன்று ..இப்படி ஒரு நூல் உங்களுக்குக் கொடுக்கப்பட்டது இறைவன் கருணையால் மட்டுமே
16. (29:2, 11) நாங்கள் நம்புகிறோம் என்று வெறுமனே வாயால் சொல்லி இறைவனைஏமாற்றி விட எண்ணுகின்றனர் சிலர் .யார் உண்மையான நம்பிக்கை கொண்டோர் யார் வஞ்சகர்கள் என்பதை இறைவன் தெளிவாக் அறிவான்
17. (29:14) நுஹ் நபி தம் மக்களோடு 950 ஆண்டுகள் வாழ்ந்தார் .தவறு செய்த அம்மக்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது
18. (29:26)இப்ராகிம் நபி சிலை வணக்கத்தை எதிர்த்து ஏக இறைக் கொள்கையை எடுத்துச் சொன்னபோது லூத் நபி அவரிடம் நம்பிக்கை கொண்டார்
19. தெளிவான சான்றுகளுடன் மூசா நபியை இறைவன் அனுப்பியும் அவற்றை நம்பாமல் வீண் பெருமை பேசித் திரிந்த காருண், பிர் அவுன் ஹமன் போன்றோரை இறைவன் அழித்து விட்டான்
20. (29:40) சூறாவளிக் காற்று, கல் மழை , பலத்த ஓசை,,நிலநடுக்கம் , வெள்ளம் எனப்பல வழிகளில் பாவம் செய்தவர்களை இறைவன் அழிக்கிறான். இறைவன் யாருக்கும் தீங்கு செய்வதில்லை . மாறாக அவர்களே தங்களுக்கு தீங்கு செய்து கொண்டார்கள்
இது குரான் ஜூசு
20ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
குரானின் இந்தப்பகுதியில்
மூசா நபி வாழ்வின் இளமைக்கால நிகழ்வுகள் சிலவும், நுஹ் நபி 950 ஆண்டுகள வாழ்ந்ததும் , செல்வச் செருக்கால் காருண் அழிக்கப்பட்ட நிகழ்வும் சொள்ளப்படுகின்றன
நேற்.றைய வினா
“நபி சுலைமான் புன்னகை பூத்தார் ,சிரித்தார் “
இது எந்த வசனத்தில் வருகிறது ?பொருள் என்ன ?
விடை 27:18)
நபி சுலைமான் ஒரு எறும்புப்புற்றை நெருங்கும்போது எறும்பு ஓன்று மற்ற எறும்புகளிடம் “ சுலைமான் தன் படையுடன் வந்து கொண்டிருக்கிறார். அவர் நம்மை மிதித்து விடலாம் .எனவே பாதுகாப்பாக உங்கள் புற்றுக்குள் போய் விடுங்கள் “ என்று சொன்னது
விலங்குகள், பறவைகள் மொழியை அறிந்திருந்த சுலைமான் இதைக்கேட்டு புன்னகை பூத்து சிரித்தார்
இன்றைய வினா
சிலந்தி வலைக்கு ஒப்பாக இறைவன் எதைச் சொல்கிறான் ?
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
03052021 mon
Sherfuddin P
No comments:
Post a Comment