Friday, 21 May 2021

இறைவா எங்களைக் காப்பாற்று

 செய்தியில் , விளம்பரங்களில் , தொலைக்கட்சியில்

சமூக வலை தளங்களில் என
அங்கும் இங்கும் எங்கும் என ஒரே மாதிரி தகவல்கள் அலைபோல் மோதுகின்றன ,
வெறுமை, இனம்புரியாத வெறுப்பு
அதைவிடக் கொடுமை சிலரின் வர்ணனைகள் விவரிப்புகள்
தொடரும் போடாத குறைதான்- ஒரு செய்தி மூன்று நீண்ட பகுதிகளாக ஒரே நாளில் வருகிறது
ஒரு மூதாட்டி பற்றி நெடுங்கதை போல் வருகிறது
இறைவா , நீ நினைத்தால் நொடியில் எங்களை அழித்து விட்டு புதிய சமுதாயம் படைத்து விடுவாய்
ஆனால் எங்களுக்கோ உன்னை விட்டால் வேறு யாரும் கிடையாது . யாரையும் தெரியாது .
எங்களைக் காப்பாற்று
மாட மாளிகைகள் வேண்டாம் கூட கோபுரங்கள் வேண்டாம் .சொத்து சுகங்கள் வேண்டாம் , பொன்னும் மணியும் வைரமும் வேண்டாம்
ஏங்களுக்கு நலமான இம்மை வாழ்வையும் , நலமான மறைவையும் , நலமான அடக்கத்தையும் , நலமான மண்ணறையையும் ,நலமான கேள்விக் கணக்கையும் நலமான மறுமையையும் கொடுத்து அருள்வாயாக
எல்லாவற்றிற்கும் மேலாக
உன்னைத் தவிர யாருக்கும் தலை வணங்காத நேர்மையையும்
உன்னைத்தவிர யாருக்கும் பயப்படாத மன உறுதியையும்
உன்னைத்தவிர யாரிடமும் எதுவும் கேட்காத நிறைவையும்
வழங்குவாயாக
No photo description available.
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment