Saturday, 1 May 2021

குரான் குறிப்புகள் சில 19

 திரு மறை சில குறிப்புகள் 19

02052021sun
1.(25:23) இறை நம்பிக்கை அற்ற அவர்களின் செயல்களின் பலன்கள் புழுதிபோல் காற்றில் பறந்து வீணாகி விடும்
2. (25:25) தீர்ப்பு நாளில் வானம்பிளக்கப்பட்டு அதன் வழியே அணி அணியாய் வானவர்கள் இறங்கி வருவார்கள்
3. (25:40) கல்மழையால் அழிக்கப்பட்டநகரை அவர்கள் பார்க்கவில்லையா? இறப்புக்குப்பின் எழுப்படுவதை இன்னும்அவர்களால் நம்பமுடியவில்லை
4. (25:47) இரவை ஒரு ஒய்வு நேரமாகவும் பகலை விழித்துஎழும் நேரமாகவும் இறைவன் ஆக்கியிருக்கிறான்
5.இறைவனின் நல்லடியார்களின் குணங்கள் :
(25:63) அவர்கள் மென்மையாக நடப்பார்கள் .வீண்பேச்சுபேச வருபவர்களிடம்” உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும் என்று சொல்லி விலகிப் போய்விடுவார்கள்
(25:64) இரவில் நின்ற நிலையிலும் சிரம் தாழ்த்தியும் இறைவனை வணங்குவார்கள்
(25:67) அவர்கள் வீண் செலவு செய்யமாட்டார்கள், கருமியாகவும் இருக்கமாட்டர்கள்
6. (26:5 ,6)
விரைவில் நம்பிக்கையற்றோர் புரிந்து கொள்வார்கள் தாங்கள் கேலி செய்த இறை அறிவுரைகள் அனைத்தும் மெய்யானது என்று
7.(26:10-33) மூசா நபிக்கும் பிர்அவுனுக்கும் நடந்த உரையாடல் மீண்டும் இங்கு சொல்லப்படுகிறது
கூடுதலாக மூசா அடித்ததனால் உயிரிழந்த ஒரு எகிப்தியர் , அதனால் மூசா பிர் அவுனிடம் போக அஞ்சுதல் , இறைவன் தான் மூஸாவுக்குத் துணை நிற்பதாய் சொல்வதும்
மூசா நபி சிறு வயதில் பிர் அவுன் மாளிகையில் வாழ்ந்தது பற்றியும் வருகிறது
8.26:34-51தொடர்ந்து மூசா நபி காட்டிய இறை அற்புதங்கள், மந்திரவதிகள் உண்மை உணர்ந்து ஏக இறைவனுக்கு சிரம் தாழ்த்தியது எல்லாம் மீண்டும் வருகிறது
9. 26:52--68பிர் அவுனின் மிகப்பெரிய படை,சிறிய அளவிலான (மூஸாவைப் பின்பற்றும்)இஸ்ரவேலர்களை அவர்களின் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றுகிறது .அச்சத்தில் கடற்கரைக்கு ஓடிய அவர்களை பின்தொடர்கிறது பிர் அவுன் படை
இறைவன் ஆணைப்படி மூஸா தம் கைத்தடியால் கடலை அடிக்க, அது இரண்டாகப் பிளந்து மூஸாவுக்கும் அவர் கூட்டத்துக்கும் வழி விடுகிறது
பின் தொடர்ந்த பிர் அவுனும் அவன் கூட்டமும் கடலில் மூழ்கி மறைகின்றனர்
10.(26:83)நபி இப்ராகிம் இறைவனிடம் வேண்டினார்
“எனக்கு அறிவையும் ஞானத்தையும் கொடுப்பாயாக.நல்லோர் கூட்டத்தில் என்னை சேர்த்திடுவாயாக
(26:84) எனக்குப்பின் வருபவரிடையே எனக்கு நல்ல புகழைக் கொடுப்பாயாக
(26:85) சுவன வாசியாக என்னை ஆக்கி வைப்பாயாக
(26:86) வழி தவறிச் சென்ற என் தந்தையை மன்னிப்பாயாக (இந்த வேண்டுகோள் தவறானது என்று உணர்ந்து இறைவனிடம் நபி மன்னிப்புக் கேட்டார்
11. (26:117) நுஹ் நபி தன்னைப் பொய்யர் என்று குற்றம் சாட்டியவர்களை தண்டிக்குமாறும், தன்னையும் தன் கூட்டத்தாரையும் காப்பாற்றுமாறும் இறைவனிடம் வேண்டினார். அதை இறைவன் ஏற்றுக்கொண்டு நுஹ் நபியையும் அவரது கூட்டத்தாரையும் மற்ற உயிர்களையும் ஒரு கப்பலில் ஏற்றித் தப்பிக்க வைத்தான் . மற்றவர்களை வெள்ளத்தில் மூழ்கடித்தான்
12.(26:128 நீங்கள் கட்டும் மிகப் பிரமாண்டமான கட்டிடங்கள் உங்கள் செல்வச் செருக்குக்கு நினைவுச் சின்னங்களாய் இருக்கும். மற்றபடி அவற்றால்உங்களுக்கு எந்தப்பயனும் இல்லை
13. (26:141—159)159ஸாலிஹ் நபி தமுத் மக்களுக்கு அறிவித்த இறைவனின் எச்சரிக்கையை மீறி பெண் ஒட்டகத்தைத் துன்புறுத்தினார்கள் .எனவே இறைவனின் தண்டனை அவர்க்ளைப்பிடித்து அழித்து விட்டது
14.(26:160-175)லூத் கூட்டம் வழிகேட்டில் இறங்கி இறைவனின் சினத்துக்கு ஆளாகி கல் மழையால் அழிக்கப்பட்டது
15.(26:192) அகில உலகங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பட்டது புனித திருமறை .இது புனிதமான வானவர் தலைவன் மூலம் நபிகளுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டது
16. 27.15-58காற்றையும் ஜின்களையும் பறவைகளையும் இறைவன் சுலைமான் நபியின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்
ஒரூ பறவை (ஹுது ஹுது பறவை ) சபா அரசி பற்றியும், அவரது அரியாசனம் பற்றியும் அந்த நாட்டு மக்கள் கதிரவனை வணங்குவது பற்றியும் சுலைமான்நபியிடம் சொன்னது
நபி அரசி சபாவுக்கு இறைவனின் திருப்பெயரால் ஒரு மடல் அனுப்பி வைத்தார்
எல்லாம் வல்ல இறைவனயே வணங்கவேண்டும் என ஆணையிட்டார் . மறுத்தால் தாம் படையெடுத்து வரவேண்டி இருக்கும் என்று தெளிவாக்குகிறார்.
சுலைமானைக் காண சபா வருகிறார். அவர் வருவதற்குள் சுலைமானுக்குக் கட்டுபட்ட ஜின் ஒருவர் அவர் ஆணைப்படி கண் இமைக்கும் நேரத்தில் சபாவின் அரியாசனத்தை சுலைமான் சபைக்குக் கொண்டு வருகிறார்
.சுலைமான் மாளிகைக்கு வந்த சபா தரையில் தண்ணீர் இருப்பது கண்டு தன் ஆடை நனைந்து விடாமல் இருக்க தூக்கிப் பிடித்துக் கொள்கிறார். அது தண்ணீர் அல்ல . பளிங்குக்கல்
கதிரவன் வணக்கத்தை விட்டு விட்டு ஏக இறை வழியில் சேருகிறார் சபா
இது குரான் ஜூசு
19ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே
குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை
குரானின் இந்தப்பகுதியில்
சுலைமான் நபி- சபா (Solomon and Sheba ) சந்திப்பு, உரையாடல் பற்றி சொலப்படுகிறது
நேற்.றைய வினா
“ஒரு அழிவை அழைக்காதீர்கள் “
என்ற பொருள் படும் வசனம் எது ?
விடை
25:1314)
தீயவர்கள் நரக நெருப்பில் வீசப்படும்போது அந்த வேதனை தாங்காமல் தாங்கள் அழிந்து போக வேண்டும் என்று குரல் எழுப்புவார்கள்
அப்போது அவர்களிடம் “ ஒரு அழிவு அல்ல –பல அழிவுகளைக் கேளுங்கள் “ என்று சொல்லப்படும்
இன்றைய வினா
“நபி சுலைமான் புன்னகை பூத்தார் ,சிரித்தார் “
இது எந்த வசனத்தில் வருகிறது ?பொருள் என்ன ?
இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
02052021 sun
Sherfuddin P
No photo description available.
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment