தமிழ் (மொழி) அறிவோம்
தூப்பாக்குழி
09112022புதன்
எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
ஆனால் வினா அதுவல்ல
எங்கள் காரைக்குடி, திருப்பத்தூர் வட்டார வழக்கில் இதற்கு ஒரு நல்ல தமிழ்ச் சொல் இருக்கிறது
“ழி “ இறுதி எழுத்தாக வரும் அந்தச் சொல் என்ன?
இதுவும் எளிதான வினாதான்
எங்கள் பகுதியைக் சேர்ந்த மூத்த குடியினர் அனைவருக்கும் விடை தெரிந்த்கிருக்கும்
எனவே நிறைய சரியான விடைகள் எதிர்பார்க்கிறேன்
விடை தூப்பாக்குழி
சரியான விடை எழுதி வாழ்த்து ,பாராட்டுப் பெறுவோர்
சகோ
சோமசேகர் – முதல் சரியான விடை
சிராஜுதீன்
தல்லத்
ஷர்மதா
விடைகள் பற்றி என் எண்ணங்கள்
ஓன்று எதிர் பார்த்த அளவுக்க நிறைய விடைகள் வரவில்லை
என்பதில் ஒரு சிறிய ஏமாற்றம்
அதை ஈடு செய்வது போல்புதுச்சேரியில் இருந்து எங்கள் வங்கிஓய்வூதியர் சகோ சோமசேகர் உடனே சரியான விடை அனுப்பியதில் மிக்க மகிழ்ச்சி
கரிசல் காட்டு இலக்கிய எழுத்தாளர் ராஜநாரயணன் வெளியிட்ட செட்டிநாட்டு வழக்குச் சொற்கள் பற்றிய தொகுப்பில் இந்தச் சொல்லைப் பார்த்தாக அவர் சொன்னார்
மேலும் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியிலும் இன்னும் சில செட்டி நாட்டு வட்டார வழக்கு தொகுப்பு நூல்களிலும் இந்தச் சொல் இடம் [பெற்றுள்ளது -
பொருள் –
சலதாரை
கழிவு நீர், மழைநீர் வெளியேறும் தாம்பு
சரியான விடை சொல்லாவிட்டாலும் ஆர்வத்துடன் முயற்சித்த
சகோ ராஜாத்தி, பன்னீர் & ஜோதிக்கு நன்றி
.
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
௦௯௧௨௦௨௨
09112022புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment