நயத்தக்க நபித் தோழர்கள் –12
ஸாபித் பின் கைஸ் ரலி
(சுருக்கமாக கைஸ்)
அதிகமாக தெரியாத சஹாபாக்கள் எனும் நபித் தோழர்கள் 11 பேர் பற்றி இது வரை பார்த்தோம்
அந்த வரிசையில் இன்று
கைஸ்
பற்றிப் பார்ப்போம்
“சுவனம் நிச்சயிக்கபட்டவர்”
என நபியின் திரு வாயால் ஒரு முறை அல்ல பலப்பல முறை சுட்டிக்காட்டப் பட்டவர்
மிக நல்லவர் என்றும் நபியால் அழைக்கப் பட்டவர
அப்படி சிறப்பாக என்ன செய்தார் அவர் ?
உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது எல்லா மதங்களும் ,நீதி நூல்களும் வலியுறுத்திச் சொல்லும் தருமம்
மூன்று நாட்கள் விருப்ப நோன்பு நோற்ற ஒருவருக்கு சரியான உணவு கிடைக்கவில்லை
அவரிடம்
“கையஸ் வீட்டுக்குப் போ அவர் உனக்கு உணவு கொடுப்பார் “
என்று யாரோ சொல்ல இந்த செய்தி கையஸ் காதுக்கு எட்டியது
உடனே வீட்டுக்கு வந்த அவர் துணைவியிடம் சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்க .
அவர் பிள்ளைகளுக்கு மட்டும் உணவு இருக்கிறது
என்கிறார்
கையஸ் “ இரவு ஒரு விருந்தாளி வருகிறார் .
பிள்ளைகளைத் தூங்க வைத்து விடு
விருந்தாளிக்கு உணவு பரிமாறி விட்டு விளக்கை அணைத்து விடு
அவர் வயிறார சாப்பிடட்டும் “
என்கிறார்
அதே போல் வந்த விருந்தாளி வயிறார உண்ண, வீட்டில் அனைவரும் பசியோடு உறங்கிவிட்டார்கள்
இதை அறிந்த நபி அவர்கள் “ நீங்கள் செய்த செயலால் இறைவன் மகிழ்ச்சி அடைந்தான், சிரித்தான் “என்று கையசிடம் சொன்னார்கள்
அப்போது இந்த இறை வசனம் இறங்கியது
“தங்களுக்குத் தேவை இருந்தபோதிலும்
தங்கள் பொருள்களை அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்கிறார்கள் .
இவ்வாறு யார் கஞ்சத் தனத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள் “ சுராஹ் அல் ஹஷ்ர் (39:9)
இந்த ஒரு நிகழ்வு போதும் கையசின் சிறப்பை எடுத்துச் சொல்ல !
அவர் பற்றிய மற்ற சில செய்திகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்
நபிகள் மதினா வரும் முன்பே இஸ்லாத்தில் இணைந்து நபியின் வருகையை எதிர் நோக்கி நின்றவர்
:இஸ்லாமியப் பேச்சாளர்,’ “நபி அவர்களின் பேச்சாளர் “ என்று வரலாற்றில் இடம் பெற்றவர்
உரத்த குரல், தெளிவான உச்சரிப்பு , நல்ல சொல்லாற்றல்- இவரின் சிறப்புகள்
நபி அவர்களை சந்திக்க வந்த குழுவில் இருந்த ஒரு பேச்சாளர்
தம் பனூ தமீம் குலப் பெருமை பற்றிப் பேசினார்
இதற்கு மறு மொழி சொல்லுமாறு நபி அவர்கள் கையசிடம் சொல்ல
அவர்
இறை தூதர், இஸ்லாமின் சிறப்புகளை உயரிய இலக்கிய நடையில் மிகத் தெளிவாக எல்லோரும் பாராட்டும்படி எடுத்துரைத்தார்
கையஸ் வீட்டில் ஒரு நாள் இரவு வெகு நேரம் விளக்கு வெளிச்சம் தெரிந்ததாக நபியிடம் வந்து சில தோழர்கள் சொல்கிறார்கள்
அதற்கு நபியவர்கள் “அல் பகரா சூராவை ஓதிக்கொண்டிருந்திருப்பார் “ என்று சொல்கிறார்கள்
இது பற்றி கையசிடம் கேட்க அவர் ‘அல் பகரா சூரர ஓதிக்கொண்டிருந்தேன் “ என்கிறார்
இந்த அளவுக்கு நபியின் மனதில் இணைந்த கையஸ்
பல நாட்களாக நபியை சந்திக்க வரவில்லை
ஏன் என்ற கேள்விக்கு விடை , மற்ற செய்திகள் இறைவன் நாடினால் அடுத்த வாரம் இதே நாளில்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
05112022 சனிக் கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment