திரு மறை சில குறிப்புகள் 25
08052021sat
1. (42:9) அனைத்து வல்லமைகளும் பெற்ற இறைவனே இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான் .அவனைத்தவிர தவிர வேறு யாரும் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று சிலர் மூடத்தனமாக நம்புகிறார்கள்
2. (42:13. 14)இறைவன் நபிமார்கள் நுஹ், இப்ராகிம் மூஸா ஈசா ஆகியோருக்கு வழங்கிய அதே அறிவுரையைத்தான் நபி முகமதுக்கும் கொடுத்திருக்கிறான் . ஏக இறைவழியை நிலை நிறுத்துங்கள் அதில் பிரிவினைகள் ஏற்படுத்தி விடாதீர்கள் என்ற இறைவன் ஆணை முகமது நபி அவர்களுக்கும் அவருக்கு முந்தியவர்களுக்கும் பொருந்தும்
தெளிவான ஞானம் இருந்தும் ஒருவருக்கொருவர் போட்டி பொறாமையால் மதத்தைப் பிரித்து கூறு போட்டார்கள் .இவர்கள் செய்கையினால் பின் வரும் சந்தததியினருக்கு மதம், வேதத்தின் உண்மை நிலை பற்றி ஐயங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன
3. (42:27) அளவுக்கு மேல் வளங்களை இறைவன் வாரி வழங்கி விட்டால் மக்கள்வரம்பு மீறி பூமியில் குழப்பம் உண்டாக்க முற்படுவார்கள் .தன் அடியார்களை கண்காணித்து வரும் இறைவன் அவர்கள் தேவைகளுக்குப் போதுமான வளங்களைக் கொடுத்து விடுவான்
4. (42:33) இறைவன் நாடினால் காற்றை வீசாமல் சலனமின்றி நிறுத்தி விடுவான்
5. (42:49, 50)) சிலருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பதும் , சிலருக்குப் பெண் குழந்தைகள் பிறப்பதும் ,இன்னும் சிலருக்கு ஆண், பெண் குழந்தைகள் பிறப்பதும் சிலருக்கு பிள்ளைப்பேறே இல்லாமல் போவதும் இறைவன் நாட்டத்தினால் மட்டுமே
6. (43:5மக்கள் அறியாமையில் மூழ்கி வரம்பு மீறி நடப்பதால் இந்த அருமையான நல்லுரைகள் கொண்ட மறை நூலை விலக்கிக் கொள்ளவேண்டுமா ?
7. (43:17)தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது அறிந்தால் முகம் கருத்து துக்கப்படும் இவர்கள் இறைவனுக்கு பெண் குழந்தைகள் உண்டு என்று சொல்கிறார்கள்
8. (43:29) அவர்கள் ஏக இறைவனைத் தவிர்த்து வேறு பலவற்றை வணங்கினார்கள் .இருந்தாலும் அவர்களுக்குத் தெளிவாக உண்மையை விளக்கும் ஒரு தூதரை அனுப்பாமல் அவர்கள் யாரையும் இறைவன் அழித்ததில்லை
9. (43:43) நீங்கள் நேர் வழியில் செல்ல விரும்பினால் உங்களுக்கு அருளப்பட்ட இந்தக் குரானை உங்கள் வழிகாட்டியாக பற்றிக்கொள்ளுங்கள்
10. (43:52) தெளிவாகப் பேசக்கூட முடியாத மூசாவவைவிட தான் மிகவும் உயர்ந்தவன் என்று பெருமை பேசிய பிர் அவுனும் அவனது கூட்டத்தாரும் இறுதியில் கடலில் மூழ்கடிக்கப்பட்டார்கள்
11. (43:61) நிச்சயமாக ஈசா நபி தீர்ப்பு நாள், நேரத்தின் அடையாளமாக இருக்கிறார்
12. (43:81)நிச்சயமாக இறைவனுக்கு மகன் கிடையாது . அப்படி ஒருவர் இருந்திருந்தால் அவரை வணங்குவதில் நபி அவர்கள் முந்தியிருப்பார்கள்
13. (44:4) இறைவன் ஒரு சிறப்பான இரவில் புனித குரானை இறக்கி வைத்தான். அதில் வரும் ஒவ்வொரு செய்தியும் .மிகுந்த ஞானத்துடனும் தெளிவுடனும் சொல்லப்படுகிறது
14. (44:30) இறைவன் இஸ்ரவேலர்களை கொடுங்கோல் மன்னன் பிர் அவுனிடமிருந்து காப்பாற்றினான். அவர்களுடைய பலவீனங்கள் தெரிந்தும் அவர்களுக்கு மிக உயர்ந்த நிலையை அளித்தோம்
15. 44:43-50 நரக வாசிகளுக்கு தங்குமிடம் , உணவு, குடிக்கும் பானம் எல்லாமே மிக மோசமானதாக , கொடுமையானதாக இருக்கும்
16. 44:51-59 சுவனம் மிகவும் சுகமான, வசதியான தங்குமிடமாக இருக்கும் . அவர்கள் உணவு, குடிக்கும் பானம் ,உடை இருக்கைகள் எல்லாமே சுவையானதாக, மிக உயர்ந்த தரமானதாக இருக்கும்
17. (45:4-:6 )மனிதனைப் படைத்ததிலும் ,கால் நடைகளைப் படைத்ததிலும், இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும் , மழை பொழிவதிலும் வறண்ட பூமி மீண்டும் செழிப்பாவதிலும் , வீசும் காற்றிலும் இறைவனின் எண்ணற்ற சான்றுகள் வெளியாகின்றன
18. (45:12) கடலையும், வானங்களையும் பூமியையும், அவற்றிற்கு நடுவில் உள்ள அனைத்தையும் இறைவன் மனிதனுக்காகவே படைத்தான்
.
19. (45:28) தீர்ப்பு நாளில் மண்டியிட்டிருக்கும் சமுதாயங்கள் ஒவ்வொன்றாக அழைக்கப்பட்டு அவர்களுடைய ஆவணங்கள் கொடுக்கப்படும் .அவரவர் செயலுக்கு ஏற்ப நீதி வழங்கப்படும்
இது குரான் ஜூசு
25ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
குரானின் இந்தப்பகுதியில
ஈசா நபி அவர்கள் தீர்ப்பு நாள், நேரத்தின் அடையாளம் என்ற செய்தி வருகிறது
நேற்றைய வினா
“மனிதன் மனமுடைந்து போகிறான் “
இது எந்த வசனத்தில் வருகிறது ?
விடை (41:49)
மனிதன் நன்மைக்காக இறைவனிடம் வேண்டுவதில் சோர்வடைவதில்லை .ஆனால் அவனை தீங்கு தீண்டும்போது மனமுடைந்து போகிறான்
இன்றைய வினா
பிறரிடம் கலந்தாலோசித்தல் இறைநம்பிக்கை உடையோரின் பண்புகளில் ஓன்று
என்று சொல்லும் வசனம் எது?
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
08052021 sat
Sherfuddin P
No comments:
Post a Comment