“வியப்பான முறையில் அது (மீன்) கடலுக்குள் சென்று விட்டது “
என்ற கருத்துள்ள திருமறை வசனம் எது ?
விடை
18:61
இரு கடல்கள் சந்திக்கும் இடத்தை அவர்கள் இருவரும் மீனை மறந்து விட்டார்கள் . அது (மீன்) கடலுக்குள் நழுவிப் போய் விட்டது
18;63
“நான் மீனை மறந்து விட்டேன். கற்பாறையில் நாம் ஒய்வு எடுத்தபோது மீன் ஒரு வியப்பான முறையில் கடலுக்குள் போய் விட்டது “ என்று பணியாள் (மூசாவிடம் ) சொன்னார்
சிறு விளக்கம்
குகை மனிதர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு இறை மொழி (வஹி) மறுக்கப்பட்டது, மூஸா நபி கிதர் எனும் இறை அடியாரைத் தேடி மேற்கொண்டஒருபயணம்,கிதரின் செயல்களுக்கு மூஸா நபி எதிர்ப்புத் தெரிவித்தது துல் கர்னைன் எனும் அரசன்
என பல மிக நுட்பமான செய்திகளைச் சொல்வது சுராஹ் 18 –அல் காப் – குகை –
அதில் ஒன்றுதான் மீன் பற்றிய செய்தி
நான் படித்து விளங்கிக் கொண்ட செய்தி/ விளக்கம்
மூசா நபி இரு கடல்கள் சந்திக்கும் ஒரு இடத்துக்கு நீண்ட- ஆண்டுகள் பல ஆகக்கூடிய ,சிரமமான பயணத்துக்கு ஆயத்தமாகி தன் பணியாளுடன் புறப்படுகிறார்.
அந்த இடம் வரும்போது, அவர்கள் உணவுக்காக வைத்திருந்த (சமைத்த ) மீன் கடலுக்குள் நழுவிப்போய் விடுகிறது
இதை மூசா கவனிக்கவில்லை
எனவே அந்த இடத்தைத் தாண்டிப்போய் களைப்பாகி ஒரு இடத்தில் ஒய்வு எடுக்கிறார்கள் . அப்போது மூசா பணியாளிடம் சாப்பிட மீனைக் கொண்டு வரும்படி சொல்ல,அப்போதுதான் பணியாள் “எப்படியோ மறந்து விட்டேன் . நாம் பாறையில் ஓய்வு எடுக்கும்போது மீன் ஒரு அற்புதமான முறையில் கடலுக்குள் போய் விட்டது “
என்று சொல்கிறார்
அதுதான் தான் செல்ல வேண்டிய இடம் என இறைவன் அடையாளம் காட்டியிருக்கிறான் என்று மூசா உணர, இருவரும் வந்த வழியே திரும்பி அந்த இரு கடல்கள் சந்திக்கும் இடத்துக்குப் போகிறார்கள்
அங்கு இறைவனின் அருளும் ஞானமும்
பெற்ற அடியார் ஒருவரை (அல் கிதர்) மூஸா சந்தித்து அவரிடம் கல்வி கற்பது ஒரு தனிக்கதை
கடலுக்குள் போனது உயிர் மீனா இல்லை சமைத்த மீனா என்பது பற்றி திருமறையில் குறிப்பு எதுவும்
இல்லை
ஆனால் வசனம் 18:63ல் அற்புதம், marvel என்ற பொருள் கொண்ட அஜபா
AAajabaعَجَبًا
என்ற அரபுச் சொல் இந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறது
ஒரு உயிர் மீன் துள்ளிக் குதித்து கடலுக்குள் போவதில் அற்புதம் ஒன்றும் இல்லை
எனவே நபி மூஸாவுக்கு அவர் போக வேண்டிய இடத்தை சுட்டிக் காண்பிக்கும் வகையில் இறைவன் சமைத்த மீன் துள்ளிக் குதித்து கடலுக்குள் போகும் அற்புதத்தை நிகழ்த்துகின்றான் என்பது அறிஞர்கள் கூறும் விளக்கம்
(Source Overview (Verses 60 - 65))
இது பற்றிய வினாவையும் விடையும் திருமறை குறிப்புகளில் பதிவு செய்திருந்தேன்
விடை தெளிவாக இல்லை சென்று சகோ ஞாழல் மலர் குறிப்பிட்டிருந்தார்
இப்போது எனக்கு விளங்கிய தெளிவை நான் பகிர்கிறேன்
இதில் தவறுகள், விடுதல்கள் இருந்தால் (இறைவன் மன்னிப்பானாக) சுட்டிக்காட்டும்படி கேட்டுக்
கொள்கிறேன்
சரியான விடை அனுப்பிய சகோ பாடி பீர், முனைவர் பாஷாவுக்கு வாழ்த்துகள் ,பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும்சிந்திப்போம்
28052021fri
Sherfuddin P
No comments:
Post a Comment