“"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..”
என்று தமிழ் நாட்டின் பெருமிதக் குரல் ஒலித்த அதே நாள்
“பரத் எனும் நான் “
என்ற திரைப்படம் விஜய் சூப்பரில் மதியம் .ஒண்ணரை மணிக்கு
ஒரு துடிப்பான இளைஞர் அமெரிக்காவில் படித்து அங்கேயே வாழ்ந்தவர் தன் தந்தை இருந்த இடத்தில் மாநில முதல்வராகப் பதவி ஏற்கிறார் ..தமிழ் சரளமாக வராது
முதல் நாளில் தன் செயலாளரிடம் “: போக்கு வரத்துத் துறை யின் கூட்டம் ஓன்று கூட்ட வேண்டும் “என்கிறார் . செயலர் நாளையே ஏற்பாடு செய்து விடுகிறேன் என்கிறார் .
முதல்வரோ ஏன் நாளை? இன்றே இப்போதே முடியாதா என்கிறார்
போக்கு வரத்துக்கு குற்றங்களுக்கு மிகக் கடுமையான – ஆயிரம் பத்தாயிரங்கள் என – அதிரடி தண்டம்
அடுத்து கல்வியை வணிக மயமாக்கி பொருள் ஈட்டுவது சட்டப்படி குற்றம் என்கிறார் .
(அப்படியா ? சட்ட வல்லுனர்கள் தெளிவு படுத்த வேண்டும்)
உடனடியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்க ஆணையிடுகிறார்
படபடவென்று எடுக்கும் சரியான முடிவுகள். எதிர் கட்சிகளின் கூக்குரலை புறந்த்தள்ளி விட்டு தான் எடுத்த முடிவில் நிலைத்து நிற்கும் உறுதி , பதவி ஏற்பு உறுதி மொழியினைக் காப்பாற்றும் ஆர்வம்பொது மக்களுடன் எளிதில் இயல்பாக கலத்தல் என படம் மிக விறுவிருப்பகப் போகிறது
நேரமின்மையால் முழுப்படமும் பார்க்க முடியவில்லை
நம் முதல்வரும் பாத் போல் செயல்பட வாழ்த்துவோம் . இறைனிடம் வேண்டுவோம்
09052021 sun
Sherfuddin P
No comments:
Post a Comment