திரு மறை குரான்
11:10
11 11 2022 வெள்ளி
என்று கூறுகிறான்
பூரிப்பிலும் அகந்தையிலும் திளைத்தவனாக ஆகிவிடுகிறான்
இது குரானின் எந்தப்பகுதியில் வருகிறது ?
விடை
ஸுராஹ் ஹுத்(11) வசனம் 10
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி- முதல் சரியான விடை
சிராஜுதீன்
தல்லத்
ஷர்மதா
முழு வசனமும் அடுத்த வசனமும் :
- அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், --“என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன “
என்று கூறுகிறான்
பூரிப்பிலும் அகந்தையிலும் திளைத்தவனாக ஆகிவிடுகிறான்
ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு(.11:10,11)
இறை நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்வில் இன்பம் செல்வம் எல்லாம் நிலைத்து நிற்காது என்று நபிகள் எடுத்துரைக்க
அவரைக் கிண்டல் செய்து
நாங்கள் எவ்வளவு வசதியுடன் எல்லாவற்றின் மேலும் அதிகாரம் செலுத்தி வாழ்கிறோம் என்பதை நீங்கள் பார்த்த பின்பும் எங்களுக்கு துன்பம் வரும் என்று எண்ணுகிறீர்களா ?
என்று ஆணவத்தில் கூவுகிறார்கள்
அப்போது இறங்கிய வசனங்கள் இவை
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
16 ரபியுல் ஆஹிர் (4) 1444
11112022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment