Thursday, 3 November 2022

தமிழ் மொழி அறிவோம் கறி வளர் சாந்தம் சந்தன மரத்தில் படர்ந்த மிளகுக்கொடி

 தமிழ் மொழி அறிவோம்

02112022புதன்
கறி வளர் சாந்தம்
"கறி வளர் சாந்தம்"
பொருள்
விளக்கம் என்ன?
பொருள்
கறி=மிளகு
சாந்தம் =சந்தனம்
சந்தன மரத்தில் படரும் மிளகுக்கொடி என்பது பொருள்
சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
நிலோபர் (சுராஜ்) முதல் சரியான விடை
சிராஜுதீன், சோமசேகர்,
ஹசன் அலி , அஷ்ரஃப்ஹமிதா
தல்லத், சிவ பழனி சாமி
செல்வகுமார்,& ,ஷர்மதா ,
முயற்சித்து மிளகு என்று பாதி விடை அனுப்பிய
சகோ
மி மு இஸ்மாயில்
&
ராஜாத்திக்கு
நன்றி
விளக்கம்
சங்க இலக்கியமான
அகநானூறு" நூலில்
குறிஞ்சி நிலததின் இயற்கை அழகு பற்றிப் புலவர் கபிலர் எழுதிய பாடலின் பொருள்:4
வாழையின் பெரிய சுவையான கனிகளும், வெடித்த பலாவின் முற்றிய சுளைகளும் அங்குள்ள பாறையிலமைந்துள்ள பெரிய சுனையில் விழுந்து தேன் போன்ற தடாகத்தை
உண்டாக்குகின்றன.
ஆண் குரங்கொன்று தேன் போன்ற அத் தண்ணீரை அருந்த, அதற்குத் தேனை உண்ட மயக்கம் ஏற்படுகிறது.
அருகிலிருந்த மிளகுக் கொடிகள் படர்ந்த சந்தன மரத்தில் அக் குரங்கு ஏற முற்படுகிறது. ஆனால் தேனுண்ட மயக்கத்தால் அதனால் எற முடியாமல், அம் மர நிழலின் கீழ் சொரிந்து, படுக்கை போலமைந்திருந்த மலர்களில் (சந்தன மரத்தின் கீழே விழுந்திருக்கும் மலர்களென்பதால் அவை சந்தன மலர்களாகத் தானிருக்க வேண்டும்) அக் குரங்கு மகிழ்ந்து, உறங்கியது
கேட்பாறற்றுக் கிடக்கும் வாழை, பலாப்பழங்கள்
இயற்கை எழிலோடு செல்வச் செழிப்பையும.எடுத்துக் காட்டுகின்றன
பாடல் இதோ
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
இப்படி குறிஞ்சி நிலப் பெருமையை விவரித்த பின்
அகப்பொருள் வருகிறது:
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள்ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
சங்க இலக்கியம் என்றாலும் பொருள் தெளிவாக விளங்கும் பாடல்
கோழ் - செழுமையான;
கோள் - வாழைத் தாரில் உள்ள பழச் சீப்புகள்;
ஊழுறு - நன்கு பழுத்துக் குழைந்துபோன;
ஊழ்படு - பதம் கனிந்து;
தேறல் - தெளிந்த மது;
கடுவன் - ஆண்குரங்கு;
கறி - மிளகுக்கொடி;
சாந்தம் - சந்தன மரம்;
வீ அடுக்கம் - பூக்களின் அடுக்கிவைப்பு;
கண்படுக்கும் - உறங்கும்; வெறுத்த - மிகுதியான;
ஏஎர் < ஏர் - அழகு;
வேய் - மூங்கில்;
பணை - பருத்த;
கடி - காவல்;
சோர்பதன் - காவல் நெகிழ்ந்திருக்கும் தக்க தருணம்;
ஒற்றி - மறைவாக நின்று ஆய்ந்து;
கங்குல் - இரவு;
பைம் - பச்சையான;
புதல் - நெருக்கமான செடிகொடிகள்;
வேங்கை - வேங்கை மரம் இணர் - பூங்கொத்து;
ஊர்கொண்டன்றே - ஒளிவட்டம் சூழப்பெற்றிருக்கிறது
பாடலுக்கான பின்புலம் :
மலைச்சரிவில் (சாரல்) ஒரு சமதளத்தில் அமைந்திருக்கும் குடில்கள். அவற்றுக்கு வெளியே சற்றுத் தள்ளி, மலைக்காட்டை
அழித்து அமைக்கப்பட்ட ஒரு தினைப்புனம்.
பாடல் தலைவியின் தந்தைக்குச் சொந்தமானது.
அங்கு விதைக்கப்பட்ட தினை வளர்ந்து கதிர்விட்டு,
அதுவும் முற்றி அறுவடைக்குத் தயாராக இருக்கிறது. தினை கதிர்விட்ட உடனே குருவி, கிளி போன்ற காட்டுப் பறவைகள் கதிர் மீது அமர்ந்து
அதைக் கொத்தித் தின்ன வரும். அவற்றை விரட்ட நம்பிக்கையான ஆள் வேண்டும்.
அது மணமுடிக்காமல் வீட்டிலிருக்கும் இளம்பெண்களின்
பொறுப்பு.
நம் தலைவியும், தன் தோழிகளுடன் தினைப்புனம் காக்கத் தினமும் வந்துகொண்டிருக்கிறாள்.
அப்போது ஒருநாள் தலைவன்
அந்தத் தினைப்புனம் வழியே வருகிறான். அவன்தான் நம் தலைவன். ‘காதல் அரும்புகிறது. அவன் ஒவ்வொரு நாளும் அந்தப் பக்கம் வர ஆரம்பிக்கிறான்.
இவ்வாறு அவர்கள் ஊ
காதல் வாழ்வு இனிமையாகக் கழிய, அறுவடைக் காலமும் வந்துவிடுகிறது. தலைவனோ காதல் மயக்கத்தில் வேறொன்றையும் பற்றி நினைப்பதாகத்
தெரியவில்லை. அறுவடை முடிந்துவிட்டால், பின்னர் இற்செறிப்புத்தான். அதாவது, தலைவி வீட்டை விட்டு வெளியில் வர முடியாது.
அதை எண்ணிய தலைவியின் முகம் வாட்டமுற்று இருக்கிறது. அதைக் கண்ட தலைவன் அதற்குக் காரணம் கேட்கிறான். தலைவிக்குப்
பேச நா எழவில்லை. அவள் சார்பாகத் தோழி தலைவனை நோக்கிக் கூறுவதுதான் இப்பாடல்.
இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி
வந்துவந்து போய்க்கொண்டிருக்கப்போகிறாய்?
விரைவில் மணம் முடிக்கும் வழியைப் பார்” தோழி தலைவனிடம் சொல்வதை
வரைவு காடாவியது
என அகத்திணை இலக்கணம் கூறுகிறது.
அறுவடை முடிந்துவிட்டால்,
தலைவியை வீட்டிலேவைத்து அடைத்துவிடுவார்கள் என்று கூறுவதையே,
செறிப்பு அறிவுறீஇ
என்கிறது இலக்கணம்.
செறிப்பு என்பது
இற்செறிப்பு (containment in house).
பகல்குறி என்பது பகலில் வந்து சந்திப்பது.
இன்னும் நிறைய எழுதலாம் இந்த ஒரு பாடல் பற்றி
அந்த அளவுக்கு இலக்கண விதிகளுக்கு உட்பட்டு இலக்கியச் சுவை நிறைந்தது
இது
நேரம்.நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்
02112022புதன்
சர்புதீன் பீ
May be an image of food
3 shares
Like
Comment
Share

No comments:

Post a Comment