Thursday, 24 November 2022

திருமறை குர்ஆன் 24 :27

 திருமறை குர்ஆன்

24 :27
25112022 வெள்ளி
"மற்றவர்கள் வீடுகளில் அவர்கள் அனுமதி பெற்று அவர்களுக்கு(ஸலாம்)சொல்லாதவரை நுழைய வேண்டாம் ,
இந்தக் கருத்து உள்ள வசனம் குரானில் எங்கு வருகிறது?
விடை
சுராஹ் 24 அந்நூர் –(உலகின்) ஒளி- வசனம் 27
நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) நுழையாதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
சரியான விடை அனுப்பி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் முதல் சரியான விடை
ஹசன் அலி
சிராஜுதீன்
பீர் ராஜா
ஷிரீன் பாருக்
அஷரப் ஹமீதா
ஷர்மதா
ஷேக் பீர்
ஆர்வத்துடன் கருத்துத் தெரிவித்த
,சகோ
கௌரி சங்கர் , DR சுந்தரம் இருவருக்கும் நன்றி
விளக்கம்
Etiquettes எனப்படும் ஒழுக்க நெறிகள் பற்றி பல நுணுக்கமான செய்திகள் இறையாணையாக திருமறையில் பல இடங்களில் வருகின்றன
சலாம் எப்படிச் சொல்ல வேண்டும், அதற்கு மறுமொழி என்ன சொல்வது
உணவு நேரத்தில் அழைப்பில்லாமல் ஒரு வீட்டுக்குப் போவது
, அழைப்பு இருந்து உணவுக்குப் போனால் சாப்பிட்டுவிட்டு அழைத்தவருக்கு சிரமம் இல்லாமல் உடனே கிளம்புவது
இப்படி எண்ணற்ற செய்திகள் திருமறையில் வருகின்றன
இது பற்றி தனியாக ஒரு பதிவு பின்னால் இறைவன் நாடினால் போடுகிறேன்
இப்போது இந்த ஒரு வசனம் , அதற்குள்ள விளக்கம் பற்றி சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன்
இந்த வசனத்துக்கு உள்ள வரலாற்றுப் பின்னணி பற்றியும் இப்போது வேண்டாம்
சுருக்கமாகச் சொல்வதென்றால் ஆண் பெண் உறவுகளில் உள்ள சீர்கேடுகளைக் களைவதே இந்த வசனத்தின் நோக்கம்
“மதியாதார் தலை வாசல மிதிக்க வேண்டாம் “ என்று சிலர் தெரிவித்த கருத்து ஓரளவு சரி எனலாம்
இந்த வசனததில் பயன்படுத்த பட்ட tastanisu என்ற அரபுச் சொல் அனுமதியை மட்டுமல்லாது ஒப்புதலையும் குறிக்கிறது
அதாவது ஒருவரது வருகை அந்த வீட்டினருக்கு சிரமம் கொடுப்பதாய் இருக்கக் கூடாது
Privacy எனப்படும் ஒருவரின் தனி உரிமையில் யாரும் தலை இடக்கூடாது என்பதே இந்த வசனத்தில் வலியுறுத்தப்படும் கருத்து
அந்த அடிப்படையில் பிறர் வீட்டுக்குள் எட்டிப்பார்ப்பது ,பிறருக்கு வந்த கடிதங்களை அனும்தியின்றி படிப்பது
பிறர் வீட்டு வாசலுக்கு நேராக நின்று அழைப்பது (ஒரு ஓரமாக நின்றுதான் அழைக்கவேண்டும் )
பிறர் பேச்சை ஒட்டுக் கேட்பது இவை எல்லாம் குற்றங்கள், பாவங்கள்
பிறர் வீடு என்பது பெற்ற தாய், உடன் பிறந்த சகோதரி எல்லோர் வீடுகளுக்கும் பொருந்தும்
இன்னும் சொல்லப்போனால் துணைவியின் இல்லம்/ அறைக்குப் போகும் முன் ஒரு செருமல் போன்ற ஒலியிலாவது தெரிவிக்க வேண்டும்
ஒரு அவசரம், விபத்து என்று உதவிக்குப் போவதற்கு மட்டுமே இந்த விதிகளில் இருந்து விலக்கு
மூன்ற முறை அழைத்தும் மறுமொழி இல்லை என்றால் திரும்பிப் போய்விட வேண்டும்
வீட்டின் தலைவன் போன்ற பொறுப்பானவர்களே அனுமதி கொடுக்க வேண்டும்
(Source Towards understanding The Quraan)
சற்று நீளமான பதிவுதான்
சொல்ல வந்ததை ஓரளவு தெளிவாக, விளக்கமாகச் சொல்ல வேண்டுமே
(சில அரபு நாடுகளில் கைது செய்ய வரும் காவல் துறையினர் கூட சலாம் சொல்லி விட்டு , கை குலுக்கி விட்டு பிறகுதான் கைது செய்வார்களாம் )
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
30 ரபியுல் ஆகிர் (4)1444
25112022 வெள்ளி
சர்புதீன் பீ
May be an image of monument and text
7 shares
Like
Comment
Share

No comments:

Post a Comment