முத்திரை பதிப்போம் 10
ருத்ர முத்திரை
19112022 சனிக்கிழமை
குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கும் பதின்மர் பருவத்தினருக்கும் மிகவும் பயனுள்ள ருத்ர முத்திரை என்ற பெயரைப் பார்த்தால் சற்று அச்சம் ஏற்படும்
-எந்த மொழி, என்ன பொருள் எந்த மதம் சார்ந்தது - என்ற வினாக்களை ஒதுக்கி வைத்து விட்டு அதில் உள்ள நன்மைகளைத் தெரிந்து பயன்பெறுவோம்
முத்திரைகளின் பொதுவான நலன்கள் பற்றி பல முறை எடுத்துச் சொல்லியிருக்கிறேன்
இருந்தாலும் மீண்டும் ஒரு முறை சொல்வது ஒன்றும் தவறில்லை
முத்திரைகள் செய்ய மிக மிக எளிதானவை
உடலை வருத்தும் பயிற்சிகள் இல்லை
கருவிகள் எதுவும் தேவை இல்லை
மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லை
எனவே பொருட்செலவு, பக்க விளைவுகள் ஏதும் இல்லை
மிகக் குறைந்த நேரம் இயல்பான நிலையில் செய்யலாம்
சிறப்பு உடை கூட தேவை இல்லை
இவ்வளவு எளிமையான முத்திரைகளின் பலன்களோ வியப்படையச் செய்யும் அளவுக்கு பலப்பல
ருத்ர முத்திரையின் பயன்களைப் பார்ப்போமா !
குருதி ஓட்டம் , மூச்சு சீராகிறது
மயக்க நிலை,உடல் சோர்வு குறைகிறது
உணவுப் பழக்கத்தை முறைப்படுத்தி உடலுக்கு சக்தியும் வலிமையும் கொடுக்கிறது
குறைந்த குருதி அழுத்தம் (Low B P) சரியாகிறது
பார்வைத் திறன் கூடுகிறது
விரிசுருள் சிரை நோய் varicose veins சரியாகிறது
மனக்குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகிறது
மனச் செறிவு (Concentration ) அதிகரிக்கிறது
மன அழுத்தம் குறைகிறது
இவ்வளவு நலன்களும் தரும் ருத்ரா முத்திரை எப்படிச் செய்வது என்ன செய்ய வேண்டும் ?
பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்
உடலை தளர்வாக(relaxed) வைத்துக் கொண்டு வசதியாக உட்காருங்கள்
முடிந்தவர்கள் தெரிந்தவர்கள் வஜ்ராசனம் அல்லது பத்மாஸன நிலையில் இருக்கலாம்
முடியாதவர்கள் சுகாசனநிலையில் சம்மணம் கூட்டி உட்காரலாம்
அதுவும் முடியாவிட்டால் சோபா எனும் சொகுசு நாற்காலியில் உட்கார்ந்தும் செய்யலாம்
எந்த நிலையில் இருந்தாலும் உடல் தளர்வாக இருக்க வேண்டும்
முதகுத் தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர வேண்டும்
மூச்சு இயல்பாக இருக்க வேண்டும்
பெரும்பாலும் எல்லா முத்திரைகளுக்கும் இது பொருந்தும்
செய்முறை
பெருவிரல் ,(Thumb) ஆட்காட்டி விரல்(index finger , மோதிர விரல் (ring finger) மூன்றும் ஒன்றை ஓன்று மேல் நுனியில் தொட்டவாறு இருக்க வேண்டும்
மற்ற இரண்டு விரல்களும் (நடு விரல்,சுண்டு விரல் ) தளர்வாக நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்
அவ்வளவுதான்
இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்
ஐந்து ஐந்து நிமிடமாக ஒரு நாளைக்கு மூன்றில் இருந்து ஆறு முறை வரை செய்யலாம்
காலை,மாலை .இரவு என எப்போது வேண்டுமானாலும் , அலுவலகம் வீடு , என எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்
இடம் சற்று அமைதியாக இருக்க வேண்டும்
உங்கள் ம்ருத்துவத்துக்கோ , மருந்து மாத்திரைகளுக்கோ
முத்திரைகள் ஒரு மாற்று அல்ல
எனவே தகுந்த மருத்துவ அறிவுரை இல்லாமல் மருந்து மாத்திரைகளை நிறுத்தவோ குறைக்கவோ வேண்டாம்
இறைவன் நாடினால் மீண்டும் எப்போதாவது முத்திரை பதிப்போம்
நாளை வழமை போல் ஆங்கிலத்தில் சிந்திப்போம் இறைவன் நாடினால்
19112022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment