நயத்தக்க நபித் தோழர்கள் –12/2
ஸாபித் பின் கைஸ் ரலி
(சுருக்கமாக கைஸ்)
12112022 சனிக்கிழமை
சென்ற பகுதியை நிறைவு செய்ய
“இந்த அளவுக்கு நபியின் மனதில் இணைந்த கையஸ்
பல நாட்களாக நபியை சந்திக்க வரவில்லை
ஏன் என்ற கேள்விக்கு விடை , மற்ற செய்திகள் இறைவன் நாடினால் அடுத்த வாரம் இதே நாளில் “.
என்று எழுதிஇருந்தேன்
உடனடியாக
“இறைவசனம்தான் “ என்று சொல்லி இறை வசனம் 49::2என்று விடை அனுப்பிய
சகோ ஹசன் அலிக்கு நன்றி, வாழ்த்துகள் பாராட்டுகள்
எழுதுவது என் மன திருப்திக்குத்தான்
இருந்தாலும் இப்படிப்பட்ட உடனடி விடைகள்தொடர்ந்து எழுத ஊக்கமளிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை
இனி கைஸ் பற்றி:
கைஸுக்கு மிகவும் உரத்த குரல் என்று பார்த்தோம்
நபி பெருமானிடம் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றி
சுராஹ் 49 அல் ஹுஜூரத் , 2 முதல் 5 வரை உள்ள வசனங்களில் இறைவன் எடுத்துச் சொல்கிறான்
குறிப்பாக வசனம் 2
நபிஸல் அவர்கள் முன் யாரும் குரலை உயர்த்திப் பேசக்கூடாது
என்கிறது
நாம் உரத்த குரலில் பேசினால் இறை கட்டளையையும் நபி பெருமானையும் மதிக்காத பெரும் பாவத்த்திற்கு ஆளாகி விடுவோம் என்ற அச்சத்தில் , கவலையில் நபி ஸல் அவர்களின் சபைக்கு வருவதை தவிர்த்தார் கைஸ்
இறை வசனங்களையும் நபி மொழியையும் பின்பற்றி நடப்பதில் அப்படி ஒரு மன உறுதி
இதை அறிந்த நபி அவர்கள்
கைசுக்கு சுவனம் உறுதி ஆகிவிட்டது என்று சொல்லுங்கள் என்று செய்தி அனுப்பினார்கள்
இப்படி பல்வேறு நிகழ்வுகளில் பலமுறை நபி ஸல் அவர்கள் வாயால் சுவனம் உறுதி ஆக்கப்பட்டவர் என்றம் நல்லவர் என்றும் சொல்லப்பட்ட கைஸ்ஸின் வீரமரணம் ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு
“நீ இறைவனின் வழியில் போர் புரிந்து ஷஹிதாக – வீரத் தியாகியாக மரணம் அடைவாய் “
என்று நபி ஸல் அவர்கள் கைஸ்ஸிடம் சொன்னார்கள்
அதை மனதில் ஆழமாகப் பதிவு செய்து வைத்திருந்த கைஸ்
போர் புரிய வாய்ய்ப்புக் கிடைத்ததும் அந்தத் தியாகத்துக்கு ஆயத்தமான நிலையில் போர்க்களம் போனார்
- உடல் முழுதும் நறுமணம் பூசிக்கொண்டார்
- உடலத்துக்கு அணியப் படும் கபன் துணி போ;ல மேலாடை ஒன்றும் கீழாடை ஒன்றும் அணிந்து கொண்டார்
இதற்கெல்லாம் மேல் எந்த நிலையிலும் போர்க் களத்தை விட்டு ஓடி விடக்கூடாது என்பதற்காக
தன் கணுக்கால் வரை பள்ளம் வெட்டிக்கொண்டு அதில் நின்று
போர்புரிந்தார்
இந்த நிலையில் போரை எதிர்கொள்ள முடியாமல் சில முஸ்லீம் வீரர்கள் புற முதுகு காட்டி ஓடுவதை அறிந்த கைஸ் தன்உரத்த குரலில் வீர் உரை நிகழ்த்தி அவர்களைத் திரும்ப வரச் செய்தார்
இப்படி வாழ்ந்த வரை சிறப்பாக வாழ்ந்த கைஸ் தான் விருபியபடி இறைவன் நாட்டத்தால் போரில் வீர மரணம் அடைந்து ஷஹித் என்னும் உயர் நிலையை அடைந்தார்
ஷஹித் ஆனவர்கள் மரணிப்பதில்லை அவர்கள் இறைவனின் கண்காணிப்பில் உயிர் வாழ்கிறார்கள் என்கிறது திருமறை (3:169)
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
012112022 சனிக் கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment