தமிழ் (மொழி ) அறிவோம்
குறள்500 இடனறிதல்
23112022 புதன்
அது என்ன குறள், ஏன் பேசப்பட்ட்து ?
விடை,
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
பால்: பொருட்பால்
அதிகாரம்/ இடனறிதல் /
குறள் 500:
நீதியரசர் ஆறுமுகசாமி அறிக்கையின் நிறைவுப் பகுதியாக வந்தது
இடனறிதல் என்ற சொல்லுக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது நீதியரசரின் பயன்பாடு
பல பக்கங்களில் சொல்ல வேண்டிய செய்திகளை மனம் திறந்து சொல்ல முடியாத உண்மைகளை
இந்த ஒன்னரை வரியில் சொல்லி தன் மனப்பாரத்தை இறக்கி வைத்து தனது இலக்கியத் திறனையும் ,ஆளுமையை யும் வெளிக்காட்டியிருக்கிறார் நீதியரசர்
நேரடியாகப் பொருள் என்று பார்த்தால்
கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டால் நரியும் வீழ்த்திவிடும் வேல்கண்டும் அஞ்சாதுப் போரிட்ட யானையை
அவ்வளவுதான்
ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால் சொற்கள் சொல்லும் ஆழமான கருத்துக்களும் கதைகளும் விளங்கும்
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
செங்கை A சண்முகம் – முதல் சரியான விடை
நௌஷாத்
அஷ்ரப் ஹமீதா
முயற்சித்த சகோ இதயத் , சுராஜ் இருவருக்கும் நன்றி
தமிழே அறியாதவர்களின் பெயர் குறள் என்றதும் நினைவில் வருவது ஒரு கசப்பான உண்மை
என்ன செய்வது !
நல்லவை எளிதில் மனதில் பதிவதில்லை
மருந்து அதிகாரத்தில் வரும் நோய் நாடி என்ற குறளும் அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
௨௩௧௧௨௦௨௨
23112022 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment