தமிழ்( மொழி )அறிவோம்
சென்னைத் தமிழ் சோக்காகீறபா
16112022புதன்
சோக்காகீறபா
அழகாய் இருக்கிறாய் என்பதைக் குறிக்கும் இச்சொல் எந்த மொழியில் இருந்து வந்தது ?
(சகோ சவுந்தரராஜன் துரைசாமிக்கு நன்றி )
சரியான விடையைப் பார்ப்பதற்கு முன்
வந்த விடைகள்
சகோ
ஜோதி – உருது
தெ R சுந்தரம் –வடமொழி – ஜோர் என்ற சொல்லில் இருந்து
ஆ ரா விஸ்வநாதன் – பெர்ஷியன் மொழி
இவற்றை எல்லாம் விட
சகோ நஸ் ரீன் சொல்லிய விடை சரியாக இருக்கிறது
“சென்னைத் தமிழ்தானே “
அவர் எந்த அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ் என்பது சரியான் விடையாக அமைந்து விட்டது
சகோ நஸ் ரீனுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
முதல் சரியான விடை , ஒரே சரியான விடை
ஆம்
சோக்காகீறபா
என்பது ஒரு தமிழ்ச் சொல் என்கிறது ஒரு முகநூல் பதிவு
சொக்காக இருக்கிறாய் அப்பா
என்பதுதான் சென்னைத் தமிழ்,உச்சரிப்பில்
சோக்காகீறபா என்று உருமாறி பிற மொழிச் சொல் போல் ஒலிக்கிறது
சொக்கு = மயங்கச்செய்யும் அழகு
சொக்கன்= மனம் மயங்கவைக்கும் அழகுள்ளவன்
சொக்கம் – அழகின் தூய்மையைக் குறிப்பது – சொக்கத் தங்கம்
சொக்கு என்றால் மயங்கச்செய்யும் அழகு.
மனம் மயங்கவைக்கும் அழகுடையோன் என்னும் பொருள்படும் பெயர்ச்சொல்தான் சொக்கன். .
அழகின் தூய்மையைக் குறிப்பதுதான் சொக்கம். அத்தகைய தன்மையுடையதுதான் சொக்கத்தங்கம்.
பேச்சு வழக்கில்
சொக்கிப் போய்ட்டான் என்றும் சொக்குப்பொடி என்றும் சொல்கிறோம்
தமிழ் முகநூல் குழுவில் இந்த செய்தியை பதிவு செய்த அதன் நிர்வாகி
சகோ சவுந்தரராஜன் துரைசாமிக்கு மீண்டும் நன்றி
பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் நாளை திரு மறையில் சிந்திப்போம்
௧௬௧௧௨௦௨௨
16112022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment